தூங்கும் அதிகாரிகளும், அவர்களை தாங்கும் ஆட்சியாளர்களும்

புதுச்சேரியில், ஜனநாயக அமைப்பு என்பது கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லை.

பாராளுமன்ற உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினராலும் எந்த பலனும் இல்லை.

மாநில தகுதி பற்றியோ, நிதிப்பற்றாக்குறை பற்றியோ பேசுவதில்லை. மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளை பேசுவதில்லை.

கொரானா நிவாரணம், மழைக் கால நிவாரணம் கூட பெற்று தர இவர்களால் முடிய வில்லை.

அடுத்த ஜனநாயக அமைப்பான பஞ்சாயத்து தேர்தல் படாத பாடு பாடுகிறது. உயர்நீதி மன்றம் உச்ச நீதிமன்றம் என நீதிமன்றம் நீதி மன்றமாய் அலைகிறது.

அடுத்த ஜனநாயக அமைப்பு கூட்டுறவு அமைப்புகள்.  கூட்டுறவு துறை, கூட்டுறவு சங்கங்கள். கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க வேண்டியது, கண்காணிக்க வேண்டியது, கூட்டுறவு துறை. சங்கங்களை தணிக்கை செய்வது, ஆய்வு செய்வது, நிர்வகிப்பது, கூட்டுறவு துறையின் மூலதனம் ரூ 314 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த துறையில் 50 சதவீதம் காலியிடங்கள் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ் சுமார் 800 சங்கங்களுக்கு மேல் உள்ளன.
இவற்றில் சுமார் 300 க்கு மேல் மூடப்பட்டு விட்டன. கூட்டுறவு சங்கங்களில் 3000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.இன்னும் பெரும்பாலான சங்கங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன..

கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது, சேவை நோக்கத்திற்காகவும்,
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களை சுரண்டலிலிருந்து விடுவிக்கவும், விலைவாசி உயர்வை தடுக்கவும்,  நியாய வட்டியில் கடன் வழங்கிடவும் என உன்னத உயர்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு சீரழிந்த நிலையில் உள்ளது.

இதற்கு காரணம், தூங்கும் அதிகாரிகளும், அதை தாங்கும் ஆட்சியாளர்களுமே.

கடந்த ஏழு ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை என்ற காரணம் காட்டி. புதுச்சேரியை அதள பாதாளத்தில் கொண்டு சென்றனர். இந்த ஏழு ஆண்டுகளாக அதிகாரிகளும் சம்பளத்தை வாங்கி கொண்டு  வந்தனர் தவிர மக்கள் மணி செய்ததாக தெரியவில்லை.

அரசு சார்பு நிறுவனங்கள். கூட்டுறவு நிறுவனங்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலை. நூற்பு ஆலை. மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள். மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள். உள்ளாட்சி துறை ஊழியர்கள். தனியார் பள்ளிகள் ஆசிரியர்.
என சுமார் பத்தாயிரம் பேர் வாழ்க்கை வாழ்வாதாரம். கேள்விக்குறி யானது. சம்பளம் இல்லை, வேலை இல்லை.
இதனால் பாதிக்கப்பட்டது,
இவர்கள் மட்டும் அல்ல.
இவர்களை சார்ந்த குடும்பத்தினருமே.

மேலும் அவர்களுக்கு கடன் கொடுத்த கூட்டுறவு கடன் சங்கங்களும், வீடு கட்டும் கூட்டுறவு சங்கங்களும், நகர கூட்டுறவு வங்கிகளும், மாநில கூட்டுறவு வங்கிகளும், கிராம கூட்டுறவு வங்கிகளும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

இதன் பாதிப்பை எதுவுமே கண்டுகொள்ளாமல், ஒரு மக்கள் அரசும், கடற்கரை காற்று வாங்கும் அதிகாரிகளும்,  யாருக்காக பணிபுரிகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

உதாரணமாக பாசிக்கில பணிபுரியும் ஊழியர், அந்த கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி இருப்பார். வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி இருப்பார். அவருக்கு 50 மாத காலமாக சம்பளம் இல்லை.  அவர் எப்படி கடனை செலுத்த முடியும்? குடும்பத்தை கவனிப்பாரா? கடனை கட்டுவாரா?

ஒரு பக்கம் கடனை செலுத்த சொல்லி சங்கங்கள் அச்சுறுத்துகின்றன. மறுபக்கம்,  வீடு ஜப்தி என வட்டி அபராத வட்டி,  என வட்டி மேல் வட்டி போட்டு வீட்டை ஏலம் விட துடிக்கிறது. வீட்டில் குடும்பம் பசி பட்டிணியோடு.

இதே நிலை புதுச்சேரியில் 10000 பேருடைய நிலையாக இருக்கிறது.

இவர்களுக்கு கடன் வழங்கிய சங்கங்கள், சங்கங்களுக்கு கடன் வழங்கிய மாநில கூட்டுறவு வங்கிகள். இந்த வங்கிகளில் பொது மக்கள் போட்ட டெப்பாசிட், இதை எதையுமே கவனிக்காமல், மனிதாபிமானமே இல்லாமல். காலம் தள்ளினால் போதும் என்ற நிலையை அரசு எடுக்கிறதே இது சரியா?

அரசு என்பது என்பது விழிப்புணர்வோடு செயல்படுவது. மக்களை பாதுகாப்போடு வைத்து இருப்பது. அதன் படி செயல் படுகிறதா என்பதே கேள்வி.

10000 பேர் இன்று நடைபினமாக வாழ யார் காரணம்?

இதற்கு எதற்கு அரசு? இதற்கு எதற்கு இவ்வளவு அதிகாரிகள்?

இந்த பிரச்னையை தீர்க்க முடியாத அரசு அதிகாரிகள் எங்களுக்கு தேவை இல்லை என நாங்கள் முடிவு எடுத்தால்.

ஒரு ஒரே நாள் அமைச்சர் அதிகாரிகள் கூடி இதற்கு சரியான முடிவு எடுக்க முடியாதா?

இதற்கு பிறகாவது தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு.
வேலை செய்தால் நல்லது.

ஆட்சியாளர்களும், நல்ல புத்தி வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நல்லது.

10000 பேரை மட்டும் அல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தாரையும். பசி பட்டிணியோடு.. கொன்ற பழி உங்கள் மீது வந்து சேரும்.

இந்த 10000 பேராவது.. குடும்பத்தோடு வீதியில் இறங்கி போராடினால், நிச்சயம் விடிவு கிடைக்கும்.
கஞ்சி குடிப்பதற்கு இலார் காரணம் இவை எனும் அறிவும் இலார்..

பஞ்சமோ பஞ்சம் என்று துடி துடித்து நித்தம் பரிதவிப்பு. துஞ்சி மடிகின்றாரே இவர் துயர் தீர்க்க ஓர் வழியில்லை யோ.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால். என்ற பாரதி வரி தான் நினைவுக்கு வருகிறது.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்

..

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »