புதுச்சேரியின் இன்றைய அவல நிலைக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர்கள் இருவர்.
இதை பதிவு செய்வதற்கு வருத்தமாக இருந்தாலும், சமூக கடமையால் இதை சொல்லி தான் தீர வேண்டும்.
சில உண்மைகள் வெளி வந்தால் தான், பாமர மக்களுக்கு விழிப்புணர்வு என்பது வரும்.
புதுச்சேரி வரலாற்றில் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை. தனிக் கணக்கு ஆரம்பித்தது.
இந்த தனிக் கணக்கு ஆரம்பிக்க, அப்போதைய மத்திய நிதியமைச்சரை வைத்து நெருக்கடி கொடுத்தது. நாற்பது ஆண்டுகள் அனுபவம் பெற்ற, மத்திய அரசில் அதிக அதிகாரம் பெற்று மன்மோகன் சிங் அவர்களுக்கு வலது கரமாக திகழ்ந்த நமது முன்னால் முதல்வர், புரட்சி முதல்வர், என்று தன்னை அழைத்து கொண்ட திரு நாராயணசாமி அவர்களே.
மத்திய அரசு எவ்வளவு தான் நிர்பந்தம் கொடுத்தாலும், அஞ்சாத சிங்கமாக எதிர்த்து நின்று புதுச்சேரி மாநிலத்துக்காகவும், மாநில மக்கள் நலனுக்காகவும், உரக்க உரிமை குரல் கொடுத்து, தனிக் கணக்கு ஆரம்பிக்காமல் இருந்திருந்தால். புதுச்சேரி இன்று கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது.
ஆனால்,என்ன நடந்தது?
தனிக் கணக்கு ஆரம்பிக்க நெருக்கடி கொடுத்தவர், கடந்த ஐந்து ஆண்டுகள் ஆண்டு விட்டார். இந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றுமே செய்யாமல் புதிய புரட்சியை ஏற்படுத்தினார்.
தனிக் கணக்கு ஆரம்பித்தவர், இப்போது நமது மாநிலத்தின் மக்கள் முதல்வர், திரு ரங்கசாமி.
மத்தியில் செல்வாக்கு இருந்தும், புதுச்சேரி மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும், ஒன்றும் செய்ய வில்லை. கடந்த ஆட்சியில் ஆண்ட புரட்சி முதல்வர்.. திரு நாராயணசாமி.
மாநிலத்தில் செல்வாக்கு பெற்றும், மாநில வளர்ச்சிக்காகவும், மாநில மக்கள் நலனுக்காக, உரிமைக்குரலை உரக்க எழுப்பாமல் மவுனம் காத்ததின் விளைவு, தனிக் கணக்கு ஆரம்பித்து மத்திய அரசை எதிர்பார்த்து கையேந்த வைத்து விட்டார். தற்போதைய மக்கள் முதல்வர். திரு ரங்கசாமி.
இந்த வரலாற்று பிழைகளை நாம் எடுத்து சொல்லத்தான் வேண்டும்.
இருவருமே செய்த தவறுகளுக்கு நிச்சயமாக பிராயச்சித்தம் தேடித் தான் ஆக வேண்டும்.
இந்த மாபெரும் தவறால், நாம் இழந்தவை.
- புதுச்சேரி மாநில வளர்ச்சி அறிக்கை 2004 ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவால் தயாரிக்கட்டது.
2020 ல் புதுச்சேரி எப்படி இருக்க வேண்டும் என்பது, அந்த திட்டம். ஆனால், அது அப்படியே செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. - கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம். அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், காலதாமதம் படுத்தப்பட்டது.
- சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க , அரசு நிலம் கையகப்படுத்திய தோடு, 850 ஏக்கர் காரைக்கால் மற்றும் புதுச்சேரி அப்படியே கிடப்பில் உள்ளது.
- ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ 1830 கோடியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2017 ல் ஆரம்பிக்கப்பட்டு 2021 ல் முடிக்க வேண்டிய இந்த திட்டம், இதுவரை பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், சர்ச் ஆகியவை மட்டுமே இவர்கள் புண்ணியம் தேட அந்த பணி மட்டுமே முழுமையாக ரூ 12 கோடி செலவில் முடிக்கப்பட்டது. இப்போது 2021 ஆண்டும் முடிய உள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தால், புதுச்சேரி எப்படி இருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.
இந்த தனிக் கணக்கு ஆரம்பித்ததின் விளைவு.
நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டி. இன்னும் பல கொடுமைகள் நடந்தன.
- பஞ்சாலைகள் மூடப்பட்டன.
- பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்ப வில்லை.
- பாரம்பரிய தொழில்களான விவசாயம், நெசவு, மீன் பிடி தொழில், ஆகியன நலிந்து போயின.
- நியாய விலைக் கடைகள் மூடப்பட்டன.
- மக்களுக்கான பல திட்டங்கள் முடக்கப்பட்டன.
- கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் முற்றிலும் சீரழிந்து போயின.
- 5000 குடும்பங்கள் சம்பளம் இன்றி, வேலையின்றி, நடுத்தெருவில் குடும்பத்துடன் பசி பட்டிணியுடன் அலையும் அவலம்.
இதற்கு மேலாவது இதை மிக உணர்ந்து, உரிமைக்குரலை உரக்க எழுப்பி, தாங்கள் செய்த வரலாற்று பிழைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள்.
புதுச்சேரி மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
பின் குறிப்பு:
இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறையை போக்க ரூ 1600 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர்.
ஆக மொத்தம் மத்திய அரசுக்கு தரவேண்டிய கடன் ரூ 11000 கோடியாக உயர்ந்து விடும்.
வரும் வருமானத்தில்,
- அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் பென்ஷனும் வழங்கி விட்டு.
- மீதித் தொகையை வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் கட்டி விட்டு.
- தலையில் முக்காடு போட்டு கோயில் வாசலில் உட்கார்ந்து, பிச்சை எடுக்க வேண்டியதுதான்.
மிக்க நன்றி.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.