அன்பார்ந்த நண்பர்களே.

எனது பதிவுகள் அனைத்தையும் தொகுத்து, இறுதியாக பதிவு செய்யும் தொகுப்பு ஆய்வு.

இந்த ஆய்வை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறேன்.

30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1990 க்கு முன்.

30 ஆண்டுகளுக்கு பின், அதாவது 1990 க்கு பின்.

புதுச்சேரி வரலாற்று பதிவு, அப்போது எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?

புதுச்சேரியின் அப்போதைய  வளர்ச்சி.

  • அடிப்படை வசதிகள்.
  • நிதி நிர்வாகம்.
  • வேலை வாய்ப்புகள்.
  • தொழில் வளம்.
  • கல்வி துறை.
  • கூட்டுறவு மேம்பாடு.
  • பாரம்பரிய தொழில்கள்.
  • ஆலைகள்.
  • அரசியலில்.
  • தொலை நோக்கு பார்வை.
  • ஆளும் கட்சி,எதிர்க்கட்சியில் உண்மைத்தன்மை.
  • சட்டசபை நன்றாக செயல் பட்டது.
  • முழுமையான பட்ஜெட், விவாதங்கள், திட்டங்கள், ஒதுக்கீடு.
  • வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு தேர்ந்தெடுத்தல்.
  • ஜிப்மர் பல்கலைக்கழகம்.
  • விமான நிலையம்.
  • தொழிற் பேட்டைகள்.
  • பஞ்சாலைகள் புனரமைப்பு.
  • சர்க்கரை ஆலை நூற்பு ஆலை அமைத்தது.
  • குடிநீர், மின்சாரம், கல்வி ஆகியவற்றில் கூடுதல் கவனம்.
  • மற்ற மாநிலங்களை விட விலை குறைவு.
  • கூட்டுறவை மேம்படுத்தி விலைவாசியை கட்டுக்குள் வைத்தது.

அப்போது, ஆளும் கட்சியில் முக்கியமாக செயல் பட்ட குபேர், சுப்பையா, வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்ரமணிய படையாச்சி, எம் ஓ எச் பாரூக், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சிறப்பாக செயல்பட்ட ரங்கநாதன், குருசாமி, கவி வெ நாராயணசாமி, அன்சாரி துரைசாமி, உத்திரவேலு, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதுச்சேரி எம் பி க்கள். திரு சிவப்பிரகாசம், இமாச்சலப் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசும் போது, புதுச்சேரி மாநிலத் தகுதி தேவை குறித்து விரிவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

அப்போது இருந்து மாநில அந்தஸ்து குறித்து குரல் கொடுத்தும், அதற்கு உயிர் கொடுத்தும், காப்பாற்றி வந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

பஞ்சாலைகளை பாதுகாத்து வருவதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு.

மாநில தகுதி குறித்து மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ், கவனத்தில் கொள்ளாத தற்கு காரணம், அப்போது மத்திய அரசு தந்த தாராள நிதியே காரணம்.

மாநில தகுதி பெற்றால், எங்கு நிதி குறைந்து விடுமோ என்ற பயமும் ஒரு காரணம்.

உள்ளாட்சி தேர்தலை ஏன் காங்கிரஸ் அரசு 1969 ல் இருந்து நடத்தவில்லை? என்ற கேள்வியும்  எழுகிறது.

அதிகாரம் பரவலாக்க விரும்பாததும், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியை தடுக்கவுமே.

அரசு ஊழியர்கள் கூட இந்த மாநில தகுதி விவகாரத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. காரணம், மத்திய அரசு நிதி குறைந்தால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால் மவுனம் ஆகிவிட்டனர்.

போதிய நிதி இருந்ததால், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் சரியாக கடமையாற்றியதால், அனைத்தும் ஒழுங்காக நடந்தன.

தமிழகம் நம்மை பார்த்து பொறாமை படும் அளவுக்கு புதுச்சேரி மாநிலம் இருந்தது.

  • அரசியலிலும் அப்போது பெருமளவு நேர்மை இருந்தது.
  • ஓட்டுக்கு பணம் கொடுத்த தில்லை.
  • பொதுக் கூட்டங்கள் நிறைய நடக்கும்.
  • மக்களுக்கு அரசியல் தெளிவு கிடைக்கும்.
  • பொதுவாக புதுச்சேரி வளர்ச்சி அடைந்து இருந்தது.

அப்போது, கூட்டுறவு, விவசாயம், மீன்பிடி தொழில் சிறப்பாக இருந்தது.

அடிப்படை வசதிகள் நிறைவாக கிடைத்தன.

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு  10 ந் தேதி சம்பளம். புதுச்சேரி பொருளாதாரமே அதில் தான் இருந்தது.

தொழில் பேட்டைகள், தொழிற்சாலைகள் பெருகி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தன.

மது பானக்கடைகளும் அப்போது கட்டுக்குள் இருந்தன.

கள், மற்றும்  சாராயக் கடைகள் மலிவான விலையில், புதுச்சேரி உழைப்பாளி மக்களுக்கு  கிடைக்கும் வருமானத்தில், களைப்பாற வசதியை தந்தன.
இவ்வாறு மக்கள் நலமாக வாழ்ந்தனர்….

இவை 1990 க்கு முன். ஆனால், 1990 க்கு பின்  வளர்ச்சி ஒன்றும் இல்லை.

அரசு ஊழியர்கள், கூட்டுறவு ஊழியர்கள், மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், சுமார் 43576.

அப்போது, ஆட்சியாளர்களும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி

  • புதுச்சேரி மாநில வளர்ச்சி குறித்தும்.
  • புதுச்சேரி மக்கள் நலன் குறித்தும் தொலை நோக்கு பார்வையோடு செயல் பட்டனர்.

புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க முயற்சி நடந்த போது வீரம் செறிந்த போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர்.

தொடரும்..

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »