கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.

  • பிரதமர்,
  • அமைச்சர்கள்,
  • எம்.பி.க்கள்,
  • அரசு உயர் பதவியில் இருப்போர்

மீதானஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும்,

  • மாநில அமைச்சர்கள்,
  • அரசு உயர் அதிகாரிகள்

மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம் இதுவாகும்

லோகாயுக்தா (அல்லது லோக் ஆயுக்தா ) என்ற அமைப்பானது இந்திய மாநிலங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, அல்லது வங்கிகள், அல்லது காப்பீட்டு நிறுவனங்கள், போன்ற அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் அளித்த புகார்களைக்கையாளும் அதிகாரி, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.

லோகாயுக்தா அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவரை அரசாங்கத்தால் வெளியேற்றவோ, இடம் மாற்றம் செய்யவோ முடியாது. அவருக்கு எதிராக மாநில சட்டமன்றத்தால் குற்றச்சாட்டு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.

முதன்முதலில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் 1966 இல் “குடிமக்களின் குறைகளை,  நிவர்த்தி செய்வதில் சிக்கல்கள்” குறித்த சிறப்பு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், குடிமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, ‘லோக்பால் ‘ மற்றும் ‘லோகாயுக்தா’ என நியமிக்கப்பட்ட இரண்டு சிறப்பு அதிகாரிகளை அமைக்க பரிந்துரைத்தது.

தனியார், மற்றும் பொது அமைப்புகள், மற்றும் நிறுவனங்களால் சேவை செய்யப்படும் வங்கி, காப்பீடு, மற்றும் பிற துறைகளில் தனிநபர்களிடமிருந்து வரும் குறைகளை, மற்றும் புகார்களைத் தீர்ப்பதற்காக, இந்திய அரசு பல ஒம்புட்ஸ்மேன்களை (சில நேரங்களில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (சி.வி.ஓ.)) நியமித்துள்ளது. அவ்வாறு சி.வி.சி எனப்படும் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அமைப்பானது, சந்தானம் குழுவின் (1962-64) பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது.

லோக்பால் மசோதா 2011 அல்லது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர, ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய, தவறிழைக்கும் அரசியல்வாதிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள், மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில், இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்.

  • இம்மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது,
  • பின்பு 27 டிசம்பர் 2011 ல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 நிறைவேற்றப்பட்டது.
  • எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011 ல் நிராகரிக்கப்பட்டது.
  • பின்பு 21 மே 2012 ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின்.
  • மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது.
  • பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது
பணிகள்

லோகாயுக்தா என்ற அமைப்பு, வருமான வரித் துறை மற்றும் ஊழல் தடுப்பு துறை  ஆகியவற்றுடன், முக்கியமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் நடக்கும், ஊழலை விளம்பரப்படுத்த மக்களுக்கு உதவுகிறது. லோக் ஆயுக்தாவின் பல செயல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றவியல் அல்லது பிற விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்

டிசம்பர் 18, 2013 அன்று நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள் கீழே வருமாறு:

  1. மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு
  2. தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
  3. லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
  4. பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள, முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்,) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர், ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
  5. லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரும் வருவார் .
  6. விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
  7. ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படு வர்.
  8. நேர்மை, நாணயமிக்க, ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு.
  9. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சி.பி.ஐ.,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
  10. சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.
  11. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில்,.. சி.பி.ஐ. வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு.
  12. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை, விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
  13. ஊழல் வழியில் சேர்த்த சொத்துக்களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுற கள் உள்ளடங்கும்.
  14. ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
  15. லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.

தொகுப்பு & பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »