நீங்கள் எங்களுக்கு மத்திய அரசு சார்பாக, சேவை செய்ய வந்துள்ளீர்கள். அதை மனமாற வரவேற்கிறோம்.
புதுச்சேரி மாநில அரசியல் கட்சிகளுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்தி, அதிக அதிகாரம் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரி வளர்ச்சிக்கு,
- புதுச்சேரி மக்கள் நலனுக்கு பயன்படுத்தினால் என்ன?
- புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி பெற்று தந்தால் என்ன?
- புதிய திட்டங்களை தீட்டினால் என்ன?
- மத்திய அரசின் சட்டங்களை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், அமல் படுத்தினால் என்ன?
- கடன் வாங்கி கடன் வாங்கி, வட்டி கட்டி உங்களுக்கு சம்பளம் எடுத்துக் கொண்டு நிர்வாகம் செய்வது என்பது ஏற்புடையது தானா?
இதற்கு உயர் படிப்பு, அனுபவம், எதுவும் தேவையில்லையே, தெருவில் விளையாடும் சிறுவனிடம் கொடுத்தால் கூட, செய்யும் அளவுக்கு உங்கள் செயல் பாடுகள் இருக்கிறது. காரில் வருவது, கடற்கரை காற்று வாங்குவது, முதல் தேதி முதல் நாளே, வங்கியில் உங்களுக்கு தேவையான சம்பளத்தை பெறுவது. இது உண்மையிலேயே உங்களுக்கு.. ஜீரணமாகுமா?
- பல ஆயிரம் குடும்பங்களுக்கு பல மாதங்கள் சம்பளம் இல்லை,
- பஞ்சாலைகள் மூடிக் கிடக்கின்றன,
- பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளன,
- கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன,
- கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டுறவு ஆலை இயங்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன
- தொழிற் பேட்டை களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- ரோடுகளின் நிலை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
- மத்திய அரசின் சட்டங்களை அமல் படுத்தாமல், அமுக்கமாக அமர்ந்து இருப்பது ஏன்?
- நீங்கள் பணி செய்வது, எங்களுக்காக என்பது தெரியுமா?
- நீங்கள் சம்பளம் பெறுவது எங்கள் வரிப்பணம் என்பதாவது தெரியுமா?
- ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான், அதிகாரம் இல்லை என்று சொல்லி விட்டீர்களே,
- இனி, அவர்களிடம் கேட்டு என்ன பலன்?
- அவர்களுக்குள்ளே நடக்கும் உள்நாட்டு யுத்தம், மவுன யுத்தம், இப்போது முடிவதாக இல்லை,
- இதில் அவர்களுக்கு உரிமைகளை கேட்க எங்கே நேரம் இருக்கிறது?
- நீங்கள் தான் அனைத்துக்கும் பொறுப்பு, எங்களுக்கும் விழிப்புணர்வு வரும்,
- வாங்கிய கடன் 11000 கோடிக்கு கணக்கு கேட்போம்,
- வளர்ச்சி என்ன? என்ற கேள்வி மூலை முடுக்கு, சந்து பொந்து எல்லாம் உரக்க குரல் எழுப்பி, ஆளுநர் மாளிகை நோக்கியும், தலைமை செயலகம் நோக்கியும், உங்களை நோக்கி பெரும் மக்கள் படையே வரும். அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
- அதிகாரத்தை வைத்துகொண்டு மக்கள் வரிப்பணத்தில், சொகுசு, சுக வாழ்க்கை வாழ, கடன் வாங்கி காலம் கடத்துவதா?
வந்தோம், வாழ்ந்தோம், செய்தோம், வளமானார்கள், வாழ்த்தினார்கள் என்றால் இது தான் வாழ்க்கை. இதற்கு மேலும், அதிகாரத்தை வைத்துகொண்டு
- புதுச்சேரி வளர்ச்சிக்கு வேகத் தடையாக இருக்காதீர்கள்,
- புதுச்சேரிக்கு சுமையாக இருக்காதீர்கள்,
- மாநில வளர்ச்சிக்கு., மக்கள் நலனுக்கு., திட்டமிடுங்களுக்கு
- அதிக நிதி பெற்றுத் தாருங்கள், அதிகாரத்தை பரவலாக்குங்கள்.
மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாதவரை தான், உங்களது ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும்.
எதுவும் நிரந்தரம் அல்ல, என்பதை புரிந்து கொண்டால் நல்லது.
இப்படிக்கு.
கோ ராமலிங்கம்
மக்கள் கண்காணிப்பு குழு..
செல் 97895 45401..
பதிவு.
திரு. AAP. ஹமீது. MMY.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.