தானியங்கி குரல் ஒலி.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 6.

மாநில தகுதி பிரச்சினை என்பது, அவ்வப்போது ஊறுகாய் போல, அரசியல் கட்சிகளால் பயன்படுத்தும் போலி வாக்குறுதியாகும்.

மக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.
.
2011 மற்றும் 2016 ஆட்சியில், புதுச்சேரி நிதிப்பற்றாக்குறையில் தள்ளாடியது.

உதாரணமாக. ஆண்டு இறுதியில்,  இலவச மிக்ஸி கிரைண்டர் வழங்கும் விஷயத்தில், ஒரு துக்ளக் நடவடிக்கை நடந்தது. அமுதசுரபி மூலம் இந்த கொள்முதல் நடந்தது. இதற்காக,

  1. சாராய ஆலை நிறுவனத்திடம் 15 கோடியும்.
  2. பவர் கார்ப்பரேஷனிடம் 30 கோடியும் அமுத சுரபி க்கு வழங்கப்பட்டது.

இன்று அமுதசுரபி நலிவடைய இது ஒரு முக்கிய காரணமாகும்.

2007 ல் தணிக்கணக்கு ஆரம்பித்த போது, நமது தலையில் மத்திய அரசு 2200 கோடி கடனை சுமத்தியது.

அதிலிருந்து கடன் வாங்கி வாங்கி, அதற்கு வட்டி கட்டி கடனும் அதிகமானது. வரும் வரி வருவாயும், சம்பளத்துக்கும், பென்ஷனுக்கும், வாங்கிய கடனுக்கு அசலையும் வட்டியும் திருப்பி செலுத்தவே சரியாக இருந்தது.

புதுச்சேரிக்கு இவ்வளவு செயற்கை நெருக்கடடிகளை கொடுத்த மத்தியில் இருந்த ஆளும் கட்சி,
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க திட்டம் வகுத்தது.

அதன்படி 2016 தேர்தலில், மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது.

  1. சுணாமி ஊழல் விசாரணை நடத்தப்படும்.
  2. 4000 பேருக்கு மேல் கொல்லைப்புற நியமனங்கள், விசாரணை மேற்கொள்ள படும்.
  3. அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும், இலவசமாக, 30 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமையும், வழங்கப்படும்…

இத்துடன், மேலும் 48 வாக்குறுதிகள், இதை நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால், இதில் எதுவுமே நடக்கவில்லை.

இந்த ஜந்து ஆண்டிலும், எந்த வளர்ச்சியும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை இல்லவேயில்லை.

அனைத்து பிரச்னைகளுக்கு காரணம், ஆளுநர் என கையை காட்டி, சொந்தமான அரசியலில் நாற்பது ஆண்டு அனுபவ சொந்தகாரர் தப்பித்து கொண்டு, புதுச்சேரி மாநிலத்தை சீரழிவு பாதைக்கு தள்ளினர்.

கடந்த ஐந்து ஆண்டு சீரழிவுக்கு, ஆளுநர் கிரண்பேடியும், நாராயணசாமியும், எதிர்க்கட்சிகளும்,  ஊடகங்களுமே, உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகளுமே, கூட்டுப் பொறுப்பு.

அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தவர், பல மிரட்டல்களுக்கு பயந்து மவுன விரதம் காத்தார்.
மத்தியில் ஆட்சி மாறியதும்  அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.

கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில், என்ன நடந்தது தெரியுமா?

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 7 க்கு இங்கே சொடுக்கவும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »