பஞ்சாயத்து தேர்தல் நடத்த இவர்கள் பயப்படுகின்றனர்.
அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான்.
நமது அதிகாரம் முடங்கி போய் விட்டால் மக்கள் நம்மிடம் இருந்து தொடர்பு விடுபட்டால். தனது சர்வ அதிகாரமும் அடங்கி ஒடுங்கி விடும் என்ற பயமே.
ரேஷன் கார்டு கொடுப்பதில் இருந்து, முதியோர் பென்ஷன் வழங்குவதில் இருந்து,வீடு கட்ட கடன் வழங்குவதில் இருந்து.. அரசு சலுகைகளை பெற நம்மை சுற்றியே வர வேண்டும் என எண்ணுகின்றனர்.
இது ஆட்சி அதிகார போதை மட்டும் அல்ல. அடுத்த தேர்தலுக்கும் இப்போது இருந்தே மக்களை தயார். படுத்துவதாகும்.
இப்படி இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட மக்களை இவர்கள் இழப்பார்களா என்ன.
மேலும், சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினரை யாரும் அணுகுவதில்லை.
அதே போல் தான்.
, இந்த பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் மக்கள் இவர்களைத் தான் அனுகுவார்கள். சட்ட மன்ற உறுப்பினர்களைத் யாரும் சீண்ட மாட்டார்கள்.
இங்கு நடப்பது தனி மனித அட்டூழியம் மட்டும் அல்ல. அடிப்படை உரிமைகளை மதிக்காத சட்டப்படி நடக்காத ஆட்சி நடத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது. பாமர மக்கள் தான்.
பள்ளியில் தரம் இல்லை. மருத்துவ மனையில் மருந்து மாத்திரை இல்லை. ரோடுகள் குண்டும் குழியுமான உள்ளன. இவற்றை எல்லாம் கவுன் சிலரிடம் முறையிட்டால் சரியாகி விடும். சில சுயநல கும்பல்களால், இந்த மூன்றாவது ஜனநாயக முற்றிலுமாக சீரழிந்து வருகிறது….
இதில் மத்திய ஒன்றிய அரசும். சரி, உச்ச நீதிமன்றமும் சரி
73, 74 வது சட்ட திருத்தத்தை முறையாக அமல் படுத்ததேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.
இங்கு நடப்பது கட்சிகளே அல்ல.. கம்பெனிகள். தேவை ஏற்படும் போது கூடுவார்கள்.பின்பு அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள். அறிக்கை, போராட்டம்,தேர்தல் வாக்குறுதிகள், எல்லாம் தருவார்கள்.ஆனால் கடைசி வரை பஞ்சாயத்து தேர்தலை நடத்தவே மாட்டார்கள். காரணம், பயம் பயம்.போட்டமுதலீட்டையெடுக்கமுடியாமல் போய் விடுமோ என்ற் பயம்.
சட்ட மன்ற தேர்தலை சந்திக்கவே பல கோடி செலவு செய்கின்றனர்,
அதை மீட்டு எடுக்கவே ஐந்து ஆண்டுகள் போதாது. இதில் பஞ்சாயத்து தேர்தல் வந்து, பங்குதாரர்கள் அதிகம் ஆகி பல கோடி செலவு செய்தால், புதுச்சேரி வருவாய் ஏற்கனவே சம்பளத்துக்கே சரியாக போகிறது.இதில் பஞ்சாயத்து தேர்தல் வேறா?
இந்த விஷயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றாக உள்ளனர்.
மக்கள் நிலைதான் மகாபாவம்.
சட்டத்தின் படி தான் உண்மை யான ஆட்சி. நடக்கிறது என்றால். மத்திய அரசு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
இவர்கள் அதிகாரப்பரவலுக்கு பயந்து கடைசி வரை. நடத்தவே மாட்டார்கள். போல நிலைமை உள்ளது
அப்படியே நடத்தினாலும்.. 73,74 வது சட்ட திருத்தத்தின் படி 29 அதிகாரங்களையும் தர மாட்டார்கள்.
.
.