Click here to Download file…

உயர்திரு தலைமை செயலர் அவர்களுக்கு.

புதுச்சேரி அரசு அலுவலகங்களில், அரசு பணியில் மிகப் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் பொது மக்கள்மிகுந்த சிரமம் அடைகின்றனர். பல கோப்புகள்,  தூசி படிந்து, அப்படியே பல மாதங்கள் பல வருடங்கள், இல்லை திருப்பி திருப்பி அனுப்புதல், என காலம் கடத்தும் வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது.

உங்களின் கவனத்திற்கு இந்த அரசாணையை கொண்டு வருகிறேன்.

இதில், துறை மட்டத்தில் 10 நாட்களுக்குள்ளும், அது தலைமை செயலகத்திற்கு சென்றால், ஏழு நாட்களுக்குள்ளும் முடிக்க அரசாணை  மிகத் தெளிவாக இருக்கிறது.

இதில் எந்த காலதாமதம் ஏற்பட்டாலும், தாங்கள்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த அரசாணை இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசானது எங்கள் வரிப்பணத்தில் இயங்குகிறது. அதனால், நீங்கள் ஒழுங்காக அந்த பணியை செய்ய வேண்டும்.

எனவே,

  • ஏழுநாளுக்கு மேல் இருக்கும் தலைமை செயலகத்து கோப்புகளும்,
  • பத்து நாளைக்கு மேல் இருக்கும் கோப்புகளையும். உடனடியாக முடிக்க படவேண்டும்.

இல்லை என்றால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும். என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இன்று தலைமை செயலருக்கு, புதுச்சேரி ஆர் டி ஐ குழு சார்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தலைமை செயலகத்தில், ஏழு நாட்களுக்கு மேல் கிடப்பில் உள்ள கோப்புகள் குறித்து தகவல் கேட்டு கடிதம் அனுப்பபடுகிறது.

பின்குறிப்பு.

தலைமை செயலகத்தில், பல துறைகளில் பல வருடங்களாக பல கோப்புகள், குறட்டை விட்டு கோமா நிலையில் தூங்கு கின்றன.

குறிப்பாக, தலைமை செயலரின் கீழ் இயங்கும் விஜிலென்ஸ் பிரிவில், 15 ஆண்டுகளாக 45 க்கும் மேற்பட்ட கோப்புகள், இன்னும் எடுக்க படாமல் தூசி படிந்து கிடக்கின்றன.

பாழடைந்து கிடக்கும் கோப்புகளை எல்லாம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் ஆதரவோடு வெளியே கொண்டு வரும்.

இப்படிக்கு.

கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »