ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் இன்று கோவாவில், நாளை புதுச்சேரியில்.
- ஒவ்வொரு குடும்பமும், இந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் மதிப்பீடு பலன் அடையும்.
- 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- சுரங்கங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்தில் ஆரம்பிக்கப்படும்.
- அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வகையில், ரூ 3000 நிவாரணம் வழங்கப்படும்.
- மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும்.
- டெல்லி கல்வி தரம் இங்கு அளிக்கப்படும்.
- இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.
- நில உரிமை பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்படும்.
- புதிய வர்த்தக தொழில் இணக்கமாக ஏற்படுத்தப்படும்.
- தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும்.
- இலவச மருத்துவ சேவை தரமான முறையில் வழங்கப்படும்.
மேற்கண்ட 13 திட்டங்களை வாக்குறுதிகளை அளித்ததோடு, ஆம் ஆத்மி கட்சி, எந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. மாறாக , ஊழலை ஒழிக்க விரும்புகிறது. பாஜக, காங்கிரஸ், கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும்.
இந்த வாக்குறுதிகளை வழங்கும் நிகழ்வில், திரு அரவிந்த் கெஜ்ரிவால், மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சியில் சார்பில், பல பாஜக கட்சியினர் போட்டியிடுகின்றனர். நாளை பாஜக கட்சிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே,
கோவா மக்கள், கோவா மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, டில்லி மக்கள் தனிப்பெரும் மெஜாரிட்டியை கொடுத்து, பாஜக வையும், காங்கிரஸையும் விரட்டி அடித்தது போல், நீங்களும் செய்ய வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் கோவா மக்களை கவர்ந்த தோடு, கோவா மக்களுக்கு நம்பிக்கையையும் அளித்து இருக்கிறது. சண்டிகரில் கிடைத்த வெற்றி
கோவாவிலும், பஞ்சாபிலும், நிச்சயம் கிடைக்கும். இது, புதுச்சேரியிலும் பஞ்சாயத்து தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
“நல்லவர்கள் லட்சியம், நாளை வெல்வது நிச்சயம்”
“மக்களை நம்பினார், நிச்சயம் கைவிடப்படார்.”
இது ஊழலை ஒழிக்க விரும்புவோரின், ஏக மனதான தீர்ப்பு.
தொகுப்பு
கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.