2020-2021 புதுச்சேரி மாநிலத்தின் ஆண்டு நிதி அறிக்கை.

  • மொத்த வரி வருவாய் ரூ 5247 கோடி,
  • வாங்கிய கடனுக்கு வட்டி ரூ 735 கோடி,
  • அசல் செலுத்தியது ரூ 744 கோடி,
  • கடனுக்கு முன்பணம் செலுத்தியது ரூ 145 கோடி,
  • வாங்கிய கடன் ரூ 1267 கோடி,
  • ஒரு நாளைக்கு, வரி மூலம் வரவு ரூ 14.37 கோடி,
  • ஒரு நாளைக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ 2.4 கோடி,
  • மொத்த செலவு ரூ 7715 கோடி
  • ஒரு நாளைக்கு செலவு ரூ 21.15 கோடி,

இது தான் 2020-2021 ஆண்டு நிதி அறிக்கை படி, புதுச்சேரியின் பொருளாதார நிலை.

  • ஒருநாள் வரவு ரூ. 14.37 கோடி,
  • ஒரு நாள் செலவு ரூ 21.15 கோடி,
  • ஒரு நாள் வட்டி வாங்கிய கடனுக்கு ரூ 2.4 கோடி,
  • தற்போது கடன் ரூ 9449 கோடி.

புதுச்சேரி பொருளாதார நிதி நிலை இதுதான். இதை போக்க என்ன வழி ? இதைபோக்க தகுந்த  வழி சொல்பரே , சிறந்த அரசியல்வாதி. யாருக்கு வரம் கொடுப்பது என்று மக்களுக்கும் தெரிவதில்லை. வரம் கொடுத்தவர்களையே கொடுமை படுத்தலாமா என்று அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லை.

தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டு நாம் தகுதி இழந்து நிற்பது தான், கடந்த எழுபது ஆண்டு வரலாறு. மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். ஆட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்களின் ஓட்டும் விலை பொருளாகி விட்டது. வரிகளை கட்டாவிட்டால் அபராதம், சிறைத் தண்டனை என்ற அளவுக்கு சட்டம் பாய்கிறது.

கல்வி, சுகாதாரம் என அனைத்துமே தனியார் மயமாகிவிட்ட நிலையில் ஏழைகளுக்கு  எட்டாக்கணியாகி விட்டது. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என இப்போது இல்லை. அனைவருமே ஏதோ ஒரு கார்ப்பரேட் கும்பலுக்கு விலை போய் விடுகின்றனர்.

மக்களின் உரிமைகள் சலுகைகள் ஒவ்வொன்றாக பறிக்க படுகின்றன. அளவளாவிய அதிகாரத்துடன் சர்வாதிகார சக்ரவர்த்திகளாக மாறி விடுகின்றனர். விளைவு,  கொசுவாக மாறி மக்களை ரத்தத்தை உறிஞ்சுகின்றனர்.

ஆலமரம் போல், விழுதுகளாகி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஊழல் கூட்டம். இப்போதைக்கு அடங்காது அதன் ஆட்டம். எப்படியும் புரட்சி வரும். என ஆருடம் சொல்கிறது ஒரு கட்சி. அதுவரை நம்மை காத்திருக்க வைக்கிறது. இதற்கு என்ன தான் முடிவு.?

இந்த அசுரர்களை அழிக்க. அவதாரம் எடுக்கும் புதிய கட்சியை தேடுங்கள். புதிய மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

  • இனிமேலாவது, என்ன தவம் செய்தாலும்,
  • பொய்யான வாக்கு கொடுத்தாலும்,
  • வீட்டுக்கு வீடு கதவை தட்டி, அரிசி மூட்டை தந்தாலும்,
  • ஆசை வார்த்தை பேசி, பாசமழை பொழிந்து, தெரு முனையில் நின்று டோக்கன் கொடுத்தாலும்,
  • தேர்தல் முதல் நாள் ஆயிரக்கணக்கில் பணமே கொடுத்தாலும்,

உன் ஓட்டை மட்டும் போடாதே, தகுதியானவனுக்கு மட்டுமே போடு. இதை உணர்ந்து நடந்து கொண்டால், நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

தொகுப்பு:

கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.

பதிவு:

Hamid Incharges

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »