தானியங்கி குரல் ஒலி.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 3.
புதுச்சேரிக்கு தொடர்ந்து மாநில தகுதி கோரிக்கை புறக்கணிக்க பட்டது.
டில்லியில் உள்ள சில கட்சிகள், தங்கள் கட்டுப்பாட்டில் புதுச்சேரியை வைத்து இருக்கவே விரும்பின.
புதுச்சேரி அரசு ஊழியர்களும், அப்போது இந்த கோரிக்கையை விரும்பவில்லை.
மத்திய அரசு தரும் நிதி குறைவாக போய் விடும் என்ற அச்சமே.
கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதில் தீவிரம் காட்டினர்.
இதற்கு பிறகு.
- 1972 ல் திரிபுராவும்.
- 1963 ல் நாகாலாந்தும்.
- 1987 ல் கோவாவும்.
- அருனாசலபிரதேசம் மற்றும் மிஜோராமும் மாநில தகுதி பெற்றன.
ஆனால் புதுச்சேரிக்கு மட்டும் கிடைக்க வில்லை.
இதற்கு முக்கிய காரணம். புதுச்சேரியை யாருமே முக்கிய மாநிலமாக கருதவில்லை.
தமிழகம் மற்றும் டில்லியில் உள்ள, கட்சிகளின் ஆளுமையின் கீழ் வந்ததால்தான் இந்த வினை.
புதுச்சேரி மாநில நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே, இந்த கோரிக்கைக்கு உயிர் இருந்து கொண்டு இருக்கிறது.
சரி, யூனியன் பிரதேசங்கள் நிலையை பார்ப்போம்.
- இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன.
- 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
- இப்போது உள்ள 8 யூனியன் பிரதேசங்கள்.
- டில்லி.
- புதுச்சேரி.
- அந்த மான் நிக்கோபார் தீவுகள்.
- சண்டிகார்.
- தாத்ரா நகர்.
- ஹவேலி மற்றும தாமன் தையு.
- ஜம்மு காஷ்மீர் லடாக்.
- லட்சத்தீவுகள்.
யூனியன் பிரதேசங்களில் மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டது, லட்சத்தீவு, 64,473.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம். டில்லி, 1,67,87,941.
- 1963 வரை மத்திய அரசு, புதுவைக்கு, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தபடி. 100 சதவீத மான்யம் வழங்கி வந்தது.
- 1964 ம் சட்ட திருத்தல் படி, 90 சதவீதம் ஆனது.
- புதுச்சேரியில் அப்போது வளர்ச்சி திட்டங்களும், மத்திய அரசின் உதவிகளும் தாராளமாக கிடைத்தன.
- அந்த கால கட்டத்தில், புதுச்சேரி செல்லக் குழந்தை போல, பராமரிக்கப்பட்டது.
- இந்த எட்டு யூனியன் பிரதேசங்களில். டில்லி யும், புதுச்சேரி மட்டுமே சட்டமன்றங்களால் இயங்க கூடியவை.
- தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதசமாகி இதனுடன் இணைந்து, தற்போது மூன்று சட்டமன்ற யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
- மீதி ஐந்தும் சட்ட மன்றம் இல்லாத, யூனியன் பிரதேசங்கள்.
மாநிலங்களில் இருந்து, யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு, பகுதி 4 க்கு இங்கே சொடுக்கவும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.