ஒரு திரைப்படத்தில் விவேக் வசனம்.
“என்னடா காக்கானு குரல் வருது? 5 ரூபாய் கொடுத்து காக்கா பிரியாணி சாப்பிட்டா, காக்கா குரல் வராம, உண்ணிகிருஷ்னன் குரலா வரும்? என்பதை போல, ஆயிரம், இரண்டாயிரம் வாங்கி ஓட்டுப் போட்டால், ஒழுக்கமான அரசியல் எப்படி நடக்கும்?
திருடனிடம் வீட்டு சாவியை கொடுத்து, வீட்டை பார்த்து கொள்ள சொல்லி பாதுகாப்பு தேடுகிறோம்.
நமது மாநிலத்தில் எதுவுமே ஒளிவு மறைவாக நடைபெறவில்லை. நாம் செய்த தவறுக்குத்தான் இந்த தண்டனையை அனுபவித்து வருகிறோம். நம்பி நம்பி, ஏமாறுவதும், நம்மிடையே உள்ள மிகப்பெரிய பலவீனம். ஒற்றுமையின்மையும் இதற்கு ஒரு காரணம். இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.
நமது அடிப்படை உரிமைகள், ஆட்சியாளர்களின் அதிகாரத்தை குவிக்க, நம்மிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. தேர்தல் வாக்குறுதிகள், தேர்தலோடு முடிந்து போய் விடுகிறது.
எவனும் யோக்கியன் இல்லை, எல்லோரும் திருடர்கள் தான், என்ற மனநிலைக்கு நாம் வந்தது தான் காரணம்.
நல்லது எது, கெட்டது எது, நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என அறியாத நிலையில் நாம் இருப்பது, நமது அறியாமை, இயலாமை, கையாலாததனம், மட்டும் அல்ல வறுமையும் ஒரு காரணம் ஆகிறது. இவை யாவுமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
வாழ்வா சாவா என்ற நிலை வரும் போதும், அதே போக்கை கடைப்பிடித்தால், நாம் ஆறறிவு படைத்த மனிதர்களே இல்லை. புலம்பி தீர்ப்பதை விட களத்தில் இறங்கி நியாயம் கேட்கவே, நமக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம், சில அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது.
அதை நாம் சரியாக பயன்படுத்தி வந்தாலே நல்ல வாழ்க்கை நமக்கு கிட்டும். நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள். அதனால், நல்ல ஆட்சி நமக்கு கிடைக்கும். நல்லதே நடக்கும்.
ஆனால் நடப்பது என்ன? நம்மை சுற்றி ஒரு மாய உலகம் உருவாகி, இருக்கும், இருக்காது. வரும், வராது. தரும், தராது. கிடைக்கும், கிடைக்காது.
எதுவுமே நிரந்தர பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை. காரணம் இவர்கள் மக்களுக்கான வர்கள் இல்லை. இவர்களை சுற்றி ஒரு மாய உலகம் இருக்கிறது. இதில் மயங்கி கிடக்கின்றனர். அடுத்த தேர்தல் வரும் போதுதன் இவர்கள் மயக்கம் தெளியும். மீண்டும் அதே நடிப்பு, பற்று பாசம், மீண்டும் ஓட்டுக்கு பணம், இதில் நாம் மயங்கினால், ஐந்து ஆண்டுகளுக்கு நமக்கு அடிமை தண்டனை தான் தீர்வு.அதிகாரம் செய்ய வேண்டிய நாம், அடிமை யாவது தான் மிச்சம்.
அடிமை விலங்கை உடைக்க,
சுதந்திர மனிதராய் விளங்க,
புதிய தோர் சமுதாயம், ஊழலற்ற சமுதாயம் மலர, முதலில் நாம் மாறுவோம். நம் மாநிலத்தை மாற்றுவோம் மக்களை முன்னேற்றுவோம். நேர்வழியில் நாமும் முன்னேறுவோம்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்