புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர், திரு ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி, லடாக் யூனியன் பிரதேசமானது. மத்திய உள்துறை இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 5958 கோடி வழங்கி, மானில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தது .ஆனால், இரண்டாண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அச்சமடைந்துள்ள லடாக் மக்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 13 முறை சட்டமன்ற தீர்மானம் போடப்பட்டுள்ளது. 100 சதவீத நிர்வாக மானியம் 17.42 சதவீதமாக குறைக்காட்டுள்ளது. 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ரூ 11 கோடிக்கு வட்டி கட்ட முடியவில்லை. அரசு சார்பு கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பஞ்சாலை, சர்க்கரை ஆளை திறக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை.
இந்நிலையில் நாம் அடங்கி அடிமையாக வேண்டுமா? 2 ஆண்டுகளிலேயே லடாக் போராட்டம் தொடங்கியுள்ளது. புதுவையில் 58 ஆண்டுகளாக அடங்கித்தான் போக வேண்டுமா? மீண்டும் ஒரு இணைப்பு எதிர்ப்பு போராட்டம் போல அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் இளைஞர்களும், அரசு ஊழியர்களும், ஒன்று திரண்டு போராடாவிட்டால் புதுவைக்கு புதிய மாற்றம் ஏதும் தானாக வந்துவிடாது. லடாக் போராட்டம் புதுவைக்கு வழிகாட்டியாக அமையவேண்டும்.