அன்பார்ந்த புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி தோழர்களுக்கு வணக்கம்.
புதுச்சேரியில், ஆம் ஆத்மி கட்சி என்பது, சுமார் 8 முதல் 9 ஆண்டுகளாக இயாங்கி வருகிறது. பலர் வெளியே சென்றார்கள், பலர் உள்ளே வந்தார்கள். கட்சியில் இருக்கும் நாம் அனைவரும் ஒரு புள்ளியில் ஒன்று சேருகிறோம் . அது, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே.
- நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கட்சிகள்,
- எந்த ஒரு உருப்படியான கொள்கைகளும் இல்லாத கட்சிகள்,
- பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்ட கட்சிகள்,
- பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றும் கட்சிகள்,
- நடிப்பு திறன், பேச்சு திறன் மிக்க கட்சிகள்.
- எலிப்பொறியில் உணவு வைத்து பிடிப்பது போல, இலவசம் கொடுத்து ஏமாற்றும் கட்சிகள்.
இவையெல்லாம் தேவை இல்லாத ஆணிகளாக தென்பட்டாலும், எல்லா கட்சிகளும் அவரவர் பங்குக்கு சில சதவீதம் வளர்ச்சியை (ஓட்டு வங்கியை) பெற்றுள்ளனர்.
ஆனால், உண்மையை மட்டுமே பேசவேண்டும், நேர்மையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும், செய்வதை மட்டுமே சொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மட்டும் புதுச்சேரியில் ஒரு சதவீதம் கூட வளர்சசி அடைந்ததாக தெரியவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று அலசி ஆராய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். என்னை பொறுத்த வரையில்,
- கட்சியில் கட்டுகோப்பு என்பது இல்லை.
- பதவி வேண்டுமென்ற எண்ணம் இருக்கும் அளவிற்கு, செயல்பாடு இல்லை.
- உறுப்பினர் சேர்க்கை என்பது இல்லை.
- பொது விஷயத்தை கையிலெடுத்து மக்களுக்கு உதவிட போதுமான ஐடியாக்கள் இல்லை.
- எந்த முயற்சிகள் மேற்கொண்டால் வளர்ச்சியை அடையலாம் என்ற திட்டமில்லை.
- வாட்சப், பேஸ்புக்கில் கிடைப்பதை காப்பி & பேஸ்ட் செய்வதால் மட்டும் கட்சியை வளர்த்து விடலாம் என்ற எண்ணம் இருந்தால் மட்டும், எந்த புண்ணியமும் இல்லை.
இப்படி பல கருத்துக்கள் என்னை சிந்திக்க வைக்கின்றது. நான் 2015 ஆம் ஆத்மி கட்சியில் நுழைந்து, சரியான கட்டுகோப்பு, சரியான செயல்பாடுகள் இல்லாததை கண்டு 2016 முதல் விலகிக்கொண்டேன். மீண்டும் 2021 இணைக்கபட்டுள்ளேன். அதன் பின், எனக்கு தெரிந்த அளவில் கட்சி பணிகளை செய்தும் வருகிறேன்.
எனது பணிவான வேண்டுகோளை ஆம் ஆத்மி கட்சி தோழர்கள் அனைவருக்கும் இங்கு பறைசாற்றுகிறேன்.
- உறுப்பினர்கள் மற்றும் பொருப்பாளிகளுக்கு, உறுப்பினர் அடையாள அட்டை ஏற்பாடு செய்யவேண்டும்.
- ஆம் ஆத்மி கட்சி பொறுப்பில் இருப்பவர்கள், ஒரு நாளுக்கு ஒரு செயல் வீதல் ஏதாவதொரு செயலை கட்சி சார்பாக செய்ய வேண்டும்.
- அந்த செயல், எழுச்சியூட்டும் எழுத்தாக இருக்கலாம், பேச்சாக இருக்கலாம், அல்லது ஏதாவதொரு செயலாக (நடவடிக்கை) இருக்கலாம்,
- அந்த செயலை, கண்டிப்பாக மற்ற உறுப்பினர்களுக்கும், மற்ற பொருப்பாளிகளுக்கும் தெரியபடுத்தவேண்டும். அதுதான், கட்சி செயல் படுகிறது என்ற உணர்வைவும் ஊக்கத்தையும் கொடுக்கும்.
ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் அரசியல் செய்ய, பிரச்சனைகளை தேடித்திரிய தேவையில்லை. எங்கு திரும்பினாலும் பிரச்சனைகள் கொட்டி கிடக்கிறது. லஞ்சம், ஊழல், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமை, அரசு ஊழியர்கள் பொறுப்பில்லாமை போன்றவைகள்.
நாம் எதையுமே செய்யாமல், இன்னும் 10 வருடங்கள் ஆனாலும் எந்த வளர்ச்சியையும் நாம் காண முடியாது. ஆம் ஆத்மி கட்சிக்காரன் என்றால் ஒரு தனி மரியாதை கிடைக் கிறது, லஞ்ச ஊழலுக்கு எதிராக செயல் படுவார்கள் என்ற ஒரு நல்ல எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அதுகூட நாம் சேர்த்த நல்ல பெயர் கிடையாது, அது திரு அரவிந்த் கேஜ்ரிவால் சேர்த்த நல்ல பெயர். மற்றவற்றை சார்ந்து உயிர்வாழும் ஒட்டுண்ணி போல, நாமும் கேஜ்ரிவாலி ன் தொப்பிக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு உயிர்வாழ்கிறோம்.
இந்த இணைய தளம் தொடக்கி சுமார் 4 மாதங்கள் இருக்கும். கட்சிக்காரர்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாகத்தான் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் , ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை, அல்லது நேரம் இல்லை .
பஞ்சாயத்து தேர்தல் தள்ளி போனது, நமக்கு வேலை செய்ய தானாக கிடைத்த ஒரு அவகாசம். இதை நாம் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த வாய்ப்பை விட்டுவிட்டு, என்னதான் நாம் தேர்தல் அறிக்கை விட்டாலும், கேட்கவும், படிக்கவும், யாரும் இருக்க மாட்டார்கள்.
எனவே, எனது பணிவான வேண்டுகோள் யாதெனில், ஆம் ஆத்மி கட்சியில் பொறுப்பு வகிக்கும் அனைவரும் தினம் ஏதாவதொரு செயலை செய்வதுடன், அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஒருவரை பார்த்து ஒருவர் கற்றுக்கொள்ள அது எதுவாக இருக்கும்.
நன்றி.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.