AAPKKL-2022-008 - RTI-KKL Municipality

Countdown for RTI.

காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின்  அடுத்த கட்ட நகர்வாக, காரைக்கால் நகராட்சிக்கு RTI கேள்விகள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல வகையான புகார்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யகோரி, நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம் அதை அலட்சியபடுத்தி கிடப்பில் போடுகிறது. என்றால், நகராட்சி ஆணையருக்கு எந்த பொறுப்பும் கட்டுப்பாடும் கிடையாதா? அவர் வாங்கும் ஊதியம் மக்கள் பணம் இல்லையா?

எங்களுடைய இரண்டு கோரிக்கைகளுக்கு நகராட்சி செவி சாய்க்கவில்லை,

  1. காரைகாலில் குப்பை பிரச்சனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.
  2. ரோடு, கழிப்பிடம், சாக்கடை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.

பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிக்கு, ஜப்தி நோட்டிஸ் விடும் ஆணையர், தான் மட்டும் மெத்தனம் காட்டுவதேன்?

எனவே, 9 கேள்விகளுடன், RTI விபரம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »