பஞ்சாபில், காங்கிரசை சேர்ந்த முதல்வர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், லப் சிங் உகோக்கின் தாயார், ஒரு அரசு பள்ளியில் துப்புரவு பணியாளராக தற்போது வேலை பார்த்து வருகிறார்.
பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளில் 92 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசை சேர்ந்த சரண்ஜித் சிங் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வியை தழுவினார்.
பதாவுர் சட்டசபை தொகுதியில் சரஞ்சித்துக்கு எதிராக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் லப் சிங் உகோக் 37550 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இவரது தாய் பல்தேவ் கவுர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இதே பள்ளியில்தான் லப் சிங்கும் படித்துள்ளார். தேர்தலில் தன் மகன் வெற்றிபெற்ற நிலையிலும், பல்தேவ் பவுர் வழக்கம் போல துப்புரவு பணிக்கு செல்கிறார்.
பதாவுரில் மொபைல் போன் கடையில் வேலை பார்த்து வந்த லப் சிங் 2013ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கடுமையான உழைப்பால் உயர்ந்தார். இவரது தந்து தர்ஷன் சிங் கூலி வேலை பார்த்து வருகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் கூறிய சிந்தனையும், நேரிய பார்வையும், ஒரு யாசகனை கூட வெற்றிப்பாதையில் செலுத்தும்.
