fake_politicians

முன்னர் ஒரு காலத்தில், அரசியல் அரசியலாக இருந்தது.
அதில்

  • சேவை இருந்தது.
  • உண்மை இருந்தது.
  • எளிமை இருந்தது.
  • பொதுநலம் இருந்தது.
  • மாநில வளர்ச்சி இருந்தது.
  • மக்கள் நலம் இருந்தது.

ஆனால் இப்போது! இது வியாபார அரசியல்.

  • இதில் உண்மை இல்லை.
  • எளிமை இல்லை.
  • சேவை இல்லை.
  • எல்லாமே சுயநலம் நிறைந்த அரசியல்.

இப்போது நடப்பது இரண்டு விதமான அரசியல்.

  • ஒன்று,  மக்களுக்கானது.
  • மற்றொன்று, அவர்களுக்கானது.

இரண்டையும், அவர்கள் நன்றாக கையாண்டு வருகின்றனர்.

  • இதில் வெற்றியும் காண்கின்றனர்.
  • என்ன இதற்கு நிறைய பணம் தேவை…
  1. மக்களுக்கான அரசியலில்.
  • மக்களை தங்கள் வசப்படுத்த, என்ன என்ன வித்தைகளை காட்ட முடியுமோ அத்தனை வித்தைகளையும் காட்டுகின்றனர்.
  • முதலில் மக்கள் மனதில் இடம் பிடிப்பது.
  • பிறந்த நாள் விழா.
  • மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா.
  • முதியவர்களுக்கு உதவுவது.
  • கோயில் கட்ட கும்பாபிஷேகம் நடத்த.
  • தன் தொகுதியில் மட்டும், சுக துக்க காரியங்களில் பங்கெடுத்து கொள்வது.
  • எந்த கட்சியில் சீட்டு கிடைக்கிறதோ அதில் போட்டியிடுவது.
  • சீட்டுக்கும், ஓட்டுக்கும், கோடிகளில் செலவு செய்வது.
  • தேர்தலில் வெற்றி பெறுவது.
  • ஆட்சி அதிகாரம் வந்த வுடன்.
  • மக்களை தங்களின் கண்காணிப்பில் வைத்து இருப்பது.
  • சலுகைகள் அளிப்பது.

ஆனால், மாநில வளர்ச்சி பற்றியோ, மாநில மக்கள் பற்றியோ தொலை நோக்கு பார்வை இவர்களுக்கு இல்லை.

தன் தொகுதி மக்களை பற்றயே இவர்களுக்கு பெரும் கவலை. காரணம், அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது? என்ற தொலை நோக்கு சிந்தனையாலும், எதிர்கால கவலையால், ஓடி ஓடி உழைப்பது போல பாவனை காட்டி, தொகுதி மக்களை இவர்கள் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

பதவி சுகம் அப்படி அவர்களை சிந்திக்க வைக்கிறது.

பதவி வெறி என்பது.

  • அனைவருக்குமே சிவப்பு அட்டை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  • மாதம் இலவசமாக ஐம்பது கிலோ அரிசி வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  • எங்களுக்கு ஓட்டு மட்டும் போட்டால் போதும். வேலைக்கு கூட போகத் தேவையில்லை. என்ற வாக்குறுதி யினை எதிர்காலத்தில் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  • மிக முக்கியமாக மக்களை சிந்திக்க விடாமல் ஒன்று சேர விடாமல் செய்வது இவர்களது பணி.
  • எங்கும் விளம்பரம். எதிலும் விளம்பரம். இது மக்களுக்கான அரசியல்.

2. இவர்களுக்கான அரசியலை பார்ப்போம்.

  • ரியல் எஸ்டேட் வியாபாரம்.
  • கட்டை பஞ்சாயத்து.
  • ரெளடியிசம்.
  • சட்ட விரோத நடவடிக்கைகள்.
  • கிரிமினல் செயல்கள்.
  • மதுபான கடைகள்.

என, மறுபக்கம் பல கோடிகளை பல தலைமுறைக்கு சேர்த்து வைப்பதோடு, அடுத்த தேர்தலுக்கும், செலவு செய்ய சேமித்து வைக்க ஆரம்பித்து விடுவர்.

முதல் போட்டு முதல் எடுப்பது. இதுதான் இவர்களுக்கான அரசியல் வியாபாரம். பதவி சுகம், இப்படி இவர்களை இப்படி ஆட்டி வைக்கிறது.

இப்படி இரண்டு விதமான அரசியலை செய்து, மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும். அனைவருக்கும் அல்ல.

ஒன்று மட்டும் சொல்லலாம்.

சிவன் சொத்து, குலம் நாசம் என்பார்கள்.

அதுபோல

மக்கள் வரிப் பணத்தை ஏமாற்ற நினைப்பவர்களின், குலம் நிச்சயமாக நாசமாகி விடும்.

இனிமேலாவது திருந்தி வாழ்ந்தால், உங்களுக்கும் நல்லது, உங்கள் பரம்பரை க்கும் நல்லது.

மக்களே!

பலமுறை நம்மை ஏமாற்றும் அவர்களை நாம் ஒரு முறை ஏமாற்றினால் என்ன?

சிந்தியுங்கள், இதற்கான விடையை கண்டுபிடியுங்கள்.

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »