மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு. புதுச்சேரி மக்களின் ஒரு மனதான கோரிக்கை.

தங்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது,

  • புதுச்சேரி வளர்ச்சி பாதையை எட்டும்,
  • அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்பதோடு,
  • மணக்குள விநாயகர்  மற்றும்
  • பாரதி தொல்லைக்காது சித்தர்
  • குரு சித்தானந்தா சுவமிகளை பற்றி பேசியது, எங்களை மெய் சிலிர்க்க வைத்தது.

நீங்கள் பேசியது மட்டும் அல்ல, மத்திய உள்துறை அமைச்சர் பேசியது. எங்கள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஏனெனில், மத்திய உள்துறை யின் கீழ்தான்  யூனியன் பிரதேசங்கள் வருகிறது. நிதியை அள்ளி வாரி வழங்குவார் என்று மகிழ்ச்சியுடன் இருந்தோம்.மேலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய நிதியமைச்சரே தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் புதுச்சேரியில்,

  • 50000 பேரை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரித்ததாகவும். அதில்,
  • புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தரவும்,  நிதி அளவீடு, 25 சதவீதத்தில் இருந்து  40 சதவீதமாக அதிகரிக்கவும் வாக்குறுதி அளித்தது. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
  • மேலும், மாநில பாஜக வும் தேர்தல் வாக்குறுதிகளை தந்தன.
  • கடந்த ஆட்சியில் பட்ட துன்பங்களுக்கு  தக்க பதிலடி தரும் என்பதில். முதன் முதலாக தமிழ் பேசும் மாநிலத்தில், உங்களை ஆட்சி கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்த பெருமை எங்களுக்கு உண்டு.

ஆனால், நடந்தது என்ன? இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில்.

  • எந்த முன்னேற்றமும் இல்லை,
  • நீங்களும் மறந்து விட்டீர்கள்,
  • மத்திய நிதியமைச்சர் மாநில சிறப்பு அந்தஸ்து தரவில்லை.
  • ஏற்கனவே அளித்த நிதியையும் குறைத்து விட்டார்.
  • மத்திய உள்துறை அமைச்சரோ முதல் 2021 ல் வருடம்  53026 கோடியில் 3.4 சதவீதம்  ரூ 1729 கோடி அளித்து.
  • 2022 ல் 60584 கோடியில் 3 சதவீதத்துக்கும் குறைவாக அளித்தது மிகவும் பேரதிர்ச்சி அளித்தது.
  • புதுச்சேரி பாஜக வும்  தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை.

ராஜ்யசபா உறுப்பினர் பதவி தொடங்கி, நியமன எம் எல் ஏ மந்திரி பதவி பெற்று.
இப்போது வாரியத் தலைவர் பதவிக்கு சண்டையிட்டு வருகின்றனர். இந்த இரண்டு வருடங்களில் ஒன்றுமே நடக்கவில்லை. ஏமாற்றப்பட்டது தான் மிச்சம்.

தங்களின் தேர்தல் பிரசார வாக்குறுதி படி எந்த வளர்ச்சியும் காணவில்லை. எனவே,  இத்துடன் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும்.
புதுச்சேரி பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், இத்துடன் இணைத்து அனுப்புகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் யூனியன் பிரதேச்ங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் முழு விசாரணை நடத்த வேண்டும்.

இந்திய வரைபடத்தில் புதுச்சேரி என்ற ஒரு மாநிலம் இருப்பதையும், நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் புதுச்சேரி வளர்ச்சி பற்றி பேசியதையும் நினைவு படுத்தி , நீங்கள் பேசிய மணக்குள விநாயகர், குரு சித்தானந்தசுவாமி, தொல்லைக்காது சித்தர், அவர்களையே இதற்கு சாட்சியாக வைத்து, எங்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்…

நன்றி வணக்கம்

இப்படிக்கு.

உங்களுக்கு, உங்கள் பேச்சை நம்பி ஓட்டு போட்ட மக்கள்.

இணைப்பு: இத்துடன் மத்திய நிதியமைச்சர் அளித்த தேர்தல் அறிக்கை, புதுச்சேரி பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை.

மத்திய உள்துறை அமைச்சர்
2021 நிதி ஒதுக்கீடு.
2022 நிதி ஒதுக்கீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »