பஞ்சாயத்து தேர்தல் நடத்த இவர்கள் பயப்படுகின்றனர்.
அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான்.

நமது அதிகாரம் முடங்கி போய் விட்டால்
மக்கள் நம்மிடம் இருந்து தொடர்பு விடுபட்டால்.

தனது சர்வ அதிகாரமும் அடங்கி ஒடுங்கி விடும் என்ற.. பயமே.

ரேஷன் கார்டு கொடுப்பதில் இருந்து…
முதியோர் பென்ஷன் வழங்குவதில் இருந்து…
வீடு கட்ட கடன் வழங்குவதில் இருந்து.. அரசு சலுகைகளை பெற நம்மை சுற்றியே வர வேண்டும் என எண்ணுகின்றனர்..

இது ஆட்சி அதிகார போதை மட்டும் அல்ல…
அடுத்த தேர்தலுக்கும் இப்போது இருந்தே மக்களை தயார். படுத்துகின்றனர்….

இப்படி இருக்கும் சூழலில்… இப்படிப்பட்ட மக்களை இவர்கள் இழப்பார்களா என்ன…

சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினரை யாரும் அணுகுவதில்லை….

அதே போல் தான்… இந்த பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால்… மக்கள் இவர்களைத் தான் அனுகுவார்கள்.

சட்ட மன்ற உறுப்பினர்களைத் யாரும் சீண்ட மாட்டார்கள்…

இங்கு நடப்பது தனி மனித அட்டூழியம் மட்டும் அல்ல… அடிப்படை உரிமைகளை மதிக்காத சட்டப்படி நடக்காத ஆட்சி நடத்துகின்றனர்….

இதனால் பாதிக்கப்படுவது. பாமர மக்கள் தான்….

பள்ளியில் தரம் இல்லை..
மருத்துவ மனையில் மருந்து மாத்திரை இல்லை…
ரோடுகள் குண்டும் குழியுமான உள்ளன…

இவற்றை எல்லாம் கவுன் சிலரிடம் முறையிட்டால் சரியாகி விடும்…

சில சுயநல கும்பல்களால்… இந்த மூன்றாவது ஜனநாயக அமைப்பு முற்றிலுமாக சீரழிந்து வருகிறது….

இதில் மத்திய ஒன்றிய அரசும்.. சரி… உச்ச நீதிமன்றமும் சரி…
73 74 வது சட்ட திருத்தத்தை முறையாக அமல் படுத்த… தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்…

இங்கு நடப்பது கட்சிகளே அல்ல.. கம்பெனிகள்.

தேவை ஏற்படும் போது கூடுவார்கள்… பின்பு அவரவர் வேலையை பார்க்க போய் விடுவார்கள்… அறிக்கை.. போராட்டம்.. தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் தருவார்கள்… ஆனால் கடைசி வரை பஞ்சாயத்து தேர்தலை நடத்தவே மாட்டார்கள்…
காரணம்.. பயம் பயம்…

சட்ட மன்ற தேர்தலை சந்திக்கவே பல கோடி செலவு செய்கின்றனர்…
அதை மீட்டு எடுக்கவே ஐந்து ஆண்டுகள் போதாது… இதில் பஞ்சாயத்து தேர்தல் வந்து… பங்குதாரர்கள் அதிகம் ஆகி பல கோடி செலவு செய்தால்… புதுச்சேரி வருவாய் ஏற்கனவே சம்பளத்துக்கே சரியாக போகிறது…

இதில் பஞ்சாயத்து தேர்தல் வேறா…

இந்த விஷயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தில்.. ஒன்றாக உள்ளனர்…

மக்கள் நிலைதான்… மகாபாவம்…

சட்டத்தின் படி தான் உண்மை யான ஆட்சி. நடக்கிறது என்றால்… மத்திய அரசு… உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும்.

இவர்கள் அதிகாரப்பரவலுக்கு பயந்து கடைசி வரை. நடத்தவே மாட்டார்கள்…
அப்படியே நடத்தினாலும்.. 73..74 வது சட்ட திருத்தத்தின் படி 29 அதிகாரங்களையும் தர மாட்டார்கள்….

பஞ்சாயத்து தேர்தல் நடத்தினால்… நமது அதிகாரம் பறி போய் விடும் என்ற பயமே பஞ்சாயத்து தேர்தல் நடத்தாதற்கு காரணம்….

