தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களே! உங்களுக்கு தேவையான ஆவணங்கள்,  ஆதாரங்கள் தகவல் திரட்டு.

1. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. [மத்தியத் தகவல் ஆணையம் வழக்கு எண் (CIC/DS/A/2001/00050/2/04/2012) கேரள உயர்நீதிமன்றம் WP(C) NO&272 of 2007 (L)]

2. மனுதாரர் ஆவணங்கள், கோப்புகளைப் பார்வையிட வரும்போது அவருக்கு உதவியாக இன்னொருவருக்கும் இசைவளிக்க வேண்டும் (மத்திய தகவல் ஆணையம் வழக்கு எண் (CIC/SG/A/2009/000601)

3. மொழிபெயர்ப்பாளரை மனுதாரர் அழைத்து வந்தால் அவருக்கும் இசைவளிக்க வேண்டும். (CIC/AD/A/2013/000761/4.4.2013)

4. மாதிரிப் பொருட்களை மனுதாரர் கேட்டால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அல்லது பணி நிறைவடைந்தாலும் வழங்கவேண்டும். (CIC/WBA/A/00259/260/261/22.5.2006)

5. மனுதாரருக்கு அனுப்பும் மறுமொழியில் அல்லது தகவலில் அல்லது கடிதப் போக்குவரத்தில் பொதுத் தகவல் அலுவலர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை. (CIC/691/SC/A/2006.F.NO.CIC/MA/A/2006/00146165/20.06.2006)

6. பணியாளர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அவர் தொடர்பான குறிப்புக்கோப்பு படியைக்கேட்டாலும் தரவேண்டும். ;. (CIC/117/ICPM/2006/F.NO.PBA/061/94/28.9.2006)

7. அரசு ஊழியரின் ஆண்டு மந்தன அறிக்கையினைத், தொடர்பான ஊழியர் கேட்டால் கட்டாயம் காண்பிக்கவேண்டும். (APPEAL NO.7631/2002/12.05.2008)

8. மனுதாரர் கோரிய தகவல் தொடர்பான கோப்பு காணாமல் போய்விட்டது என அவருக்குத் தெரிவித்தால் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும். [WP(C) NO.2132/2009,WP(C)NO.2143/2009/19.01.2006]

9. ஆணையம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் பொதுத்தகவல் அலுவலர் நேரில் வரவில்லை எனில் அவருக்குத் தண்டம் விதிக்கலாம். (WP.NO.44805/2012/10.1.2013)

10. மனுதாரர் தகவல்கோரி அனுப்பி மனுவை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டபின், அது வரப்பெறவில்லையென்று பொதுத்தகவல் அலுவலர் தெரிவித்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மனுதாரருக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்கவேண்டும்.(CIC/SM/A/2012/001061)1.5.2013).

தொகுப்பு

கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »