மக்கள் குறைகளை தீர்க்காத அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை, ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை.

முதல் கட்ட அரசு அலுவலர்களின் பணி எவ்வாறு செய்ய வேண்டும்?

  • அனைத்து துறைகளிலும், பிரிவு அதிகாரிகள், தினமும் ஒரு மணி நேரம் மக்கள் குறைகளை கேட்டறிதல் வேண்டும்.
  • அப்படி அவர் விடுமுறை எனில் அவருக்கு பதிலாக, வேறு அதிகாரி அந்த பணியை பார்க்க வேண்டும்.
  • குறைகள் கேட்கும் நேரத்தை, தகவல் பலகையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
  • மக்கள் கொடுக்கும் கடிதத்திறக்கு பெற்றுக் கொண்டதற்கான சான்று. கடிதம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
  • அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி முடிக்க வேண்டும் என்றால் காலதாமத படுத்தாமல் அன்றே முடிக்க வேண்டும்.
  • மற்ற துறையில், அந்த குறை தீர்க்க வேண்டும் என்றால், அடுத்த வருகை தேதி அவருக்கு தெரிவிக்க வேண்டும்

அடுத்த கட்ட துறைத் தலைவர், ஆட்சியர், பகுதி நிர்வாகி.

  • ஒவ்வொரு திங்கள் கிழமையில் இரண்டு மணிநேரம் பொதுமக்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
  • முதல் கட்ட அலுவலர் முடிக்காத பணிகளை இவர் பரிசீலித்து இவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இவர்கள், திங்கள் கிழமை இல்லாவிட்டால், இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் மக்களை அலைய விடக்கூடாது.
  • எந்த ஒரு கடிதம் அளித்தாலும், அதற்கு ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும்.
  • இந்த இரண்டு இடங்களில் காலதாமதம் ஆனால்.

மூன்றாவது கட்ட அதிகாரி, இறுதி முடிவு எடுப்பவர்கள்.

  • இது குழுவாக செயல்படும். இதில் தலைமை செயலர், நிதி செயலர்,  காவல் துறை தலைவர்,  நிர்வாக செயலர், இணை செயலர் அடங்கிய குழுவாகும்.
  • இந்த குழு மாதத்திற்கு ஒரு முறை கூட வேண்டும்.
  • முதல் கட்ட அதிகாரிகள், இரண்டாவது கட்ட அதிகாரிகள், காலதாமதம் படுத்தினால், இறுதியாக இந்த குழு முடிவு எடுக்க வேண்டும், இதுவும் முடிவு எடுக்க காலதாமதப் படுத்தினால்.
  • நீங்கள் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பை பெறுவதோடு இந்த அதிகாரிகளுக்கு தண்டனையும் பெற்று தரலாம்.

உதாரணமாக, பொதுப் பணித் துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை.

அவர்கள் முதலில், அவர்களுடைய பிரிவு அதிகாரியை சந்தித்து மனு அளிக்க வேண்டும்.

தினமும் மக்களை ஒரு மணி நேரம் சந்திக்கும் நேரத்தில், சந்தித்து மனு அளிக்கலாம். அவர் வழக்கம் போல் காலதாமதப் படுத்தினால்.

உங்கள் தலைமை அதிகாரியை, வாரம் ஒருமுறை திங்கள் கிழமை இரண்டு மணி நேரம் பொதுமக்களை சந்திக்கும் நேரத்தில் சந்தித்து,  குறைகளை சொல்லலாம். அவரும் காலதாமதப் படுத்தினால்,

மூன்றாவதாக, இறுதி கட்டத்தில், இந்த குழுவை சந்தித்து மனு அளிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடும் இந்த குழு, உங்கள் மனு மீது ஒரு முடிவு எடுத்து, உங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அப்படி தவறினால், நீங்கள் நீதிமன்றத்தை நாடி உங்களுக்கு உரிய நீதியை பெறுவதோடு. அந்த அதிகாரிகளுக்கு தண்டனையை பெற்று தரலாம்.

  • முதல் கட்ட அதிகாரி.
  • இரண்டாவது கட்ட அதிகாரி.
  • மூன்றாவது கட்ட குழுவிடம்,

மனுக்கள் அளிக்கும் பொது, அவர்களிடம் மனு அளித்ததற்கான ஒப்புதல் சான்று. பெறுவது அவசியம்.

இதற்கான அரசாணை
எண் G O Ms 4/2010/A2/ARW..date 12.8.2010.

இது சம்மந்தப்பட்ட அரசாணைகள்.
.
G O Ms No 7 dt 28.9.85 chief Secretariat (P&AR Wing) Puducherry.

G O Ms No 2 dt 21.4.86
G O Ms No 2 dt 28.7.88
G O Ms No 1 dt 19.1.89
Chief Secretariat (P&AR Wing) Puducherry.

G O Ms No 1 dt 3.3.1992 of
Chief Secretariat (P&AR Wing) Puducherry.

G O Ms No 1/A3/ARW/2004
dt 18.1.2004. Chief Secretariat. (ARW) Puducherry.

இதை வைத்து கொண்டு, உரிமையுடன் இந்த அதிகாரிகளிடம் உண்மை நிலையை அறியலாம். அதற்கு உண்டான அரசு ஆணைகள் தான் இவை. இது மக்கள் நலனுக்காக ஆம் ஆத்மி கட்சி அளிக்கும் விழிப்புணர்வு பதிவு.

  • அதிகாரிகள் வானத்தில் இருந்து வந்த தேவதூதர்கள் அல்ல.
  • நமது வரிப் பணத்தில், நமக்காக இயங்க கூடியவர்கள்.
  • சட்டம் தெரியாதவரை நாம் அடிமையாக இருந்து இருக்கலாம்.
  • சட்டம் நமக்கு தெரிந்து விட்டால், நாம் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை, கெஞ்சத்தேவையில்லை.

உங்களுக்கு உதவி செய்ய ஆம் ஆத்மி கட்சி தயார் நிலையில் இருக்கிறது.

இதோ அந்த 2010-08-12 PY-GO-public grivances

2010-08-12 PY-GO-public grivances

அடுத்த பக்கம் செல்ல 

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »