-
- உங்களுக்கு தெரியுமா?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது எப்படி?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்துவதற்கு, தனி நடைமுறை பின்பற்ற படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கீழ் கண்ட மூன்று வழிகளில் திருத்தப்படலாம்.
- பாராளுமன்றத்தில், எளிய பெரும்பான்மை simple majority அடிப்படையில் சில ஷரத்துகள் திருத்தியமைக்கலாம்.
- பாராளுமன்றத்தில் அருதிப் பெரும்பான்மை special majority மூலம் திருத்தியமைக்கலாம்.
- சில ஷரத்துகள் பாராளுமன்றத்தில் அருதிப் பெரும்பான்மைக்குப் பின்னர் மாநிலங்களில் பாதிக்கு குறையாத சட்டசபைகளாலும், ஏற்கப்பட வேண்டும். Special majority and ratification by atleast one half of the legislatures…
- உங்களுக்கு தெரியுமா.
இந்திய யூனியனில், ஒரு புதிய மாநிலத்தை சேர்க்க அல்லது நிறுவ முடியுமா?
முடியும் என்று ஷரத்து 2 கூறுகிறது.
பாராளுமன்றம் ஒரு சட்டத்தின் வாயிலாக பொருத்தம் என கருதும் வரையறைகள். நிபந்தனைகள் அடிப்படையில் இந்திய ஒன்றியத்தில் புதிய மாநிலங்களை சேர்க்கலாம்.
இவ்வாறுதான், கோவா டையு டாமன் பகுதிகள்,கோவா சீரமைப்பு சட்டத்தின் கீழ் கோவா தனி மாநிலம் ஆக ஆக்கியும். டையு டாமன் தனி யூனியன் பிரதேசமாக்கியது.
பின்னர் ஷரத்து 2 ன் கீழ் இந்திய ஒன்றிய அரசு கோவாவை மாநில மாக சேர்த்தது.
இது நடந்தது 1987ல்
3. உங்களுக்கு தெரியுமா.
சட்டம் இயற்றுவதற்கு வசதியாக. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஷரத்து 246 ல், மூன்று பட்டியலை கூறுகிறது.
- மத்திய பட்டியல்,
- மாநில பட்டியல்,
- இணைப்பு பட்டியல்.
மத்திய பட்டியலில் 97 துறைகள் உள்ளன. பாதுகாப்பு வெளி விவகாரம் தபால் தந்தி ஆகியவை.
மாநில பட்டியலில், 66 துறைகள் அடங்கும், இத்துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் அந்த மாநிலத்துக்கு மட்டுமே உள்ளது.
இணைப்பு பட்டியலில், 47 துறைகள் உள்ள இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுக்கும், சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன.
இணைப்பு பட்டியலில் உள்ளபடி, மத்திய ஒன்றிய அரசு சட்டம் இயற்றியும். மாநில அரசு சட்டம் இயற்றியும், ஏதாவது முரண்பாடு ஏற்படுமானால், மத்திய ஒன்றிய அரசின் சட்டமே செல்லும்.
Union list 97 depts
State list 66 depts
Concurrent list 47 depts..
- உங்களுக்கு தெரியுமா.
1960 ம் ஆண்டு.. சட்டத்தின் வாயிலாக ஷரத்து 3 ஐ பயன்படுத்தி, பம்பாய் மாநிலத்தை மகாராஷ்டிரா மாநிலம் என்றும், குஜராத் மாநிலம் என்றும் இரண்டாக பிரித்தது.
1964 ல் நாகாலாந்து எனும் புதிய மாநிலத்தை உருவாக்கியது.
1966 பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாப்.. ஹரியானா என இரண்டு. மாநில மாக பிரித்தது..
1970 ல் யூனியன் பிரதேசமான இம்மாச்சல பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேலும் 1971 ல் மணிப்பூர்,
திரிபுரா, மேகாலயா, ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநில அந்தஸ்து பெற்றன.
இத்துடன் மிசோரம், அருணாசல பிரதேசமும் மாநில அந்தஸ்து பெற்றன.
1968 ல் மெட்ராஸ் மாநிலம்.
தமிழ்நாடு மாநிலம் என பெயர் மாற்றம் அடைந்தது.
1973 ல் மைசூர் மாநிலம்.
கர்நாடகா மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- உங்களுக்கு தெரியுமா?
ஆறு வகையான உரிமைகளும், நிச்சயமாக ஒரு குடிமகனுக்கு தேவையான அடிப்படை உரிமைகளே. இவை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு தந்துள்ளது.
- சமத்துவ உரிமை
Right to Equality..
ஷரத்து 14 முதல் 16 வரை. - சுதந்திர உரிமை. Right to Freedom. ஷரத்து 19 முதல் 22 வரை.
- .சுரண்டலுக்கு எதிரான உரிமை Right against Exploitation. ஷரத்து 23முதல் 24வரை.
- சமய சுதந்திர உரிமை.Right to Freedom of Religion. ஷரத்து 25 முதல் 28 வரை.
- கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்.Cultural and Education Rights. ஷரத்து 29..30.
- அரசியல் அமைப்பு தீர்வு பெற உரிமை. Right to Constitutional Remedies..ஷரத்து 32 முதல் 35 வரை.
இயற்கை உரிமைகளாக இருந்தவை இப்போது அடிப்படை உரிமைகளாக ஆகியுள்ளன.
இதில் அடிப்படை உரிமைகளில் இருந்து சொத்துரிமை Right to property.. பற்றி கூறும் 19 (1) (f) ம் ஷரத்து 31 ம் 44 வது சட்டத்திருத்தம் மூலம் நீக்கப்பட்டு விட்டது. சொத்துரிமை யானது 300 ஏ வின் மூலம். சாதாரண உரிமையாக சேர்க்கப்பட்டது.
- உங்களுக்கு தெரியுமா?
ஷரத்து.13 இந்திய அரசியல் அமைப்பு சட்டம். நாட்டின் மிக உயர்ந்த சட்டம் ஆகும். பிற சட்டங்கள். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மாறாக சட்டங்கள் ஏதேனும் பிறப்பிக்கப்பட்டால். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாக இருந்தால். ஷரத்து 13 ன் படி செல்லாதது ஆக்கலாம். இந்த அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
ஷரத்து14.
இந்த சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் அனைவருக்கும் சம பாதுகாப்பு அளிக்கும்.
ஷரத்து 19.
இந்த சட்டம் இந்திய குடிமக்களுக்கு ஆறு விதமான சுதந்திர உரிமைகளை அளிக்கிறது.இந்த உரிமைகள் ஆட்சியாளர்களால் பாதிக்கப்படும் போது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தட்டிக் கேட்டு தக்க நியாயம் வழங்குகின்றன.
ஷரத்து 22.
இது மிக முக்கியமானது. ஏதோச்சதிகரமாக கைது செய்தல், மற்றும் சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
ஷரத்து 265.
சட்டத்தின் அதிகாரம் இன்றி வரி விதிக்கவோ அல்லது வரி வசூலிக்கவோ கூடாது.
உங்களுக்கு தெரியுமா…
சுதந்திர உரிமையில்…
ஆறு வகையான சுதந்திரங்கள்…
ஷரத்து 19 (1) (a)
பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்..
Freedom of Speech and Expression
ஷரத்து 19(1) (b)
ஆயுதங்கள் இன்றி அமைதியாக கூடுவதற்கு சுதந்திரம்..
Freedom of Assembly
ஷரத்து 19(1) (c)
கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்…
Freedom to form Association.. and Unions
ஷரத்து 19 (1) (d)
இந்தியா முழுவதும் சென்று வர சுதந்திரம்…
Freedom of Movement throughout the Territory of India
ஷரத்து 19(1) (f)
இந்தியாவிற்குள் எப் பகுதியிலும் தங்கி வாழும் உரிமை..
Freedom to Reside and to Settle..
ஷரத்து 19(1) (g)
எந்த தொழில் பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தை செய்யும் சுதந்திரம்..
Freedom of Profession.. Occupation.. Trade.. Business..
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம். செயற்குழு உறுப்பினர். ஆம் ஆத்மி கட்சி. புதுச்சேரி.
பதிவு.
திரு. MMY. ஹமீது. மாவட்ட தலைவர். ஆம் ஆத்மி கட்சி. காரைக்கால்
.