கந்து வட்டி, மீட்டார் வட்டி, தின வட்டி, வார வட்டி, மாத வட்டி, என நீண்டுகொண்டே போகிறது இந்த லிஸ்ட்.
1990 ஆம் ஆண்டுகளுக்கு முதல் விவசாய கடன் மற்றும் தொழில் கடன் போன்றவை வங்கி மூலம் மட்டுமே கிடைத்தன. இப்படி கண்டதற்கும் கடன் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகம் இல்லை. பிறகு பல வங்கிகள், கார் கடன், பைக் கடன், வீட்டு கடன் என்று பழக்கத்தை உண்டுபண்ணினார்கள்.
அதை சாதகமாக பயன்படுத்தி, பல தனியார் நிறுவனங்களும், வட்டி தொழிலை தொடங்கினார்கள். பிறகு ஆரம்பித்ததுதான், தனி நபர் கடன், கல்யாண கடன், செல் பொன் கடன் போன்றவை.
இதைக்கண்ட பலர், வட்டி தொழில் என பதிவு செய்யாமல், வட்டிக்கு கடன் கொடுப்பதை, சுய தொழிலாக ஆக்கிகொண்டார்கள். அவசரத்துக்கு உதவ அவர்களை விட்டால் நமக்கு யார் இருக்கிறார்கள் என்று மக்களும் கண்ட மேனிக்கு கடன் வாங்கி, அவர்களுடைய தொழிலுக்கு ஆதரவு அளித்தார்கள்.
தொடர் கடன் பழக்கம், ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கே கடன் வாங்கும் பழக்கமாக மாறிவிட்டது. மேலும், ஒரு வட்டியைஅடைக்க, அடுத்த கடன் அதை அடைக்க அடுத்தது என, வானமே எல்லையானது.
இனிதான் ஆரம்பிக்கிறது பிரச்சனை. பல கடன்களில் சிக்கியவர்கள், எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று, கடன் கேட்க சென்றால், அவர் நிலைமையை புரிந்துகொண்ட, வட்டி வியாபாரி 1வீதத்திலிருந்து 2 வீதத்திற்கும், அதிலிருந்து 5 வீதத்திற்கும், அதிலிருந்து 10 வீதத்திற்கும், அதிலிருந்து 20 வீதத்திற்கும், சென்று கடையாக 30 வீதம் வரை சென்று இருக்கிறது இந்த வியாபார வேகம்.
அப்படி கொடூர வட்டிகளில் சிக்கிய பலர், வீட்டை இழந்து, சொத்துக்களை இழந்து, நகைகளை இழந்து, மணவாழ்கையை இழந்து, கடைசியில் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து உயிரையும் இழந்துள்ளனர்.
தொழில் என்று ஒன்று இருந்தால், அதற்கு லாபம் நட்டம் என்று இருக்கும். ஆனால் வட்டி தொழிலுக்கு லாபம் மட்டுமே நட்டம் என்பதில்லை. அதனால் வட்டித்தொழில் செய்தவர்கள் அசுர வளர்ச்சி அடைந்தனர்.
எல்லாம் சரி, சட்டம் என்ன சொல்கிறது? வட்டி தொழில் செய்யலாமா செய்யக்கூடாதா?
பதில்: செய்யலாம். சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செய்யலாம். அதற்கு,
- தொழிலை சுட்டிக்காட்டி லைசன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும்.
- புதிய சட்டப்படி ஜி.எஸ்.டி. நம்பர் எடுத்து இருக்க வேண்டும்.
- வட்டி தொழிளுக்காக வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
- வரவு செலவு கணக்கு அரசுக்கு கட்டாயம் காட்டவேண்டும்.
- வாங்கும் வட்டியில் சேவை வரியாக 18 சதவீதம் அரசுக்கு கட்டவேண்டும்.
- அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் வங்கி மூலமாக மட்டுமே செய்யவேண்டும்.
- வட்டி நிர்ணயம் 1 வீதத்திலிருந்து 2 வீத்ததிற்குள்ளாக இருக்க வேண்டும்.
- எதையாவது அடமானமாக பெற்றுகொண்டு மட்டுமே வட்டிகடன் கொடுக்க வேண்டும். அடமானமாக பெற்ற பொருளை கட்டாயம், பதிவு செய்திருக்க வேண்டும்.
- அல்லது, கடனை திருப்பி செலுத்த, போதுமானம் வருமானம் உள்ளதா என்று உறுதி செய்திருக்க வேண்டும்.
- எதற்காக கடன் பெறுகிறார் என்பதை தெளிவாக குறிப்பிட்டு, கடன் பத்திரம் எழுத வேண்டும்.
- கடனை கட்ட இயலாதவர்களிடம், சட்ட பூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெற்று கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கக்கூடாது. அப்படி வாங்கினாலும் செல்லாது.
- தொகை நிரப்பாத வங்கி செக் வாங்ககூடாது. அப்படி வாங்கினாலும் செல்லாது.
- கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பேரில், புகார் கொடுத்தாலும், கண்டிக்கவோ, கட்டாய படுத்தவோ போலீசுக்கு அதிகாரம் இல்லை.
- கடன் செலுத்த தவறியவர்களை, திட்டுவதோ, அடிப்பதோ, அடுத்தவருக்கு தெரியும்படி அவமான படுத்துவதோ சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம்.
வட்டி தொழில் செய்பவர்கள், இப்படி பல விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மேற்கூறப்பட்ட விஷயங்களில் எதையுமே செய்யாது, அல்லது எல்லாவற்றையும் தப்பாக செய்யும் நபர்களே இப்போது வட்டி தொழிலில் பெருவாரியாக வளம் வருகின்றனர்.
எனவே, இனி வரும் காலங்களில் மேற்படி விஷயம்களை கடைபிடிக்காத எவரும், சட்டத்தை ஏமாற்றி, அரசின் வருமானத்தை ஏமாற்றி, வட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது ஆம் ஆத்மி கட்சி கண்டிப்பாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கும்.
ஏற்கனேவே, கொடுத்த கடன்களை வசூல் செய்ய வரும்போது, பலருக்கு தெரியும் வகையிலும், கடன் வாங்கியவரை அசிங்கபடுத்தும் நோக்கிலும், தெருவில் நின்றுகொண்டு பைக் ஹாரனை அடித்து அம்பலபடுத்தாமலும், சத்தம் போட்டு ஊரைகூட்டாமலும், கண்ணியத்தோடு செயல்பட ஆம் ஆத்மி கட்சி கேட்டுகொள்கிறது.
இது, பொது மக்களிடமிருந்து எங்களுக்கு வந்த புகாரை அடுத்து எடுக்கும் நடவடிக்கைகளா கும்.
தொகுப்பு மற்றும் பதிவு
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
தொடர்புக்கு: 7667 303030