கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை. என்பது போல, தெளிவில்லா மக்களும் தேவையில்லா ஊழியர்களும். நான் இங்கு ஊழியர்கள் என்று சொல்வது அரசு ஊழியர்களையும், அரசியல் ஊழியர்களையும் சேர்த்துதான்.
- நாட்டு மக்களிடமே அனைத்து வரி வகையராக்களையும் திறமையாக வசூல் செய்துகொண்டு,
- அளவுக்கு அதிகமாக ஊதியத்தையும் வாங்கிகொண்டு,
- ஊழியத்தை செய்ய அலட்சியமும், தாமதமும் படுத்திக்கொண்டு,
- மதிக்க வேண்டிய மக்களை உதாசினப்படுத்தி கொண்டு,
- கேள்வி கேட்பவரை கேவலமாக நினைத்துகொண்டு,
- சட்டம் பேசினால், சர மாறி தாக்குதல் நடத்திக்கொண்டு,
- பணக்காரனுக்கு மட்டும் பல மரியாதை கொடுத்துக்கொண்டு,
- வரி செலுத்தி நாட்டை காக்கும் எஜமானர்களை, யாசகர்களாக நினைத்துகொண்டு
இருக்கும் நாடுகள் அதிகமில்லை. தற்போதைய நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் சில நாடுகளும், இந்தியாவிலும்தான் இந்த நிலை. இங்கு மட்டும் ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது என்று நாம் சிந்தித்தால், எங்கெல்லாம் மக்கள் விபரமானவர்களாக இருகிறார்களோ அங்கு, அரசு ஊழியர்கள் பொத்திக்கொண்டு ஒழுங்கான முறையில் தன் ஊழியத்தை செய்கின்றனர். உதாரணம், அமேரிக்கா, பிரான்ஸ், லண்டன், போன்றவை.
மாறாக, எங்கெல்லாம் மக்கள் விபரம் குறைவானவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம், வேளையில் அலட்ச்சியம், மமதை, திமிர், ஆணவம், போன்ற போக்குகளை கையாள்கிறார்கள். ஊதியம் கொடுக்கும் முதலாளிகளையே, கேவலப்படுத்தும் பழக்கம் இப்படிப்பட்ட நாடுகளில்தான் உள்ளன.
இதற்கெல்லாம், எப்போது? எப்படி தீர்வு காண்பது? சிலர் சொல்கிறார்கள் நல்ல அரசியல் வாதி வரவேண்டும் அப்போதுதான் நாடு திருந்தும் உருப்படும் என்று, வேறு சிலர் சொல்கிறார்கள் முதலில் மக்கள் மாற வேண்டும் அப்போதுதான் நாடு திருத்தும் உருப்படும் என்கிறார்கள். இதை கேட்க கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போல் உள்ளது.
கோழிமுட்டை கதையில் யாருக்கும் விடை தெரியாவிட்டாலும், நம் நாட்டு மக்கள் கதையில் நம் எல்லோருக்கு விடை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நான் மேலே சொன்னது போல, மக்கள் விபரமாக இருக்கும் இடங்களில், ஒரு அரசியல் வாதி திருட முடியவில்லை, ஒரு அரசு ஊழியர் லஞ்சம் மற்றும் ஊழல் செய்ய முடியவில்லை. எனவே இங்கு நமக்கு விடை கிடைத்து விட்டது என்றே நான் நினைக்கிறன். எனக்கு வேண்டுமானால் இன்றைக்கு விடை கிடைத்து இருக்கலாம், ஆனால் இந்த விடை நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் முன்னமே தெரிந்து இருக்கலாம், அதனால் தான், மக்களுக்கு எந்த விபரமும் தெரிந்து விட கூடாது என்று தெரிவாக இருகிறார்கள்.
என்றால், இனி நாம் என்ன செய்ய வேண்டும்?
- மக்களுக்கும் அரசுக்கும் உடனான தொடர்பு என்னென்ன?
- மக்களுக்கும் அரசுக்கும் உடனான கொடுக்கல் வாங்கள் என்னென்ன?
- அரசியல் வாதிகளின் உரிமைகள் மற்றும் வேலைகள் என்னென்ன?
- பொய், பித்தலாட்டம் செய்யும் அரசியல் வாதிகளை எப்படி கண்காணிப்பது?
- அரசு ஊழியர்களின் வேலைகளும் உரிமைகளும் என்னென்ன?
- அரசு ஊழியர்களை எப்படி கண்காணிப்பது?
- லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை எப்படி தண்டிப்பது?
- வேலைகளை தாமதபடுத்தினால், எப்படி நடவடிக்கை எடுப்பது?
இப்படி பட்ட விஷயங்களை முதலில் கற்கவும் கற்றுகொடுக்கவும் வேண்டும். இதை ஆம் ஆத்மி கட்சி செவ்வனே செய்து வருகிறது. ஆனால், எங்கள் நோக்கம், இந்த வேலைகளை வெவ்வேறு கட்சிகளில் பயணித்தாலும் அவரவர் பாணியில் செய்ய வேண்டும். நாடு முன்னேற வேண்டும், மக்கள் நலன் பெற வேண்டும், என்று யார் சிந்தித்தாலும், நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. AAP. ஹமீது. MMY.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.