அன்பார்ந்த நண்பர்களே. என்னுடைய பதிவுகளில்.
புதுச்சேரி முதல்வர் தொடங்கி, இறுதியாக பாரதப் பிரதமர் வரை ஓட்டுப் போட்ட மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துகொண்டிருப்பது. உங்களுக்கு என் மீது கோபத்தையோ, இல்லை தவறாக நினைக்கவோ, பைத்தியக்காரத்தனமான செயலாகவோ நினைக்கத் தோன்றும். ஆனால், எனக்கு சமூகத்தின் மீதுள்ள கோபமும் உங்களின் விழிப்புணர்வற்ற நிலையும் என்னை அப்படி எழுத வைக்கிறது.
முதலமைச்சர் முதல் பாரதப் பிரதமர் வரை, உங்கள் சார்பாக கோரிக்கை வைத்து பதிவு செய்வது, அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல. அவர்கள் செய்ய மாட்டார்கள். சொல்வார்களே தவிர, செய்பவர்கள் அல்ல. வாய்ச் சொல் வீரர்கள். அரசியல் வாதிகளை பொறுத்தவரை, அவர்களுக்காகவே அவர்கள் வாழ்பவர்கள். மக்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள், ஆனால் கவலைப்பட மாட்டார்கள்.
- நீங்கள் இதை உணர வேண்டும்.
- உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும்.
- உங்கள் அதிகாரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
- உங்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.
- புதுச்சேரி வரலாறு என்ன?
- பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம் கூறுவது என்ன?
- ஏன் நமக்கு மாநில தகுதி தர மறுக்கின்றனர்.
- ஏன் நிதி தர மறுக்கின்றனர்.
- ஏன் நமது ஆட்சியாளர்கள் இதை வலியுறுத்தி கேட்பதில்லை.
- கேட்க இயலாதவர்களா? இல்லை விஷயம் தெரியாதவர்களா?
- அடங்கி கிடக்கும் அடிமைகளா?
- நாம் இப்படியேதான் வாழ வேண்டுமா?
- ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டுமா?
- ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க நல்ல கட்சிகளே இல்லையா?
- ஏன் நாம் ஒன்று பட்டு நின்று உரிமைக்காக போராடக்கூடாது?
- ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகள் என்ன?
- பட்ஜெட் செலவு ஒழுங்காக செய்ய படுகிறதா?
- சட்டசபை ஒழுங்காக கூட்டப்படுகிறதா?
- மத்திய அரசின் சட்டங்களை புதுச்சேரி அரசு அமல் படுத்த படுகிறதா?
- தணிக்கை அறிக்கையில் கூறப்படுவது என்ன?
- வரவு செலவு அறிக்கை சரியாக இருக்கிறதா?
- அரசு அலுவலகங்கள் சரியாக செயல்படுகிறதா?
- அரசாணை படி நடக்கின்றார்களா?
- நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் ஒழுங்காக சட்ட மசோதாக்களை கொண்டு வருகிறார்களா?
- பாராளுமன்ற, ராஜ்யசபா உறுப்பினர்கள் நமக்காக பாராளுமன்றத்தில் ஆற்றிய சேவை என்ன?
- நாம் பயணம் செல்லும் சாலைகள் ஏன் குண்டும் குழியுமாக உள்ளன?
- ஒப்பந்த தாரர் ஒழுங்காக சாலைகளை போடுகிறார்களா?
- திட்டங்கள் ஒழுங்காக செயல்படுகின்றதா?
போன்ற கேள்விகளுக்கு உரிய பதில், ஓட்டு போடும் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
117 வார்டுகள், 81 கிராம பஞ்சாயத்துகள், இதற்குள் வாழும் மக்கள், இவர்களுக்கு விழிப்புணர்வு வரவே என்னுடைய பதிவுகள்.
- ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.
- உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
- உங்களை நீங்கள் நம்புங்கள்.
- உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
- இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை..
நன்றி வணக்கம்.
தொகுப்பு:
கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு :