இந்த பட்ஜெட்டில், மத்திய உள்துறைக்கு ஒதுக்கீடு செய்த தொகை ரூ 1,85,776.94 கோடி. இதில்.

  • மத்திய காவல் உள்துறைக்கு ஒதுக்கீடு ரூ 1,17,687.99 கோடி.

மீதமுள்ள தொகையில் 8 யூனியன் பிரதேசங்களுக்கும், பேரிடர் மேலாண்மை துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு, கடந்த முறை ஒதுக்கீடு செய்ததை விட 11.5 சதவீதம் அதிகம்.

கடந்த 2021-2022 ல் ஒதுக்கீடு செய்த விவரம்.

  • மொத்த ஒதுக்கீடு ரூ 1,66,547 கோடி
  • இதில் மத்திய காவல் துறை ஒதுக்கீடு ரூ 1,03,803 கோடி.
  • எட்டு யூனியன் பிரதேசங்கள் ரூ 53,026 கோடி.
  • மற்றவை ரூ 9718 கோடி.
  • எட்டு யூனியன் பிரதேசங்கள் ஒதுக்கீடு விவரம்.
  • ஜம்மு காஷ்மீர் ரூ 30757 கோடி.
  • லடாக் ரூ 5,958 கோடி.
  • அந்தமான் தீவுகள் ரூ 5,317 கோடி.
  • சண்டிகர் ரூ 4,661 கோடி.
  • புதுச்சேரி ரூ 1,730 கோடி.
  • லட்ச தீவுகள் ரூ 1,441 கோடி.
  • டையு டாமன் ரூ 1,419 கோடி.
  • மொத்தம் ரூ 53,026 கோடி.
  • மற்றவை ரூ 9,718 கோடி.
  • மொத்தம் 62 744.கோடி.

இந்த 2022-2023 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தொகை ரூ 68,089 கோடி. கடந்த பட்ஜெட்டில் வந்ததை விட இந்த பட்ஜெட்டில் 9 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. இதில் புதுச்சேரிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது, இம்மாத இறுதியில் தெரியும்.

புதுச்சேரி முதலமைச்சர் கவனத்திற்கு: மத்திய நிதியமைச்சர் உறுதியளித்தது போல் 40 சதவீதமாக இருந்தால். சுமார் ரூ 4500 கோடி புதுச்சேரிக்கு கிடைக்கும். வழக்கம் போல டில்லி போகாமல், புதுச்சேரியிலே இருந்தால் ரூ 2100 கோடி கிடைக்கும்.

தொகுப்பு

கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »