சமூக ஆர்வலர்களே, சமூக அமைப்புகளே, பொது நல தொண்டு நிறுவனங்களே, சேவை அமைப்புகளே.
நீங்கள் அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். நாமே இதை தெரிந்து கொள்ளாவிட்டால், பாமர மக்களுக்கு இது எப்போது புரியும்?
சட்டங்களும், அரசாணைகளும், நமக்கு ஆதரவாகத் தான் இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து வைத்து கொள்ள வில்லை. தயவு செய்து இதை முழுமையாக படிக்கவும் அனைவருக்கும் பகிரவும்.
அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கவே ஆம் ஆத்மி கட்சி, இந்த பணியை செய்கிறது
சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளை அழைத்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்டி கீழ் கண்ட அரசு துறைகள், குறைகளை கேட்டு அறிய வேண்டும்.
அதன் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள, ஏதாவது அடையாள அட்டை ஒன்று இருந்தால் போதும். இந்த கூட்டம் கூடுவதற்கு முன் ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கீழ் கண்ட துறைகள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை.
- வணிக வரித்துறை.
- உணவு பங்கீடு துறை.
- காவல் துறை.
- போக்குவரத்து துறை.
- பொதுப் பணித்துறை.
- மின் துறை.
- சமூக நலத்துறை.
- ஆதிதிராவிடர் நலத்துறை.
- மகளீர் மற்றும் குழந்தைகள் நலத்துறை.
- உள்ளாட்சி துறை.
- நகர அமைப்பு துறை.
- நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து.
மேற்கண்ட துறைகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்ட அறிவிப்பு, நாளிதழிலோ, டிவியில், குறுந்தகவல் மூலமோ அறிவிக்க வேண்டும்.
இதில் கலந்து கொள்ளும் தங்கள் கருத்துக்களை புகார்களை தொகுத்து, கூட்டம் முடிந்த ஒரு வாரத்திற்குள், அறிக்கையாக தலைமை செயலகத்துக்கு அனுப்பவேண்டும். இதுதான், புதுச்சேரி அரசின் அரசாணையில் உள்ளது.
இதன் படி மேற்கண்ட துறைகள் கூட்டங்களை நடத்துகிறதா என்றால். இல்லை என்ற பதில் தான் வரும்.நாமும் கேட்பதில்லை, அவர்களும் நடத்துவதில்லை. ஆனால், இனி நடத்த வைக்க வேண்டும்…
அதற்கான புதுச்சேரி அரசு ஆணை எண்.
G O Ms No 3 /2012/A2/ARW dt 31.12.2012.
G O Ms No 3 2012A2ARW dt 31.12.2012. Download Link
மேற்கண்ட துறைகளில், இந்த கூட்டத்தை நடத்த, நாம் வலியுறுத்த வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதை ஆம் ஆத்மி கட்சி செய்யும்.
இந்த தகவலை, அனைத்து அமைப்புகளுக்கும்பகிரவும்.
இந்த கூட்டத்தை மேற்கண்ட துறைகள்ஒழுங்காக கூட்டப்பட்டு இருந்தால், பல பிரச்சினைகள் தீர்ந்து போயிருக்கும்.
நாம் இப்படி வாட்ஸ்அப் மூலம் புலம்ப தேவையில்லை.
புதுச்சேரி அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதை துறைகள் மதிக்க வில்லை. பாதிப்பு நமக்கு தான். எனவே இனிமேலாவது கேட்கலாமா?
இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி கட்சி செய்துகொண்டே இருக்கும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.