RTI meeting announcement

அன்பார்ந்த நண்பர்களே.

நமக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், நமது மாநிலம் நம் கண் முன்னே உரிமை இழந்து, உடைமை இழந்து, மத்திய அரசை நோக்கி கையேந்தி நிற்கிறது.

மடி நிறைய கனம் வைத்து இருக்கும் நம்மூர் அரசியல்வாதிகளால், உரிமையை காப்பாற்ற உரக்க குரல் எழுப்ப முடியவில்லை.

ஆனால் தேர்தலுக்கு தேர்தல் நமக்கு பணம் கொடுத்து எப்படியோ ஆட்சியை பிடித்து விடுகின்றனர்.

இதற்கு மேலும் இதை கைகட்டி வேடிக்கை பார்த்தால், நம்மை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

அரசியல் என்பதோ, ஆட்சி என்பதோ, நமக்கு தீண்டத்தகாதது அல்ல. நமது வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது. அதை கண்டு கொள்ளாமல் ஒதுங்கினாலோ, பதுங்கி நடுங்கினாலோ, எதிர்கால சமுதாயம் கேலியும் கிண்டலும் செய்ய நேரிடும்….

  • நமது மாநிலத்தில் என்ன நடக்கிறது?
  • ஏன் மாநிலத் தகுதி கிடைக்கவில்லை?
  • உண்மையிலேயே நிதிப்பற்றாக்குறை உள்ளதா?
  • உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் அச்சம்?

பட்ஜெட் பற்றாக்குறை என்பதற்காக  கடன் வாங்குகின்றனர், ஆனாலும், பணம் இல்லை.

இப்படியே நமது மாநிலத்தை விட்டு விடலாமா?

ஆட்சியாளர்களுக்கு, ரியல் எஸ்டேட், மதுபான வியாபாரம்,  கட்ட பஞ்சாயத்து,  இன்னும் நிறைய வியாபாரங்கள்.

அதிகாரிகளுக்கு, 1 ந் தேதியானால் சம்பளம்.

கவலை யெல்லாம் நமக்குத்தான்.

வேலையில்லை சம்பளம் இல்லை.

நமக்கு அதிகாரம் இருந்தும், பலம் இருந்தும் வலிமைமிக்க ஆயுதம் இருந்தும் நாம் பயந்து இருக்கிறோம்?

யானை தன் பலத்தை அறியாதவரை யானைப் பாகன் அதை தெரு தெருவாக வித்தை காட்டி பிச்சை எடுக்க வைப்பான். அதுபோலத்தான் இப்போது நாம் இருக்கும் நிலையும்.

தகவல் பெறும் உரிமை சட்டம் தான் மக்களுக்கு ஆன அதிகாரம். இது சட்டம் நமக்கு தந்த பலமான ஆயுதம். இந்த ஆயுதத்தை இனி நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஆட்சியாளர்கள், அதிகாரிகளை கண்காணிப்பது நமக்கு அவசியமாகிறது.

என்ன என்ன கேள்விகள் கேட்க வேண்டும்? என்பதற்காக, உங்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவே, இந்த தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் கலந்துரையாடல் கூட்டம்.

மேலும் இதில்.

  • பிரெஞ்சு இந்திய ஒப்பந்த்தை எப்படி மத்திய அரசு தவறியது?
  • தற்போதைய நிதிப்பற்றாக்குறை உண்மையான காரணம் என்ன?
  • பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த தொகை சரியாக செலவு செய்யப்படுகிறதா?
  • புதுச்சேரி அரசின் கடன் எவ்வளவு?
  • புதுச்சேரி அரசு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?

இப்படி பலவற்றுக்கு தெளிவு பெற இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில், புதுச்சேரி தகவல் பெறும் உரிமை தனிப் போராளிகள்.

திரு பெ ரகுபதி அவர்களும், திரு கே ஜெயகாந்தன் அவர்களும், கெளரவிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்ற.

திரு ருத்ர குமார் அவர்களும், திரு மோகன சுந்தரம் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களே சமூக ஆர்வலர்களே.

வரும் 23.12.2021 வியாழன் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெறுகிறது.

அவசியம் வருக.

அனுமதி இலவசம்.

குறிப்பு:

  • பிரெஞ்சு இந்திய ஒப்பந்த ஷரத்து க்கள் நகல்.
  • புதுச்சேரி உருவான வரலாறு.
  • புதுச்சேரி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரம்.
  • ஊழலை ஒழிப்பது எப்படி.
  • புதுச்சேரிக்கு தற்போதைய தேவை.
  • தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்க வேண்டிய கேள்விகள்.

இதற்கான சிறு கையேடு குறிப்புகள் இலவசமாக கிடைக்கும்..

அனைவரும் வருக  என அன்புடன் அழைக்கும.

கோ ராமலிங்கம்.
புதுச்சேரி ஆர் டி ஐ சட்ட குழு.
97895 45401.

டாக்டர் எம் செல்வ மணிகண்டன்.

புதுச்சேரி ஆர் டி ஐ சட்ட செயல்பாட்டாளர் குழு.

93624 50382.

அனைவரும் வருக.

 

பதிவு

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »