பயம், பயம், பயம்.

முதல் பயம், ஆட்சியாளர்களை பார்த்து. முதலில், ஆட்சியாளர்கள் என்பவர்கள் யார்?

  • தேர்தலின் போது நம் வீட்டு கதவை தட்டியவர்கள்.
  • அதைச் செய்வோம், இதைச் செய்வோம், என வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள்.
  • பாசத்தோடு, பண்போடு, அன்போடு, உரையாடியவர்கள்.
  • ஓட்டுக்கு ரூ 1500 வரை வழங்கியவர்கள்.
  • சட்டத்தை சட்டப்படியே  ஏமாற்றியவர்கள்.
  • அவர்களை கண்டு நாம் ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்?
  • அவர்களை பார்த்து அஞ்சி நடுங்க அவர்கள் ஒழுக்க மான தலைவர்களா?
  • பொய் கணக்கு காட்டி தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியவர்கள்தான் அவர்கள்.
  • நமது வரிப் பணத்தில் நமக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் அவர்கள்.
  • இவர்களுக்கு பயப்பட தேவையில்லை.

அடுத்த பயம் அதிகாரிகளை பார்த்து. இந்த அதிகாரிகள் யார்?

  • நமது வரிப் பணத்தில் நமக்காக பணிபுரிய வேண்டியவர்கள்.
  • ஆனால் இவர்களுக்கு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? பயப்படவேண்டியதில்லை.

இறுதி பயம். காவல் துறையை பார்த்து. இவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?

  • ஆட்சியாளர்களும் சரி, அதிகாரிகளும் சரி, உச்ச கட்டத்துக்கு பேயாட்டம் ஆடுவது இவர்களின் துணையோடு தான்.
  • போலீசும், நமது வரிப்பணத்தில், நமக்காகவும்  நமது நலனுக்காகவும்  சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த, பணிக்கு அமர்த்தபட்டவர்களே.
  • ஆனால் இவர்கள், பணத்துக்காக ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், சேவகம் புரிந்து, மக்களை துன்புறுத்தும் போதும் சரி, அடக்குமுறை யின் போதும் சரி, காவல் துறை தனது கடமையை தவறி, அத்துமீறி, அதிகார வர்க்கத்திற்கு சேவகம் புரியும் போதோ விசுவாசம் காட்டும் போதோ, நாமும் அத்துமீறி செயல்படுவதில், எந்த தவறும் இல்லை.
  • நமது வரிப்பணத்தில் இயங்கும் இவர்கள், நமக்காக இயங்கவில்லை என்றால், நாம் எதற்காக வரி செலுத்த வேண்டும்? என்ற கேள்வியும்  எழுகிறது.

நடக்கும் இன்னல்கள் யாருக்கோ தானே, என்று ஒதுங்கி நின்றாலோ, கடந்து சென்றாலோ, நம்மை போல சுயநலவாதிகள் யாரும் இருக்க முடியாது.

உரிமை இழந்து உணர்வை இழந்து, அடிமை வாழ்க்கை தேவையா? பயத்தை விட்டொழியுங்கள், பயம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.

அத்துமீறி அரசோ, அதிகாரிகளோ, காவல் துறையோ, நடக்கும் போது நாமும் அத்துமீறி தான் நடக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு, இது காலத்தின் கட்டாயம், காலம் கடத்தும் ஒவ்வொரு செயல்களும், கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »