மத்திய ஒன்றிய அரசு, புதுச்சேரியின் மின் பகிர்வு அரசு துறையை தனியார் மயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், புதுச்சேரியின் மின்துறை ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும், அவர்களுடைய போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், கட்சிகள் மற்றும் அமைபினர்களும் பங்குகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் வருகின்றனர். புதுச்சேரி மின் வாரியத்திற்கு ஏன் மக்களின் முழு ஆதரவு கிடைக்கவில்லை? ஒரு அலசல்.
மத்திய ஒன்றிய அரசு, தான் பொறுப்பு ஏற்றதிலிருந்து பல அரசு நிர்வாகங்களை தனியார் மயமாக்கி வருகிறது. இதனால், மத்திய ஒன்றிய அரசு மேல், நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் வருகிறது. இருந்த போதிலும், எந்த ஒரு போராட்டத்திற்கும் அஞ்சி, ஒன்றிய அரசு தன் நடவடிக்கைகளை மாற்றிகொண்டதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம், பொது மக்களின் 100 சதவீத ஆதரவு, ஒன்றிய அரசை எதிர்க்கும், எந்த அரசு துறைகளுக்கும் கிடைபதில்லை.
அதற்கான காரணத்தை நாம் அலசவேண்டியுள்ளது.
- சுதந்திரத்திற்கு பிறகு மக்களால், மக்களுக்காக, அமைக்கப்பட்ட அனைத்து அரசு துறைகளும், மக்களுக்கான பணிகளை, பணிவுடன் செய்து வந்தனர்.
- பின், மக்களுக்கு பனி செய்வதை ஒரு கடமை என்பதை மறந்து, அதை ஒரு பாரமாக நினைத்து, ஏனோதானோ என்று பணிகளை செய்ய தொடங்கினர்.
- பின், மக்களுக்கான வேலைகளை செய்ய மறுத்தும், காலதாமதம் செய்யவும் ஆரம்பித்தனர்.
- துரிதமாக பணிகளை செய்ய, கையூட்டு (லஞ்சம்) எதிர்பார்த்து பல வேலைகளை, கிடைப்பின் போட்டு வைத்தனர்.
- கையூட்டு (லஞ்சம்) கொடுக்கும் நபர்களுக்கு மட்டும் சரியான நேரத்திற்கு வேலைகள் நடந்தன.
- ஒரு கட்டத்தில், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் இனி நடக்காது என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
மேற்படி விஷயங்கள், பொதுவாக அரசு துறைகள் அனைத்திற்கும் பொருந்தும். அதில் மின் துறையும் விதிவிலக்கல்ல. மின் துறையை பொறுத்தவரையில், தற்போது கடைசி நிலையில்தான் இருந்து வருகிறது. அதாவது, கையூட்டு இல்லாமல் எந்த வேலைகளும் நடப்பதில்லை.
காரைகால் மின்துறை ஊழியர்கள் மக்கள் உயிரை வாங்கி வருகின்றனர். எந்த வேலைக்கும் எலக்ட்ரீசியன் என்ற ப்ரோக்கர் இல்லாமல், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நடத்த முடியவில்லை. நேரடியாக லஞ்சம் வாங்கினால் மாட்டிகொள்வோம் என்று ப்ரோக்கர்களை நடுவர்களாக செயல் படுத்தி வருகின்றன.. நான் அறிந்த வரையில் எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்?
- தெரு விளக்குகள் எரியவில்லை என்ற புகாருக்கு லஞ்சம், ரூ 50 முதல் 100 வரை.
- மின் இணைப்பு சரியாக வரவில்லை (loose contact) போஸ்டில் ஏறி சரி செய்ய வேண்டும் என்ற புகாருக்கு லஞ்சம் ரூ: 100 முதல் 200 வரை.
- பழுதான மீட்டரை நீக்கி, புதிய மீட்டர் மாற்றித்தர லஞ்சம் ரூ: 500 முதல் 1000 வரை.
- தற்காலிக மின் இணைப்பிற்கு லஞ்சம் , ரூ 5000
- வீட்டு மின் இணைப்பு பெற லஞ்சம், ரூ 10000.
- வணிக மின் இணைப்பு பெற லஞ்சம்,ரூ 20000.
- தொழிற் சாலைகளுக்கு உயர் மின் அழுத்த இணைப்பு பெற லஞ்சம் ரூ 50000.
- அப்ரூவல் பிளாட் லே அவுட்டுக்கு இணைப்புகள் பெற லஞ்சம் ரூ 1,௦௦,௦௦௦ க்கு மேல்.
இதற்கு எத்தனை குறை தீர்ப்பு ஆணையங்கள் வந்தாலும், ஒரு பயனுமில்லை.
- ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தை தனக்கு தானே குறைத்து கொண்டனர். அதை எந்த ஆணையமும் கேட்டபாடில்லை.
- அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், இருக்கையில் அமர்ந்து செய்தியை சொல்லும் அளவிக்கும் இருக்கைகளும் கொடுப்பதில்லை, மரியாதையும் கொடுப்பதில்லை.
- ஒவ்வொரு அலுவலரின் மேஜையிலும் வேலைகள் மிகுந்த தேக்க நிலையிலேயே உள்ளன.
- எந்த அலுவலரின் பதவியும் அவரவர் மேசைகளின் மேல் எழுதி வைப்பதில்லை.
இப்படி புலம்ப இன்னும் பல விஷயங்கள் உள்ளன. எனவேதான் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் எந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, திருடர்களுடன் கூட்டு சேர பலர் தயாராவதில்லை.
- ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் போக்கை கண்டு கவலைபடுவதா? அல்லது
- இந்த லஞ்ச ஆசாமிகளிடமிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைக்கிறதே என்று சந்தோஷப் படுவதா? என்ற இரண்டாம் கெட்ட நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.