மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு.

அரசு அதிகாரிகள் சரியாக பணி புரிய வில்லை என்று சொன்னது நூறு சதவீதம் உண்மை. தலைமை செயலர் பொறுப்பாக தனது பணியை ஒழுங்காக செய்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

தங்களது கவனத்திற்கு, மூன்று அரசாணைகளை கொண்டு வருகிறோம்.

  • ஒவ்வொரு துறையும், தான் பெறும் புகார்களை 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
  • தலைமை செயலகத்திற்கு , வந்த புகார்மீது  இறுதி முடிவு எடுக்க  7 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

இதற்கு அரசாணை உள்ளது.  (அரசாணை எண் 47809/98/DPAR/SS.l(1) dt 19.8.98) Download

G.O. 10 days & 7 days

முதலில் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போன்று.

  • ஒவ்வொரு துறை இயக்குநரும், தினமும் ஒரு மணி நேரம் பொதுமக்களை சந்திக்க வேண்டும். புகார்களை பெற்று அன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதப்படுத்த கூடாது
  • துறை செயலர், வாரம் இரண்டு மணி நேரம் பொதுமக்களை சந்திக்க வேண்டும். பெறப்படும் புகார்களை உடனடியாக தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தலைமை செயலர் அடங்கிய குழு மாதம் ஒரு முறை கூடி தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்

அரசாணை எண்( G.O. Ms 4 /2010/A2/ARW dt 12.8.2010 ) Download

Ms 4 2010A2ARW dt 12.8.2010 ARW-public grievances

ஆக ஒரு மாதத்துக்குள் பிரச்னைகளை முடிக்க அரசானை இருக்கிறது.

  • ஒவ்வொரு துறையும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூட வேண்டும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை அறிக்கை தயாரித்து, தலைமை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த குழு மாதம் ஒரு முறை கூடும் போது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கும் அரசாணை உள்ளது. G O Ms No 3 /2012/A2/ARW dt 31.12.2012. Download

G O Ms No 3 2012A2ARW dt 31.12.2012.

 

இவற்றை நடைமுறை படுத்தினாலே அரசு அலுவலகங்கள் முறையாக சரியாக இயங்கும். அப்படி அரசாணை படி நடக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் உங்கள் கவனத்திற்கு, மேலான நடவடிக்கை எடுப்பதற்கு சில தகவல்கள்.

2019-2020 தணிக்கை அறிக்கை குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ 1101.4 கோடி. இதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசூலாக வேண்டிய தொகை ரூ 517 கோடி. மேலும், வணிக வரித்துறை, கருவூலத்துறை, தலைமை செயலரின் கீழ் இயங்கும்  விஜிலென்ஸ்., ஆகியவற்றில் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க படாமல் உள்ளன.

மேலும் பல திட்டங்கள், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டம், 2017 ல் ஆரம்பித்து 2021 ல் முடிக்க வேண்டிய திட்டம். 105 திட்டங்களில் இதுவரை மூன்று திட்டங்களே முடிவடைந்துள்ளன. இதற்கு தலைவராக இருப்பவர் தலைமை செயலர். இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு அலுவலகப் பணி இதனால் ஸ்தம்பித்து போய் உள்ளது. பொது மக்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஆட் பற்றாக்குறை காரணம் காட்டியே அனைத்து பணிகளும் கிடப்பில் உள்ளன.

தாங்கள் கூறிய அதிகாரிகளின் பணி என்பது, வரி செலுத்தும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. லஞ்சம் லாவன்யம் தலைவிரித்து ஆடுகிறது. எனவே இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில். அரசுப் பணியில் அலட்சியம் காட்டும். பொறுப்பற்ற முறையில் நடக்கும் உயர் அதிகாரிகள் மீது எந்த வித பாரபட்சம் காட்டாமல். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இந்த மனு மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனைவராலும் பகிரப்படவேண்டும்.

நன்றி வணக்கம்.

இப்படிக்கு.

கோ ராமலிங்கம்
மக்கள் கண்காணிப்பு குழு..
செல் 97895 45401..

பதிவு.

திரு. AAP. ஹமீது. MMY.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »