புதுச்சேரியில்… பல பிரச்சினைகள் தீர்க்க படாமல் உள்ளன….
பல பிரச்சினைகள் கண்டுகொள்ள படாமல் உள்ளன…
இவற்றை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியது சமூக கடமை மட்டும் ஓட்டு போட்ட அந்த மக்களும் ஆளும் அரசை கேள்வி கேட்க வைப்பது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்…
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசின் காலிப் பணியிடங்கள் சுமார் 10000 மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன… அதாவது சுமார் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசுப் பணியில் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால்… மக்களுக்கு அரசு அலுவலகத்தில் அலையும் நிலை ஏற்படுகிறது……
ஸ்மார்ட் சிட்டி திட்டம்… ரூ 1800 கோடி திட்டம்…
இது தேவையற்ற திட்டம்…
ஆடம்பர திட்டம் இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது…
2017 ல் ஆரம்பிக்கப்பட்டு 2021 ல் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்…
ஆனால் இது வரை இரண்டு பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டது…
வரதராஜப்பெருமாள் கோயில்.. வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக செய்து ஆட்சியாளர்கள் புண்ணியத்தை தேடிக் கொண்டதோடு சரி…
சுமார் 126 கோடி ஒரு தேசிய வங்கியில் குறட்டை விட்டு தூங்குகிறது….
சிறப்பு பொருளாதார மண்டலம் இதற்காக 350 ஏக்கர் நிலம் எடுக்க பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல ஆகிறது…
மேற்கொண்டு எந்த செயல்பாடும் இல்லாமல் கோமா நிலையில் உள்ளது….
பாதாள சாக்கடை திட்டம்…
காமராஜர் மணி மண்டபம்..
பொதுப்பணித்துறை யில் பல வேலைகள்… கிடப்பில் உள்ளன….
தணிக்கை அறிக்கையில் ரூ 1104 கோடி நிலுவைத் தொகை வசூலிக்க வேண்டியதாக காட்டியுள்ளது….
அதை வசூலிக்க நடவடிக்கை இல்லை….
கேபிள் வரி… வசூலிக்க படவில்லை.. வழக்கு நிலுவை காரணமாக அப்படி அந்த பணி ஸ்தம்பித்து நிற்கிறது….
பஞ்சாலைகள்… கூட்டுறவு நூற்பாலைகள்.. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்…
தொழிற் பேட்டைகள்..
பாரம்பரிய தொழில்கள்.
கூட்டுறவு நிறுவனங்கள்
அரசு சார்பு நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்து போயுள்ளன,
. இதற்கு ஆன தீர்வு கான எந்த ஒரு விரைவு நடவடிக்கைகள் இல்லை…
விளம்பர அறிவிப்புகள்..
தலைப்பு செய்திகள்…
இப்படியே ஒரு அரசு செயல்படு மானால்…
இதில் வளர்ச்சி எப்படி கான முடியும்….
மக்களிடம்… இந்த செய்திகளை கொண்டு செல்வதின் மூலம் விழிப்புணர்வை கொண்டு வர முடியும்….
இறுதியாக….
மாநில தகுதி பிரச்சினை..
13 சட்டமன்றத் தீர்மானங்கள்…
அனுப்பியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை…
நிதிப்பற்றாக்குறை அப்படியே நீடிக்கிறது…
அது தொடர்பாக ஆட்சியாளர்கள் கவலைப் பட்டதாக தெரியவில்லை…..
தற்போது 11000 கோடி வரை மத்திய அரசுக்கு கடனாக தரவேண்டி உள்ளது……
முக்கிய மாக கவனத்தில் கொள்ள வேண்டியது…
வருவாயை பெருக்க… கிராம நகர பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவோ எந்த ஒரு உருப்படியான திட்டமோ இல்லை….
உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த இவர்களால் முடியவில்லை….
இதை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்….
ஆம் ஆத்மி கட்சி… மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது இரண்டு முக்கிய பணிகள்….
ஒன்று …ஊழலை ஒழிப்பது…
இரண்டு…
சேவை உரிமை பெறும் சட்டத்தை அமல் படுத்துவது.
.
ஊழலை ஒழிப்பது எப்படி…
ஊழல் எப்படி நடக்கிறது… தொடரும்
தொகுப்பு: திரு ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மி கட்சி)