அன்பார்ந்த நண்பர்களே, சமூக ஆர்வலர்களே, சமூக அமைப்புகளின் தலைவர்களே, மக்கள் இயக்க தலைவர்களே.
புதுச்சேரி தற்போது சிக்கலில் சிக்கி சீரழிந்து வருகிறது.
எதுவுமே நடக்காதவாறு, நமது அரசியல் தலைவர்கள், ஊடகங்களை தங்கள் வசமாக்கி தலைப்பு செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
சமுக மாற்றத்தை விரும்புபவர்களாக இருந்தால் , ஒன்று நீதியையும், நியாயத்தையும் நிலை நாட்ட நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் நீதி கிடைக்க காலதாமதம் ஆகிறது , ஆகவே மக்கள் மன்றத்தில் முறையிட்டால் மட்டுமே சமூக மாற்றத்துக்கு வழி கான முடியும்.
மூளை முடுக்கு, சந்து பொந்து எங்கும், தெருவெங்கும், கீழ் கண்ட கோரிக்கைகள் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். அது
- மாநில தகுதி.
- நிதிப் பற்றாக்குறை போக்குதல்.
- ரூ 11000 கோடி கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்தல்.
- ரூ 20000 கோடி சிறப்பு நிதி அளித்திட கோரிக்கை வைத்தல்.
- பஞ்சாயத்து தேர்தலை விரைவில் நடத்துதல்.
- பத்தாயிரம் பணியிடங்களை நிரப்புதல்.
- பஞ்சாலை திறக்க நடவடிக்கை எடுத்தல்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவாக செயல்படுத்துதல்.
- சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படுத்துதல்.
- கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துதல்.
- காமராஜர் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுத்தல்.
- சேவை உரிமை சட்டத்தை அமல் படுத்துதல்.
- தகவல் உரிமை சட்ட ஆணைய தலைமை அலுவலகம் அமைத்தல்.
- தொழிற் பேட்டைகள், சர்க்கரை ஆலை, நூற்பாலை திறக்க, புனரமைத்து நடவடிக்கை எடுத்தல்.
- கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்தி கூட்டுறவு ஆலோசனை குழு அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
- பட்ஜெட் ஒதுக்கீடு தொகை முறையாக செலவு செய்தல்
- ணிக்கை அறிக்கை குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
- கைத்தறி விவசாயம் மீன் பிடி தொழில் முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல்.
- வளர்ச்சி குழு அமைத்தல்.
- சம்பளம் தராத அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனம். வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்தல்.
- அரசு அலுவலகங்களை ஒழுங்காக இயங்க நடவடிக்கை எடுத்தல்.
மேற்கண்ட முழக்கங்களை, புதுச்சேரி எங்கும் ஒலிக்க வேண்டும்.
அவர் வாழ்க, இவர் வாழ்க, என்ற அல்லக்கைகள் அளப்பறைகளை கண்டு கொள்ள வேண்டாம். புதுச்சேரி வளர்ச்சி, மக்கள் நலன், ஆகியவற்றில் இனி கழுகுப்பார்வையோடு. சிந்தனைகளை சிதற விடாமல், புதுச்சேரி மக்களிடம் இந்த முழக்கங்களை கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இதையெல்லாம் செய்யாவிட்டால், இந்த அரசு எங்களுக்கு எதற்கு? என்ற கேள்வி கேட்க, ஓட்டு போட்ட அந்த மக்களுக்கு மட்டுமே முழு தகுதி உண்டு.
மக்கள் பலமே பெரும் பலம். மாற்றத்தை அவர்களால் மட்டுமே தரமுடியும்.
உரிமை இழந்தோம். உடமை இழந்தோம். உணர்வை இழக்கலாம்.
மக்கள் விழிப்புணர்வுக்காக.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
செல் 97895 45401.
பதிவு.
திரு. M M Y. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.