இன்று காலை 9.30 மணியளவில், புதுச்சேரி தமிழ் சங்கத்தில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களின், ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திரு, கோ. ராமலிங்கம், புதுச்சேரி ஆர் டி ஐ குழு, தலைமையேற்று நடத்த, தகவல் பெறும் உரிமை சட்ட போராளிகளான, திரு, பெ. ரகுபதி மற்றும், திரு, கி. ஜெயகாந்தன், அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும்,
சிறப்புரையாக முன்னால் சட்ட துறை இயக்குநர், திரு. ருத்ர குமார் அவர்கள் உரையாற்றவும்,
மேலும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு மதி மகாராஜா அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவும்,
மேலும் கலந்துரையாடலில்.
- திருமதி. துளசி பாக்கியவதி.
- திரு. வேந்தன்.
- திரு. தவமணி.
- திரு. கோ செல்வம்.
- திரு. சக்திவேல்.
- திரு. சண்முகம். ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மக்கள் இயக்கத்தை சேர்ந்த,
- திரு. இந்திரஜித்.
- திரு. ராசி ராமலிங்கம்.
- திரு. ஆனந்தராஜன்.
- திரு. பிரகாஷ்.
- திருமதி. துளசி பாக்கியவதி.
- திரு. பாலமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும்,
- தகவல் உரிமை சட்ட கையேடு.
- பிரெஞ்சு இந்திய ஒப்பந்த தமிழ் நகல்.
- புதுச்சேரி பற்றிய தகவல்கள்.
- பட்ஜெட் நிதி ஒதுக்கீடு. ஆகியன வழங்கப் பட்டன.
இந்த கலந்துரையாடல் நிகழ்வு. மதியம் 2.30 மணிவரை நடந்தது.
இதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்க பட்டன.
- புதுச்சேரி மாநில தகுதி வழங்கிடுக.
- நிதிப்பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுத்திடுக.
- உள்ளாட்சி தேர்தலை நடத்திடுக.
- அரசு சார்பு கூட்டுறவு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவைத் தொகை வழங்கிடுக.
- தகவல் பெறும் உரிமை சட்ட தலைமை ஆணையம், புதுச்சேரியில் அமைத்திடுக.
- சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்துக.
- லோக் பால் சட்டம் அமல்படுத்திடுக.
- 10000 அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக.
போன்ற கோரிக்கையை நிறைவேற்ற.
- மத்திய உள்துறை அமைச்சர்.
- மாநில முதல்வர்.
- தலைமை செயலர் போன்றோர்களுக்கு கடிதம் அனுப்ப முடிவு எடுக்க பட்டது.
முடிவில் கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும்.
புதுச்சேரி ஆர் டி ஐ செயல்பாட்டாளர் குழு.
திரு. டாக்டர் எம். செல்வ மணிகண்டன் நன்றி கூற கூட்டம் இனிதாக முடிந்தது.
தமிழ் சங்கத்தில் கூட்டம் நடத்த உதவி புரிந்த, திரு. அருள் செல்வம்.
அவர்களுக்கும், கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த புதுச்சேரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர், திரு. இரா. தாமோதரன் அவர்களுக்கும்.
மிக்க நன்றி.
