தானியங்கி குரல் ஒலி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 5.

தமிழத்தை  ஆளும் கட்சி, புதுச்சேரியில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற இருந்ததால், அப்போதைய பிரதமரிடம், புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க வற்புறுத்தியது.

மத்திய அரசும் இதை ஒப்புக் கொண்டது. ஆனால், புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒன்று பட்டு நடைபெற்றது.

இதில் பெருமளவு, வியாபாரிகள், தொழிலாளர்கள் இருந்தாலும், அரசு ஊழியர்கள் முழு ஆதரவு அளித்தது மிகப்பெரிய பலம். இதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு, அவர்களது சுயநலமும் ஒரு காரணம்.

எப்படியோ இணைப்பு எதிர்ப்பு. போராட்டம், மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
மத்திய அரசு தனது முடிவை கை விட்டாலும், மறு பக்கம் நமக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்தது.
ஆம். ஏற்கனவே 100 சதவீத மானியத்தில் இருந்து, 10 சதவீதம் குறைத்து, 90 சதவீதம் வழங்கிய மத்திய அரசு, அதை மேலும், 20 சதவீதம் குறைத்து, 70 சதவீதமாக ஆக்கியது.

இப்போது இருக்கும் இந்த விழிப்புணர்வு, அப்போது யாருக்கும் இல்லை.

இணைப்பு எதிர்ப்பு போராட்ட வெற்றியில் வந்த, பேராபத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்த 70 சதவீத மானியத்தில் கூட, ஓரளவு புதுச்சேரி வளர்ச்சி பாதையை நோக்கி நடை போட்டு வந்தது.

அடிக்கடி தேர்தல் நேரங்களில், மாநில தகுதி பற்றியும், பஞ்சாயத்து தேர்தல் பற்றியும் பரபரப்பாக பேசப்படும்.

தேர்தல் முடிந்த பிறகு, மூட்டை கட்டி பரனில் போட்டு விடுவர்.

மாநில உரிமை பற்றி பேச எவரும் இல்லை.

2004 ல் சுணாமி வந்தது.

மத்திய அரசின் ரூ 250 கோடி நிதியும் வந்தது.

இது நமது ஆட்சியாளர்களுக்கு காமதேனுவாக அமைந்தது. சுனாமி பணமாக மாறி விட, மத்திய அரசு விளக்கம் கேட்டது.

புதுச்சேரியின் நல்ல காலம், அப்போது பொருளாதார பேராசிரியர், மு. ராமதாஸ் அவர்கள், பாராளுமன்றத்துக்கு எம் பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

அதிலிருந்து மாநில தகுதி விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

மத்திய அரசு, சுனாமி கணக்கை கேட்டு புதுச்சேரி அரசை நெருக்க, அரசு திக்கு முக்காடியது.

ஒன்று சரியாக கணக்கு கொடுங்கள், இல்லை தனிக் கணக்கு ஆரம்பித்து கொள்ளுங்கள் என்றது.

அந்த நேரம் தப்பித்தால் போதும் என்று, மாநில நலனையும், மாநில வளர்ச்சியையும் கருதாமல், தான் தப்பித்து கொள்ள, மத்திய அரசின் வலையில் தான் சிக்கிய தோடு புதுச்சேரியையும் சிக்க வைத்தனர்.

அதன் விளைவாக மத்திய அரசு 70 சதவீதம் மான்யம் 30 சதவீதமாக மாறியது.

கொடுமையிலும் கொடுமை.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
ஆம் 37 வருடங்களுக்கு பிறகு, திரு. பேராசிரியர். மு. ராமதாஸ், எம் பி அவர்களின் பெரு முயற்சியால்,  உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

மாநில தகுதி விழிப்புணர்வு பிரச்சாரம், அதன் முக்கியத்துவம், பேராசிரியராலும், கம்யூனிஸ்டுகளும்,
பேராசிரியர். திரு, வேல்முருகன் பழனியப்பன், சண்முகம் அவர்கள் அப்போது சிறிய புத்தகத்தையும் வெளியிட்டார்.
ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கை இல்லை.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு, பகுதி 6 க்கு   இங்கே சொடுக்கவும்.

 

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »