ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளுளுக்கு, குப்பை வரியை முற்றிலும் ரத்து செய்து, சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். வீட்டு வரியும் 25 சதவீதம் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்து பேசியதாவது:

  • பாகூரில் பஸ் நிலையம் புதுச்சேரி நகராட்சி சார்பில்,
  • 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அகற்றும் வாகனம்,
  • 3 நடமாடும் கழிவறைகள் வாங்கப்பட உள்ளது.
  • பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ரூ. 2 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்படும்.
  • கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், கரையாம்புத்தூரில் சிறிய பஸ் நிறுத்தம் அமைக்கப்படும். பாகூரில் பஸ் நிலையம் அமைய உள்ள பகுதியில் ரூ. 2 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது,
  • வில்லியனுார் நகர பகுதியில் மார்க்கெட் வளாகம் கட்டப்பட உள்ளது.
  • காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில், கழிவு நீர் கசடு நீக்கும் மேலாண்மை திட்டம் ரூ. 5 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • குப்பை வரி ரத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை அகற்ற வரி போட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும் இந்த வரி போடப்பட் டுள்ளது, கட்டாயத்தினால்தான் குப்பை வரி போடப்பட்டது.
  • எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், ஆயிரம் சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளுக்கு விதிக்கப்பட்ட குப்பை வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • 2000 சதுர அடி வரை மாதம் 50 ரூபாய்,
  • 2000 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுகக்கு ரூ. 100 என வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது நடைமுறையில் உள்ள 2017-18ம் ஆண்டில், உயர்த்தப்பட்ட வீட்டு வரி விதிப்பில் உரிமையாளர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருக்கும் வீடுகளுக்கு, தற்போதைய வரியில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கிராம பஞ்சாயத்தில் பணியாற்றி வரும் 126 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அக்- 2ம் தேதியில் இருந்து உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
  • காரைக்கால் ஆணையர்களின் அதிகாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான நிதியும் வழங்கப்படும்.
  • பொதுப்பணித்துறை மூலமாக 143 வேலைகள் அரைகுறையாக இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கையால் 33 வேலைகள் முடிக்கப்பட்டு விட்டது, மீதமுள்ள வேலைகளும் விரைவில் முடிக்கப்பட்டு விடும்.
  • வவுச்சர் ஊழியர்கள் படிப்படியாக தினக்கூலி ஊழியர்களாக மாற்றப்படுவர்.
  • குடிநீர் கட்டணம் குறைப்பு, குடிநீர் கட்டணம் ஆயிரம் லிட்டர் 3 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக குறைக்கப்படும்.
  • பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணி இடங்கள் 2 வாரத்திற்குள் நிரப்பப்படும்.
  • மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை பருவமாற்ற நிதியின் மூலமாக காரைக்கால் பகுதியில் போலகம் (வடக்கு), போலகம் (தெற்கு), படுதார் கொல்லை, ஆகிய மூன்று இடங்களில் 3 ஏரி அமைக்கவும்,
  • கிராம குளங்களை சீரமைக்கவும் ரூ. 20 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்திரா சதுக்கத்தில் பாலம்,
  • கடலூர் சாலையில் ஏ.எப்.டி மில் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
  • போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்திராகாந்தி சதுக்கம் அருகே மத்திய போக்குவரத்துத்துறை நிதியுதவியுடன் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஜிப்மர், ராஜிவ்காந்தி மருத்துவமனை அருகே பாதசாரிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
  • சங்கராபரணி ஆரியபாளையம் மேம்பாலம் அருகே புதிய இணைப்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
  • காமராஜர் மணிமண்டபம் இந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
  • முத்தியால்பேட்டை முதல் இ.சி.ஆர் வரை ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • நகர மற்றும் கிராம அமைப்பு சார்பில், ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கப்பட உள்ளது.
  • முதல் தளம் வரை அனுமதி வழங்க உள்ளாட்சித்துறைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அசையா சொத்து அதிகார அமைப்பு புதுச்சேரியிலேயே அமைக்கப்படும்.
  • மாஸ்டர் பிளான் அக்டோபர் மாதம் இறுதி வடிவம் வெளியிடப்படும்.
  • காரைக்கால் பகுதிக்கு 2019 டிசம்பரிலும், மாகே மற்றும் ஏனாம் பகுதிக்கு 2019 ஜூன் மாதம் செயல்படுத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகள் அனைத்தும் 13-07-2018ல் வெளியிட்ட அறிவிப்புகளாகும், இவற்றில் எவை நடந்தன? எவை நடக்கவில்லை? ஏன் நடக்கவில்லை என்று உண்மையான சமூக ஆர்வலர்கள் களமிறங்க வேண்டும். 

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2060411&Print=1

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »