வணக்கம்,
காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவராகிய நான், மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் அரசு துறையுடனான அடிப்படை விழிப்புணர்வு கொடுக்கும் வகையில், இந்த இணைய தளத்தை இயக்கி வருகிறேன். நாங்கள் குழுவாக இணைந்து , எங்களால் முடிந்த வரை, பல வகையான டேட்டாக்களை தொகுத்து வழங்கிக்கொண்டு வருகிறோம்.
ஆனால், எங்கள் ஆம் ஆத்மி கட்சியும் சரி, ஆம் ஆத்மி பொறுப்பாளர்களும் சரி, உறுப்பினர்களும் சரி, மதங்களுக்கும் சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்.
இன்றைய சூழ்நிலையில், இஸ்லாம் பெண்கள் அணியும் ஹிஜாப் பிரச்சனை நாடு முழுவதிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த இடத்தில் எனது நிலை என்ன, கருத்து என்ன என்பதை தெரிவிப்பதை தேவையாக கருதுகிறேன்.
- பெங்களூரில் ஒரு பள்ளி நிர்வாகம், ஹிஜாப்புக்கு தடை வித்தித்தது.
- சில பெண்கள் ஹிஜாப் அணிய கட்டாயம் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
- பள்ளி ஆசிரியர் அனுமதிக்காமல், அப்பெண்களை வெளியில் உட்கார வைத்தார்.
- அதைதொடர்ந்து, மாணவர்கள் சிலரும் ஹிஜாப் எதிர்ப்பை காட்டினர்.
- திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் காவி உடையணிந்து பள்ளிக்குள் நுழைந்தனர்.
- காவி அணிவதால், எங்களுக்கு பிரச்னை இல்லை, ஆனால் நாங்கள் ஹிஜாப் அணியவேண்டும் என்றனர் அதே பெண்கள்.
- காவி அணிந்து வந்தவர்கள் 80 சதவீதத்திற்கு மேலானவர்கள் வெளி ஆட்கள்.
- ஹிஜாப் அணிந்து வந்த பெண்களை பள்ளியில் நுழைய விடாமல், தடுத்தனர். மேலும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தையும் எழுப்பினர்.
- ஹிஜாப் அணிந்து வந்த பெண், எதற்கும் அஞ்சாமல் அல்லாஹ் அக்பர் கோஷத்தை போட்டுக்கொண்டே பள்ளியில் நுழைந்தாள்.
- அந்த தைரியத்தை ஜாதி மத பேதமின்றி பலரும் பாராட்டினர்.
- விஷயம் எதிர்பார்த்த திசையில், போகாததால், வாடகைக்கு எடுத்த காவி தலைப்பாகை மற்றும் காவி துண்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
- ஜெய், ஸ்ரீ ராம் கோஷமிட்டவர்களுக்கு பணமும் பட்டுவாடா செய்யப்பட்டது.
- அதே போன்று காவி துண்டு அணிந்து, ஹிஜாபுக்கு எதிராக ரோடுகளில் கோஷமிட்டவர்களை, கர்நாடக ஊர் மக்களே, பிரம்பால் அடித்து விரட்டினர்.
- வேறு வழி இல்லாமல் கர்நாடகாவில் மாணவர்கள் பின் வாங்கினர்.
- ஆனால், இது போன்ற போக்கை செய்தது மாணவர்கள் இல்லை, இது RRS மற்றும் BJP திட்டம் என்று பலர் நம்புகிறார்கள்.
- இது வேண்டுமென்றே மதக்கரவரமாக தோற்றுவிக்கப்பட்டது என்றும் பலரும் கூறுகின்றனர்.
- அதனால், இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிஜாப் எதிர்ப்புக்கு எதிரான போராட்டம் தொடக்கி இருக்கிறது.
- அரபு நாடுகள் மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் இதே வகையில் போராட்டங்கள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு இருகின்றன.
மேற்படி விபரங்களில் ஏதேனும் விடுபட்டு போய் இருக்கலாம், அனால், நான் மேலே குறிப்பிட்ட அனைத்திற்கு ஆதாரங்கள் உள்ளன.
மேலும் சிலர் கூறுகின்றனர். ஒரு பள்ளியில் சீருடை என்று ஒரு கட்டுப்பாடு இருக்கும் போது, எப்படி மற்ற உடைகளை அனுபதிக்க முடியும் என்று.
உரைக்காத மண்டைக்கு உரைக்கும் படியாக ஒரு பதில் சொல்கிறேன். ஒரு பள்ளி தனக்கான குறிப்பிட்ட ஒரு கலரை சீருடையாக அறிவிக்கலாம், அப்போது பள்ளிகள் குறிப்பிடும் கலரை தவிர்த்து வேறு கலர்களில் வந்தால் மட்டுமே அது பள்ளி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது போன்றாகும். பள்ளி சொல்லும் கலரில், சீருடை அணித்த பிறகு, தலையை மறைக்கவும் கூடுதாக மார்பை மறைக்கவும் போடப்படும் ஹிஜாபை பற்றி பேச பள்ளிக்கு அதிகாரம் இல்லை? அதையும் தாண்டி, இந்த முறையில்தான் நீ ஆடை உடுத்த வேண்டும் என்று ஒரு பள்ளி சொல்லுமேயானால், அது மனித உரிமை மீறலாகும், நாம், உறங்கும் நேரம், நாம் சாப்பிடும் நேரம், என்ன சாப்பிட வேண்டும், என்ன மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்பது எல்லாமே மனிதனுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளாகும்.
உதாரணம்-1 காரைகாலில் நிர்மலா ராணி என்ற பெண்கள் பள்ளியில், நீல கலர்தான் சீருடை, மற்ற மத பெண்கள், நீல நிற பாவாடை சட்டை அணிந்து வருவார்கள். இசுலாமிய பெண்கள் மட்டும் அதே நீல நிறத்தில் புர்கா + ஹிஜாப் அணிந்து வருவார்கள்.
உதாரணம்-2 நிர்வாண சாமியார் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் என்று வைத்துகொள்வோம், அவருடை பள்ளிக்கு நிர்வாணம் தான் சீருடையாக வைப்பார். அந்த ஊரில் வேறு பள்ளிகள் இல்லை என கொள்வோம், இந்த நிலையில், பள்ளியில் சட்டதிட்டங்களை நாம் மதிப்போமா? அல்லது எங்களுக்கு அப்படி பழக்கமில்லை, எங்களை வர்புத்தகூடாது என்று வாதிடுவோமா? அப்போது, இந்திய அரசியல் சாசனத்தை கையில் எடுப்போமா? பள்ளியின் கட்டளைகளை உயர்த்தி பிடிப்போமா?
இப்போது விஷயத்திற்கு வருவோம். நடுநிலை வாதிகள் என சொல்லிகொள்ளும் பலரும் ஹிஜாப் அனுமதிக்கப்பட வேண்டும், மற்ற மத அடையாளங்களை பள்ளிகள் அனுமதிக்கத்தானே செய்கிறது, உதாரணமாக, பொட்டு வைப்பது, பூணூல் போடுவது, சிலுவை அணிவது, தலையில் டர்பைன் அணிவது போன்றவைகளை எடுத்துக்காட்டி ஏன் ஹிஜாப் மட்டும் அணியக்கூடாது என்ற சம உரிமையை வெளிபடுத்துகின்றனர்.
ஆனால், இங்கு ஒரு விஷயம் பலருக்கும் புரியவில்லை. அது, என்னவென்றால் ஹிஜாப் என்பது மத அடையாளம் இல்லை, உணர்வுக்கான கட்டுப்பாட்டு உடை. இதை விளக்கமாக விளங்கிகொண்டால் மட்டுமே புரிதல் ஏற்படும்.
இந்தியாவை பொறுத்த வரை
- ஒரு முஸ்லிம் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதற்கு உடனே ஹிஜாப் அணிந்து மத அடையாலத்தை யாரும் காட்டுவதில்லை.
- பிறகு ஆரம்பப் பள்ளிகளுக்கு அனுப்பும்போதும் ஹிஜாப் அணிந்து தன் மத அடையாளத்தை காட்டுவதில்லை,
- பிறகு தொடக்க பள்ளிகளுக்கு அனுப்பும்போது தன மத அடையாளத்தை ஹிஜாப் அணிந்து காட்டுவதில்லை,
- ஆனால், சில குட்டி பெண் பிள்ளைகள் மட்டும் தன் பெற்றோர்களிடம் ஹிஜாப் கேட்டு விருப்பி போட்டுகொள்வார்கள்.
- அதே சமயம், சுமார் அந்த பெண்ணுக்கு 10 வயது நெருங்கியவுடன் தாய் தந்தையர் ஹிஜாப் போட்டுக் கொள்ளும் பழக்கத்தை உண்டு பண்ணுவார்கள்.
- காரணம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்த பெண் பூப்பெய்வாள் அவளுடைய உடலமைப்பு மாறுபடும், மறைக்க வேண்டிய இடங்கள் மறைக்கப்படவேண்டும், என்ற பழக்கத்தை அந்த பெண்ணின் உணர்வோடு சேர்ப்பார்கள்.
- சரியான ஹிஜாப் என்பது தலையில் ஒரு கருப்பு துண்டை சுற்றுவது மட்டுமில்லை, அந்த துண்டு எந்த நிறமாகவும் இருக்கலாம், ஏன், காவி நிறமாக கூட இருக்கலாம்.
- அந்த ஹிஜாப் தலையை சுற்றி இருபதோடு அந்த பெண்ணின் மார்பகங்களையும் மறைத்த படி இருக்கும்.
- ஒரு ஆணின் பாலியல் தூண்டுதல் என்பது , ஒரு பெண் தன்னை காட்டிகொள்ளலில் இருந்து தொடங்குகிறது என்று விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
- எனவே ஒரு ஆணின் தூண்டலை குறைக்கும் வண்ணம்தான் இந்த ஹிஜாப் பயண்பாடு தொடங்கப்பட்டதே தவிர, அது ஒரு மத அடையாளமில்லை.
- தன் சொந்த வீட்டில், தந்தை, அண்ணன், தம்பி, மகன், போன்ற ரத்த உறவுகளுடன் இருக்கும் போது யாரும் ஹிஜாப் அணிவதில்லை, அதை யாரும் கட்டாயபடுத்து வதுமில்லை.
- அதே சமயம், மாமனார், மாமன், மச்சான், போன்ற அடுத்த உறவுகள் இருந்தால், ஒரு இஸ்லாமிய பெண், குறைந்த பட்சம் தன் புடவை முனையை ஹிஜாப் போன்று தலையில் போட்டுகொள்வாள்.
- இப்படி இருக்க, பள்ளிகளுக்கும், வெளி இடங்களுக்கும் செல்லும் போது எந்த உறவுகளுக்குள்ளும் வராத, ஆசிரியர்கள் , சக ஆண் மாணவர்களை, நேருக்கு நேராக சந்திக்கும் பொது, ஹிஜாப் என்ற கட்டுபாட்டு உடையை அணியாமல் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும்.
- இந்த உண்மையை சரியாக உணர்ந்தால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, மத பேதமில்லாமல் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிய தொடக்கி விடுவார்கள்.
- பிற மத பெற்றோர்களும் ஹிஜாப் அணியும் பழக்கத்தை தன் பெண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து விடுவார்கள். காரணம், ஹிஜாப் ஒரு மத அடையாளம் இல்லை.
- உடை நாகரீகம் என்பது, உடைகளே உடுத்தாத மனிதனிடமிருந்துதான் தொடங்கியது .
- பிறகு, பால் உறுப்புகளை மறைக்கும் உடைகள் மட்டுமே வந்தன,
- பிறகு உடலில் கவர்ச்சி ஏற்படுத்தும் சில உறுப்புகளை மறைக்கும் உடைகள் வந்தன.
- பிறகு, முற்றிலுமாக கவர்ச்சிகளை கட்டுபடுத்தும் உடைகள் வந்தன.
- அப்படி முற்றுபெற்றதுதான் புர்கா மற்றும் ஹிஜாப். அதை விரும்பியவர்கள் அணிகிறார்கள். விரும்பாதவர்கள் அணியவில்லை. அது அவரவர் விருப்பம்.
எனவே, ஹிஜாப் ஒரு மத அடையாளம் இல்லை, ஆண்களின் பாலியல் தூண்டுதலை கட்டுபடுத்து ஒரு கட்டுபாட்டு கருவி உடை . அதை அணிய வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
தொகுப்பு மற்றும் பதிவு.
