#AAPPY2022001

இளைஞர்களே, அரசியலை வெறுக்காதீர்கள். நமது நாடு ஜனநாயக  நாடு. நாம் அரசியலை ஒதுக்கினால், தரம் தாழ்ந்தவர்களின் அதிகாரத்தின் கீழ், நாம் அடிமைகளாக்கப்பட்டு, காலம் முழுவதும் கையேந்த வைத்து விடுவார்கள்.

அன்பார்ந்த நண்பர்களே.

பட்ஜெட் என்பது ஒவ்வொரு வருடமும் ஆட்சியாளர்கள், மக்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்புகளாகும்.  முதலில், உத்தேச வரவு செலவு அறிக்கை என்ற பெயரில்,   முதல்வர் சட்டசபையில் உரையாற்றுவார். அதன் படி அரசும், உயர் அதிகாரிகளும், அவற்றை நடைமுறைப்படுத்துவர்.

பட்ஜெட்டில் உரையாற்றிய படி நடக்கிறதா? என்பதை, பொது மக்களாகிய நாம் பொதுவாக  கண்டுகொள்வதில்லை. அதன் விளைவே, நாம் ஏமாற்றப்படுகிறோம்.

கடந்த 2021-2022  பட்ஜெட்டில், முதல்வர் உரையாற்றியது என்ன? அதன் படி நடந்ததா என்பது பற்றிய முழுமையான பதிவு இது.

  • 2021-2022 பட்ஜெட்டில், ஒதுக்கீடு செய்த மொத்த தொகை ரூ 9924.41 கோடியாகும். அதில்,
  1. அரசு ஊழியர்கள் சம்பளம் ரூ 2140 கோடி.
  2. அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் ரூ 1050 கோடி.
  3. கடன் செலுத்த ரூ 1715 கோடி.
  4. மின்சாரம் வாங்க ரூ 1591 கோடி.
  5. முதியோர் பென்ஷன் மற்றும் மக்கள் நல திட்டங்கள்  ரூ 1290 கோடி.
  6. உயர் கல்வி, கூட்டுறவு பொதுத் துறை, மற்றும்  தனியார் பள்ளிகளுக்கான உதவித் தொகை  ரூ 1243 கோடி.
  7. ஆக மொத்தம் ரூ 9229 கோடி.
  8. மீதி ரூ 694.59 கோடி.

கீழ் கண்ட துறைகளின்  நல திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்று,  முதல்வர் அறிவித்தார். இதில், துறை வாரியாக முதல்வர் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா? என்பதை, தகவல் பெறும் சட்ட ஆர்வலர்கள், பயனாளிகள், விழிப்புடன் இதை கண்காணித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அறிவிப்பு என்பது, அறிவிப்போடு நின்று போகிறதா?
அல்லது அதில் ஊழல், முறைகேடுகள் நடக்கின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டியது, அரசுக்கு வரிப் பணம் செலுத்தும், ஒவ்வொருவரின் தார்மீக கடமையாகும்.

எனவே, கடந்த 2021-2022 ல் அறிவித்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் அனைத்தும், இந்த ஆண்டுகளில்  நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதா? என்பதை பார்ப்பது,  கடமையாகும்.

  • விவசாயம் மற்றும் விவசாய நலம். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை  ரூ 124.47 கோடி. 
  1. விவசாயிகளின் வறுமையை ஒழிக்க, அரசு முன்னுரிமை அளிக்கிறது.
  2. ஏக்கருக்கு ரூ 5000 மானியம் அளிக்கப்படும். விதை மானியம், 75 சதவீதம் தாழ்த்தப்பட்டவருக்கும், 10 சதவீதம் மற்ற வகுப்பினருக்கும் அளிக்கப்படும். பூச்சி கொல்லி மருந்து, வேப்பங்கேக்குகள், 75 சதவீதம் மற்ற வகுப்பினருக்கும், 100 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்படும்.
  3. தார்ப்பாய், ஸ்பிரேயர் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
  4. பிளாஸ்டிக் பைப்லைன் வாங்க ரூ 15000 வரை மானியம் வழங்கப்படும். 70 சதவீதம் பொதுப் பிரிவினருக்கும், 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்படும். இதற்காக அரசு 124.47 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது.
  • வனத்துறை மற்றும் கால்நடை துறை – இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 44.88 கோடி.
  1. காரைக்காலில் 1500 ஏக்கர் நிலம், பாசன வசதி பலன் பெறும் வகையில், ரூ 60 லட்சம் செலவில் வாய்க்கால்கள்  தூர்வாரப்படும்.
  2. 75000 மரங்கள், சாலை ஓரங்களில், கல்வி நிலையங்களில், குளக்கரையில், தொழிற்சாலைகளில் நட, நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, 10000 தேக்கு, சந்தனம்,  செம்மரம், விவசாயிகளுக்கு மானிய விலையிலும்,  இலவசமாகவும்,  வழங்கப்படும்.
  3. பசுமை புதுவை திட்டத்தின் கீழ், மனப்பட்டில் பூங்கா அமைக்கப்படும். 70 முதல் 100 ஏக்கர் பரப்பளவில், மிருக காட்சி சாலை அமைக்கப்படும்.
  4. மாடுகளை அபிவிருத்தி செய்ய, தேவையான சினை மருந்துக்களை, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் கோசாலையிலிருந்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. மலபார் ஆடுகள் வளர்க்க, 1000 த்திற்கும்  மேற்பட்ட ஆட்டு பண்ணைகள் அமைக்க படும். அதற்காக, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  6. மாட்டு தீவனத்திற்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். உறுப்பினர் அல்லாத அனைவருக்கும் வழங்கப்படும்.
  7. 4000 பசு மாடுகள், 33 சதவீத மான்யத்தில் தாழ்த்தப்பட்டவருக்கும், 25 சதவீத மான்யத்தில் மற்றவருக்கும் வழங்கப்படும்.
  8. ஆடு வளர்ப்பதற்கும் ,  ஆட்டு பண்ணை வைப்பதற்கும், பயிற்சி அளிக்கப்படும்.
  9. கால்நடை வளர்ப்பு க்காக, 3 ஆம்புலன்ஸ் வாங்க திட்டம் இடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரிக்கு இரண்டும், காரைக்காலுக்கு ஒன்றும்.
  • உணவு பங்கீட்டுத்  துறை – இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 197.50 கோடி.
  1. நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்காமல், நேரடியாக வங்கியில் மூலம் பணம் போடப்படும்.
  2. மத்திய நுகர்வோர் துறையின் மூலமாக, அத்தியாவசிய பொருட்களை வாங்கி விநியோகிக்க, விலை ஏற்ற இரக்கத்தை தடுக்க, மீண்டும் நியாய விலைக் கடைகளை திறக்க, அதற்கு உண்டான விரிவான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.
  • கூட்டுறவு துறைஇதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 69.70 கோடி.
  1. பாகூரில் ரூ 1.67 கோடி செலவில், பால் கோவா தயாரிப்புப் பணி தொடங்கப்படும்.
  2. காரைக்கால் பால் ஒன்றியத்துக்கு ரூ 12 லட்சம் செலவில் குளிரூட்டப்பட்ட வாகனம் வாங்கப்படும்.
  3. பான்லே மூலம், புதிய வகையான இனிப்புகள் உற்பத்தியை, விரிவாக்கம் செய்ய ரூ 2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  4. மணமேடு கிராமத்தில், மணல் குவாரி அமைக்கப்படும்.
    இது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயன் அடைவோருக்கு மட்டும் வழங்கப்படும்.
  • பள்ளி கல்வித் துறைஇதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 742.81 கோடி.
  1. இலவசமாக புத்தகம், நோட்புக், சீருடை, மதிய உணவு, காலை டிபன், போக்குவரத்து சலுகை ரூ 1.00 ஆகியன வழங்கப்படும்.
  2. 5 பள்ளி கூடங்கள் மாதிரி பள்ளி கூடங்களாக தரம் உயர்த்தப்படும்
  3. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படும்.
  4. 100 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. தொழில் நுட்ப தொடர்பு, டிஜிட்டல், இதற்கு ரூ 1.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • உயர் கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி துறைஇதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 296.62 கோடி.
  1. கட்டிட தேசிய பள்ளி நிறுவ ரூ 334.40 கோடி செலவில், திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய  அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
  2. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு, ஏன் பல மாதங்கள் சம்பளம் வழங்க வில்லை? ஓய்வூதியமும் வழங்கவில்லை? என்ற கேள்வி இருக்கிறது.
  • மின்சாரத் துறை.
  1. 24 மணி நேரமும் மின்சாரத்தை தர, இந்த அரசு உறுதி எடுத்து இருக்கிறது.
  2. 2.03 கோடி செலவில், வில்லியனூர், காலாப்பட்டு, திருபுவனை கோர்க்காட, மற்றும் தேத்தாம்பாக்கம் ஆகிய இடங்களில், புதிய டிரான்ஸ் பார்மர்கள் அமைக்கப்படும்.
  3. நியு கேஸ் இன்சுலேட்டட் சிஸ்டம், தேங்காய் திட்டு மரப்பாலத்தில், ரூ 26.65 கோடி செலவில் அமைக்கப்படும்.
  4. 33870 தெருவிளக்குகள் பொருத்தப்படும்.
  • தீயணைப்பு துறை.
  1. தவளகுப்பம், கரையாம்புத்தூர். லிங்கா ரெட்டி பாளையம், டி ஆர் பட்டினம், ஆகிய இடங்களில் இந்த வருடமே தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.
  • மீன் வளத்துறை.
  1. மரணம் அடைந்தால் ரூ 5 லட்சம் வழங்கப்படும்.
  2. ரூ 2500, ரூ 3000, ரூ 4000 என ஓய்வூதியம் 8628 பேருக்கு வழங்கப்படும்.
  3. கட்டுமரம், மற்றும் வலை 300 பேருக்கு, ரூ 16500 மானியம் வழங்கப்படும்.
  4. ரூ 20000 லிருந்து 30000 வரை, இரும்பு போட் வைத்து இருப்பவர்களுக்கு 454 பேருக்கு மானியம் வழங்கப்படும்.
  5. வலை வாங்குபவர்களுக்கு மானியம் 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக  உயர்த்தப்படுகிறது.
  6. பத்தாவது பன்னி ரண்டாவது மாணவர்கள் 600 பேருக்கு, ரூ 7000 முதல் 15000வரை,  ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  7. மதிப்பெண் 75 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  8.  15 மீனவ கிராமங்களுக்கு ரூ 5 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  9. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக  காரைக்காலில், மீன் அருங்காட்சியகம் ரூ 15 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • சுகாதாரத் துறை.
  1. காலிப் பணியிடங்கள், இந்த ஆண்டிலேயே நிரப்ப படும்.
  2. 500 பெட் வசதி கொண்ட தொற்று நோய் தடுப்பு மருத்துவ மனை கோரிமேடுவில் அமைக்கப்படும்.
  3. காரைக்காலில் ரூ 50 லட்சம் செலவில், ஓ பி டி பிளாக், அரசு மருத்துவமனையில் அமைக்கப்படும்.
  4. ஆயூஷ் மருத்துவ மனை, இந்த ஆண்டிலேயே வில்லியனூர், மற்றும் ஏனாமில் ஆரம்பிக்கப்படும்.
  5. சுகாதார துறைக்கு ரூ 795.88.கோடி ஒதுக்கப்படும்.
  • இந்து அறநிலையத்துறை.
  1. 12 வருடம் மேலான கோவில்கள் புனரமைக்க ரூ 2.76 கோடி ஒதுக்கப்படும்.
  2. அரியாங்குப்பம் மசூதி மற்றும் சுல்தான் பேட்டை மசூதி, மக்தாப் மதராஸா மசூதிகளும் புணரமைக்கப்படும்.
  3. புதிய கோவில் கட்டுமானப் பணிகளுக்கு, ரூ 3.50 லட்சம் நிதி உதவி அளிக்க படும்.
  • தொழில் துறை.
  1. சேதராப்பட்டு, போலகம் தொழிற் பேட்டை பகுதிகளில், தொழிற் சாலை வளர்ச்சி களுக்கு, நிதி உதவி அளிக்கப்படும்.
  2. செப்டம்பர் 23 மற்றும் 24 தேதிகளில், முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்.
  3. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில்,  தொழில் நுட்ப பயிற்சி அளிக்க படும்.
  • தொழிலாளர் நலம்.
  1. கட்டிடத் தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஓய்வு ஊதியமும், 60 வயதை கடந்தால் ரூ 3000 மும் வழங்கப்படும்.
  2. தனியார் மருத்துவமனையில்  பிரதம மந்திரி திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் வரை  மருத்துவ வசதி  கிடைக்கும்.
  3. மாதிரி தொழில் நுட்ப பயிற்சி மையம், மேட்டுப்பாளையத்தில் தொடங்கப்படும்.
  4. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருக்க பல்வேறு வகையான தொழில் நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • உள்ளாட்சி துறை.
  1. 220 குடியிருப்புகள், சின்னையா புரத்தில், இந்த ஆண்டில் 18.03 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்படும்.
  2. மழை கால முதல் தடுப்பு பணியாக, குண்டு சாலை, மேட்டு வாய்க்கால், காமராஜர், சாலை சந்திப்பு, வாணரப்பேட்டை பாலம், ரூ 26.42 கோடி செலவில், இந்த ஆண்டு முடிக்கப்படும்.
  3. கல்வே கல்லூரி 4.39 கோடி யிலும், வ ஊ சி பள்ளி 5.85 கோடி யிலும், பென்ஷனேட் பள்ளி.. ரூ 5.51 கோடி யிலும்.. கட்டி முடிக்கப்படும்.
  4. பழைய துறைமுகத்திலும், பழைய ஜெயில் வளாகத்திலும், மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ 20 கோடி செலவில் கட்டப்படும்.
  5. இந்த ஆண்டிலேயே சப் ஸ்டேஷன் 33.45 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • காவல் துறை.
  1. லாசுப்பேட்டை, ரெட்டியார் பாளையம், கணிக்கலாம் பாக்கம் புறக்காவல் நிலைய கட்டிடங்கள் கட்டி முடிக்க ரூ 15 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு.
  2. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. காவல் துறையில் காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டிலேயே நிரப்ப படும்.
  4. காவல் துறைக்கு ரூ 303.85 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • துறைமுகம்.
  1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய துறைமுக வளாகத்தில், நகர மனமகிழ்வு கிராமம் அமைக்கப்படும்.
  • பொதுப் பணித்துறை.
  1. குடிநீர் சப்ளை இணைப்பு மற்றும் ரோடுகளுக்கு புதுச்சேரிக்காக  ரூ 38.42 கோடியும், காரைக்காலுக்காக ரூ 14.50 கோடி ஒதுக்கீடு.
  2. பாரதிதாசன் கல்லூரி வகுப்பறை, திருக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, லாசுப்பேட்டை காவல் நிலையம், மற்றும் கட்டுமான பணிகளுக்காக  ரூ 16 கோடி ஒதுக்கீடு.
  3. ஆரம்ப சுகாதார நிலையம், அம்பகரத்தூர், புற நோயாளிகள் பிரிவு சி எச் சி தேனூர் இவற்றிற்கு ரூ 2.17 கோடி ஒதுக்கீடு.
  4.  லாசுப்பேட்டை பகுதியில், கழிவு எல் வி பாதை, மதகடிப்பட்டு சாலை சீரமைப்பு, புதுச்சேரி வில்லியனூர் என் எச் 45 சாலை பாலம், சங்கராபரணி ஆறு அருகே ஆரியாபாளையம் அருகில், கிருமாம்பாக்கம், வம்பு பட்டு சாலை, இரட்டை வழித்தடம் பாலம், ஏம்பலம்,  கரிக்கலாம்பாக்கம். இவற்றிற்கு ரூ 133.51 கோடி ஒதுக்கீடு.
  5. ரூ 5 கோடி செலவில், இந்த ஆண்டிலேயே ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் கட்டித் தரப்படும்.
  • சர்வ தேச தரத்தில் சாலை சீரமைப்பு.
  1. 29.97 கிமீ 30 கோடி செலவிலும், புதுச்சேரி பகுதியிலும்.
  2. 10.41 கிமீ 3.75 கோடி செலவில் காரைக்கால் பகுதியிலும் இந்த ஆண்டிலேயே அமைக்கப்படும்.
  3. பாகூரில், புதிய பஸ் நிலையம் ரூ 2 கோடி செலவில் அமைக்கப்படும்.
  4. திருநள்ளாறு தேர்வீதி ரூ 4 கோடி செலவில் சீரமைக்க படும்.
  5. காரைக்காலில் பல்வேறு ரோடுகளுக்கு சீரமைக்க, ரூ 19.20 கோடி ஒதுக்கீடு.
  6. அரசலாறு பாலம் சீரமைக்க ரூ 4.50 கோடி ஒதுக்கீடு, இந்த ஆண்டிலேயே சீரமைக்க படும்.
  7. அரிக்கமேடு, நல்ல வாடு, பெரிய காலாப்பட்டு, மீன் பிடி சிறிய படகு இறங்கும் தளங்கள், அமைக்க ரூ 50 கோடி ஒதுக்கீடு.
  8. காரைக்கால் துறைமுக சீரமைக்க.. ரூ 52.90 கோடி ஒதுக்கீடு.
  • புதுச்சேரி நீர்ப்பாசன வளர்ச்சி திட்டங்களுக்கு.
  1. புதுச்சேரி பகுதிக்கு ரூ 53.23 கோடி ஒதுக்கீடு.
  2. காரைக்கால் பகுதிக்கு ரூ 23.33 கோடி ஒதுக்கீடு.
  • வருவாய் துறை.
  1. பட்டா ஆன்லைன் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க படும்.
  2. 7.27 கோடியில், 2 மற்றும் 3 வது தவணை வீடு கட்டும் திட்டம், மானியம் 821 பேருக்கு வழங்கப்படும்.
  • அறிவியல் – தொழில் நுட்பம் –  சுற்று சூழல் துறை.
  1. ஒருங்கிணைந்த கடல் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, கடல் மேலாண்மை சங்கம் ஆரம்பிக்கப்படும். இது உலக வங்கி நிதி உதவியுடம்  செயல்படுத்தப்படும். இதற்காக ரூ 111.90 கோடி ஒதுக்கீடு செய்யபடும். அதில், ரூ 55.95 கோடி உலக வங்கி நிதியுதவயும், ரூ 44.76 கோடி.. மத்திய அரசும், ரூ 11.19 கோடி மாநில அரசு நிதியில் பங்கு கொள்ளும்.

 

  • சுற்றுலா – போக்குவரத்து துறை
  1. நிர்பயா மகளீர் பாதுகாப்பு திட்டத்திற்கு  ரூ 4.60 கோடி ஒதுக்கீடு செய்யபடும் .
  2. பி ஆர் டி சி அரசு பேருந்து நிறுவனத்திற்கு ரூ 25.85 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யபடு.
  • ஆதிதிராவிடர் நலத்துறை. இதற்கு,ரூ 165.44. கோடி ஒதுக்கீடு.
  1. வில்லியனூர் ஆதிதிராவிடர் நலத்துறை கிளை ஆரம்பிக்கப்படும். அதற்காக, 100,000 ரூபாய் திருமண நிதி உதவி அளிக்கப்படும்.
  2. பாட்கோ மாணவர்கள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யபடும்.
  3. ஆதிதிராவிடர் நலனுக்காக, சிறப்பு நிதியாக  ரூ 396 கோடி ஒதுக்கீடு செய்யபடும்.
  4. மகளீர் பாதுகாப்பிற்காக 181 தொலைபேசி எண் வழங்கப்படும்.
  5. மகளீர் மேம்பாட்டு துறைக்கு, ரூ 562.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  6. கூட்டுறவு வங்கிக்கடன், விவசாயக்  கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  7. சம்பளம் வழங்காத கூட்டுறவு, மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்படும்.வாழ்க பாரதம்.
    வெல்க புதுச்சேரி.
    நன்றி வணக்கம்.என பட்ஜெட் உரையை படித்து முடித்தார், நமது மக்கள் முதல்வர்.