இறுதி தீர்ப்பு… நாளை வெளி வரும்.
.
.

புதுச்சேரி. பஞ்சாயத்து தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது…

தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில். குழு… அது இட ஒதுக்கீடு பற்றி ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்…

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்ற வட இந்திய இறக்குமதி ஓய்வு பெற்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சம்பளம் வழங்கப்பட்டது தான் தெண்டம்…

இது எப்படி இருக்கிறது என்றால்… அறுக்க தெரியாதவன் கையில் 58.அரிவாளை கொடுத்தால் எப்படி இருக்கும்… அதே கதைதான்… இங்கும் நடைபெறுகிறது…

புதுச்சேரியில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது…

பஞ்சாயத்து தேர்தல்.. நடைமுறை சட்டம்.. திருத்தம்… 73..74 வது சட்டத்திருத்தம் தெளிவாக இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.. இதை வைத்து இட ஒதுக்கீடு செய்ய தெரியாத அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு எதற்கு… நமது வரிப்பணம் வீணா வது தான் தவிர வேறு ஒன்றும் இல்லை…

அண்டை. மாநிலங்களில்.. இட ஒதுக்கீடு எப்படி பின்பற்ற படுகிறது… என்று ஆய்வு செய்து அதன் படி நடந்தாலே போதும்….

பஞ்சாயத்து தேர்தலை நடத்த..
அரசுக்கும் அக்கறை இல்லை… அதிகாரிகளுக்கும் அக்கறை.. இல்லை…

மக்கள் தான் இதில் போதிய. அக்கறை. எடுத்துக் கொள்ள வேண்டும்….

பஞ்சாயத்து தேர்தல் நடத்த விட்டால்… வரி செலுத்த மாட்டோம்… என்ற முடிவை எடுக்க வேண்டும்…

அப்போது தான் இதற்கு ஒரு முடிவு தெரியும்.

73 74 வது சட்டத்திருத்தம்.. தெளிவாக சொல்கிறது.. இதை கூட சரியாக படிக்காமல்.

பின்பற்றாமல்… அதன் படி செய்யாமல்.
. வேண்டும் என்றே சட்ட சிக்கலை உருவாக்கி பஞ்சாயத்து தேர்தலை நடத்தாமல்.

வழக்கு போட்டு வாய்தா மேல் வாய்தா வாங்கி..
அண்டை மாநிலங்கள் புதுச்சேரி மாநில செயல்பாடு பார்த்து எள்ளி நகையாட வைத்து இருக்கிறது…

கொஞ்சம் கூட கூச்சம் வெட்கம் இல்லாமல்.

தேர்தல் வாக்குறுதிகள் கூட மறந்து இருப்பது… மக்கள் விரோத நடவடிக்கையாகவே தெரிகிறது….

உண்மையிலேயே புதுச்சேரி அரசுக்கு அக்கறை இருக்குமானால்.

அனைத்து கட்சி கூட்டம் போட்டு ஒருமித்த கருத்தாக பஞ்சாயத்து தேர்தல் நடத்த வழிமுறைகளை தேர்தல் ஆணையருக்கு சொன்னால் பிரச்சினை முடிந்து விடும்…

வழக்கு நிலுவையில் இருக்கிறது.. என்ற பழைய பல்லவியை பஞ்சாங்க பாடலை பாடுவது.
.ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயல்…

பஞ்சாயத்து தேர்தல் நடத்த பயமா..

தேர்தல் நிற்க ஆள் இல்லையா.

அதிகாரத்தை பகிர்ந்து தர மனம் இல்லையா..

ஒரே நாள்… ஒரு நாள்..

அனைத்து கட்சி கூட்டம்.. தெளிவான முடிவு எடுத்து… தேர்தல் ஆணையரிடம்… ஒருமித்த கருத்தோடு முடிவை அறிவிக்கலாம்…

நீதிமன்றம் சென்றவர்களை அழைத்து பேசி வாபஸ் பெற செய்யலாம்…

உண்மையிலேயே…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் இருந்தால்…

ஜனநாயகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தால்…

ஓட்டு போட்ட மக்களுக்கு மதிப்பு அளிப்பதாக இருந்தால்…

இந்த ஆட்சி உண்மையிலேயே சட்டத்தின் படி நடப்பதாக இருந்தால்….

பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும்….

ஓட்டுக்கு பணம் கொடுக்க. தேவையில்லை…

குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்தாலே போதும்….

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »