உழவர்களுக்கு அளிக்கப்படும் மானியம்.
- கிராமம் தோறும் இருக்கும் உழவர் உதவியகம் என்றோ ஒரு நாள் திறந்தாலும், அலுவலரோ, இயக்குனரகத்தை அணுகுமாறு நமக்கு அறிவுறுத்துவார் . இப்படிப்பட்ட அதிகாரிக்கு மாதச் சம்பளம் சரியாக சென்றடையும்.
- இயக்குனரகத்தில் இருக்கும் உதவியாளரை அணுகும் பொழுது, அவர் அருகில் இருக்கும் கணிணி மையத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்வார். சரி என்று சமர்பித்தால் இது பழைய படிவம் தம்பி, புதியது என்னிடத்தில் உள்ளது அதை வாங்கிக்கொண்டு பூர்த்தி செய் என்று அறிவுறுத்துவார். இப்படிப்பட்ட அதிகாரிக்கு மாதச் சம்பளம் சரியாக சென்றடையும்.
- உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கும் பொருட்டில், கிராம வருவாய்துறை அதிகாரியை நாம் நாடும்போது, பொத்தாம் பொதுவாக அவரை கவனித்தாயா இவரை கவனித்தாயா என்று நமக்கு பதில் வரும்.
- இல்லை சார் என்றவுடன், “இன்று போய் நாளை வா” என்ற அத்தியாயம் உங்களுக்காக அந்த அதிகாரி மூலம் உருவாக்கப்படும். இப்படிப்பட்ட அதிகாரிக்கு மாதச் சம்பளம் சரியாக சென்றடையும்.
- ஒரு நாள், உங்களுக்கு உணவில் உப்பு அதிகமாய் சேரும் பட்சத்தில் ரோஷத்தின் வெளிப்பாடாய் விஜிலன்ஸ் அதிகாரியை அணுக சொல்லும்.
- அங்கு அவர்கள், உங்களை முகபாவனைகள் மூலமோ, உடல்மொழி மூலமோ, சைக்காலஜிக்கல் கவுன்சிலிங், முக்கியமாக பஞ்சாயத்துகாரராக அவர்கள் விஸ்வரூபம் எடுப்பதை நீங்கள் அவசியம் காண்பீர்கள்.
- சரிங்க தம்பி, இப்பொழுது போய் அந்த அரசு அதிகாரியிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள் சான்றிதழை தந்தாலும் தருவார் என்றுTwist வைப்பார். இப்படிப்பட்ட அதிகாரிக்கும் மாதச் சம்பளம் சரியாக சென்றடையும்.
- இறுதியாக, 7 மாதங்களுக்கு பிறகு லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழை பெற்ற மகிழ்ச்சி இன்றெனக்கு.
- விவசாய பொருட்களை மலிவு விலையில் நீங்கள் வாங்கி உண்ணுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு கிடைக்கும் மானியம் உங்களையும் மறைமுகமாக சென்றடைகிறது என்றே பொருள்.
- ஒரு மாடு 5+ லிட்டர் தண்ணீரும், 2 கிலோ திரவ உணவும், 1/2 கிலோ உளர் உணவும் உண்ட பிறகுதான், ஒரு லிட்டர் பால் தருமாம். அதை பராமரிக்கும் செலவு, ஆள் கூலி என கணக்கிட்டுப் பார்த்தால், Accord Hotel லில் வழங்கப்படும் தேநீரின் விலை தான் நீங்கள் கொடுக்க வேண்டும். ஆக, மானியத்தை விவசாயி மட்டும் அனுபவிக் கவில்லை, அது ஒரு தொடர்கதை.
- இந்த கள்ளம் நிறைந்த அரசு அதிகாரிகளை பணியமர்த்திய தேர்வர்களுக்கு என்னுடைய முதற்கண்டனம்!
- கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளை, தேர்ந்தெடுத்த சக மனிதர்களின் விரல்களுக்கு என்னுடைய ஆத்திரமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
- நீங்கள் உண்ணுவதற்காகவே நாங்கள் உழைக்கிறோம். ப்லீஸ் மறக்க வேண்டாம்!
- உரியவர்களை நேரில் வந்து கண்டிக்க முடியாத காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்று காரணத்தினாலும், இன்று நீங்கள் குடிக்கும் தேநீரில் உங்கள் விரலை ஒரு முறை சுட்டுக் கொள்ளுங்கள்!
தொகுப்பு:
வேளாண் குடி
அரியாங்குப்பம்
Dr. ஆ. ஜெயராஜன்
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.