    இத்துடன் என்னுடைய பதிவும் முடிவடைந்தது…

    இவை எல்லாம் நடந்ததா? இதன் உண்மை நிலை என்ன? தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களே, இனி உங்கள் பணி.
    என நாங்கள் ஒதுங்கி போக வில்லை. உண்மை அறியும் குழு அமைத்து  மக்களிடம், 2022-2023 பட்ஜெட் டுக்கு முன்னரே தெரியப்படுத்துவோம்.

    இந்த பதிவுகள்அனைத்தும், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களுக்காக. ஆம் ஆத்மி கட்சி சார்பாக தரபடுகிறது. அவர்கள் இதன் உண்மை நிலையை அறிந்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஊழல் அதிகாரிகளுக்கு, சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும். மக்களை, இந்த ஊழல் வாதிகளிடம் இருந்து காப்பாற்ற அவர்களால் மட்டுமே முடியும்.

    மேற்படி அறிவிப்புகளில் கண்ட தொகை, பட்ஜெட்டில் குறிப்பிட்ட அதே  திட்டங்களுக்காக செலவிடப்பட்டதா? என்றும், பயனாளிகள்  பலன் அடைந்தார்களா? என்றும், மக்களுக்கு தெரிய வேண்டும்.  இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றுள்ளதா? என்பதை தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள், கோப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

 

நன்றி வணக்கம்

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

செல் 97895 45401.

 

பதிவு.

திரு. M M Y. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »