சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால் ,
- சட்டம் சரியாக அமல்படுத்துவதில்லை.
- ஜனநாயகம் நேர்மையான முறையில் நடக்கவில்லை.
- ஓட்டுக்கள், இப்போது விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
- இவர்கள் அரசியல் வாதிகள் அல்ல, அரசியல் வியாபாரிகள்.
- மக்களை விலை கொடுத்து அடிமையாக்கி வாயில்லா பூச்சியாக ஆக்கியவர்கள்.
- போட்ட முதலை, யார் எடுப்பது என்பதில் போட்டி இருப்பதால், மாநில வளர்ச்சி பற்றியோ, மாநில மக்கள் பற்றியோ எந்த கவலையும் இல்லை.
- சட்டசபையை ஒழுங்காக கூட்டுவதில்லை.
- முழுமையான பட்ஜெட் போடுவதில்லை.
- பட்ஜெட் முறையான விவாதம் நடைபெறுவதில்லை.
- அவசர அவசரமாக நடத்துவது, அவசர அவசரமாக முடிப்பது.
- பட்ஜெட் போட்ட படி எதுவும் நடப்பதில்லை.
- இவர் அனுப்பினால், அவர் ஒப்புக் கொள்ளமாட்டார். அவர் அனுப்பினால் இவர் ஒப்புக்கொள்ள மாட்டார். தப்பி தவறி இவர்களும் ஒப்புக் கொண்டாலும் மத்தியில் இருப்பவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அப்படி ஒரு இக்கட்டான நிலை நமது மாநிலத்தின் நிலை.
- கடந்த பட்ஜெட்டில் 9924 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டது.
- மத்திய உள்துறை 9000 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.
- 7727 கோடிக்கு 32 துறைகளுக்கும்
- 1273 கோடி கடனை அடைப்பதற்கும், கட்டிடங்கள், பாலங்கள், குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கும் அனுமதிக்க பட்டது.
- இதைத் தவிர நிதி செலவு மற்ற செலவுகளுக்கு, மடை மாற்றம் செய்ய அரசு உயர் அதிகாரிகள் ஒப்புக் கொள்வதும் இல்லை.
- புதுச்சேரி நிதிப்பற்றாக்குறை போக்க எந்த ஒத்துழைப்பு அளிப்பதில்லை…
- புதுச்சேரி வளர்ச்சிக்கு என்ன என்ன தடை ஏற்படுத்த வேண்டுமோ, அத்தனை தடைகளையும் தயங்காது செய்கின்றனர்.
- ஆட்சியாளர்களும், இவர்களுக்கு அடங்கி போகவே, மக்களின் நிலைதான் மிகவும் பரிதாபமான நிலை.
உரிமை இழந்தோம்.
உடமை இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா.
எனவே அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டியது பற்றி, மக்களுக்கு அதற்குண்டான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூக அமைப்புகளின், மக்கள் இயக்கங்களின், சமூக ஆர்வலர்களின், கடமை.
இது போன்று பலரும் இந்த கருத்து விவாதத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஆலோசனைகளை வழங்கலாமே.
நமக்கு நாம் தான் தலைவர்கள். நமக்கு மேலும் யாரும் தலைவர்கள் இல்லை.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.