புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் ஆட்சியாளர்களே, அதிகாரிகளே, அரசு ஊழியர்களே,
இந்தாண்டு, எங்களுக்கு வெறும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வேண்டாம், இனிய வாழ்க்கை வேண்டும். புதுவை மக்களின் குமுறல்.
ஒழுங்கான ரோடு இல்லை, சுத்தமான மற்றும் போதுமான தண்ணீர் விநியோகம் இல்லை. சுகாதாரமான கழிவு நீர் ஓட்டம் இல்லை. கொசுக்களால் இரவில் தூக்கம் இல்லை, வேலை இல்லை, விலை வாசி கட்டுக்குள் இல்லை, அத்தியாவசிய செலவுகளுக்கு கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியவில்லை. ஆக மொத்தத்தில் வாழ்கையில் நிம்மதி இல்லை.
அரசியல் வாதிகளின், பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து, வாழ்கையை சூனியமாக்கிக் கொண்ட எங்களுக்கு ஏது இனிய புத்தாண்டு?
“இனிய” என்ற வார்த்தை காதுக்கும் நாக்கிற்கும், மட்டும் போதுமா? இனிய வாழ்கையை வாழ்ந்து காட்ட என்ன வழி என்று தேடவேண்டாமா?
கொள்ளையர்களை நாட்டிற்குள் விட்டுவிட்டு, இனியதை தேடினால் கிடைக்குமா?
சும்மா சம்பிரதாயத்திற்கு சொல்வதல்ல இனிய புத்தாண்டு, இனிமையாக வாழ வைக்க வேண்டும்.
பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டிலாவது, அத்தியாவசிய தேவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி சரிசெய்ய இயலாவிடில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்று பாகுபாடில்லாமல் தயவு செய்து ராஜினாமா செய்துவிட்டு கீழே இறங்குங்கள்.
குறைந்த பஞ்சம் பிரன்ச்சுக்காரர்கள் விட்டு சென்ற பழைய புதுச்சேரியையாவது எங்களுக்கு திருப்பி தாருங்கள். மாநிலத்தை, பிராந்தியத்தையும் நிர்வகிக்க இயலாத முதல்வரும் ராஜினாமா செய்திவிட்டு வெளியேருங்கள்.
ஒன்றுமே செய்ய தகுதி இல்லாத, இயலாத நீங்களேல்லாம், ஏன் ஓட்டுக்கு 1000 முதல் 2000 வரை பணத்தை, தேர்தல் துறையின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, ஓடி ஓடி உழைத்து விளங்காத மக்களின் ஓட்டை பெற்று வெற்றி பெற்றீர்கள்?
ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும், வரும்வரை, கனவில் கூட சாத்தியமற்றதை எல்லாம் செய்து தருவேன் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும், அரசிடம் பணமில்லை நாங்கள் என்ன செய்ய முடியுமென்ற வசனத்தை பேசி, தப்பித்துகொள்ள ஏன் முயற்சி செய்கிறீர்கள்.
ஆனால், உங்கள் கணக்கு படி, நீங்கள் இரட்டை வெற்றி பெற்றுவிடுகிரீர்கள். ஒன்று, ஆட்சி அதிகாரம் உங்கள் கைக்கு வந்துவிட்டது. இரண்டு, போட்ட முதலுக்கு பன்மடங்கு ரிடர்ன்.
புதுவையை பொறுத்த வரை சுமார் 25000 முதல் 30000 வாக்குகள் ஒரு தொகுதிக்கு இருக்கிறது. அதில் ஓட்டுக்கு ரூபாய் 1000 என்று பார்த்தால் இரண்டரை கோடி, இதர செலவுகள் ஒன்றரை கோடி. சுமார் நான்கு முதல் ஐந்து கோடிகளை செலவு செய்துவிட்டு, நீங்கள் திருட்டு ஊழல் வேலை பார்க்காமல் எப்படி உங்களை செலவு செய்ய முதலீட்டை எடுப்பீர்கள்? இதெல்லாம் மக்களுக்கு விளங்கி விட கூடாது என்பதற்காக தானே, இலவசம் என்ற பேரில் எங்கள் பாக்கெட்டிலேயே எடுத்து எங்களுக்கே கொடுக்கிரீர்கள்?
இப்படி நீங்கள் நாட்டு மக்களை ஏமாற்றுயது ஒரு முறையா? அல்லது இரண்டு முறையா?சுமார், சட்டமன்ற தேர்தல் பித்தலாட்டம 15 முறையும், நாடாளுமன்ற தேர்தல் பித்தலாட்டம் 15 நடந்தேறியுள்ளது. இனியாவது மக்களை வாழ வையுங்கள் அல்லது வாழவிடுங்கள்.
காலம் முழுதும் பொய்யும் புரட்டும் செய்யும் உங்களை வைத்துகொண்டு எப்படி ஒரு ஆண்டு இனிதான ஆண்டாக இருக்கும்? இனிய புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஒரு சம்பிரதாயம் அல்ல, மாறாக இனிய புத்தாண்டாக மாற்றிக்கொள்ள மக்கள் மத்தியில் நாம் தியாகம் செய்து, உண்மையாக உழைக்கவும் வேண்டும். இப்போது சொல்லுங்கள் நீங்கள் தியாகிகளா? அல்லது உண்மையாளர்களா?
போதும் போதும். 2022 லாவது மக்களை வாழவிடுங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்து சொல்லாமலேயே எங்களுக்கு இனிதாக அமையட்டும் இனி வரக்கூடிய ஆண்டுகள் அனைத்தும்.
தொகுப்பு மற்றும் பதிவு
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
