தானியங்கி குரல் ஒலி.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 2.
இனி அடுத்து, யூனியன் பிரதேசமானது எப்படி?
புதுச்சேரி யூனியன் பிரதேசமான வரலாறு.
இதிலிருந்து நாம் விடுபடாமல் அடிமை மாநிலமாக இருப்பது.
இதில் இருந்து விடுதலை பெறவே இந்த விழிப்புணர்வு.
இந்தியாவில், 1950 களில், மாநிலங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டன.
- ஒன்று. பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சி நடத்தியது.
- இரண்டு. அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்கள்.
- மூன்று. தலைமை ஆணையர்கள் மற்றும் குறு நில மன்னர்கள்.
- நான்கு. துணை நிலை ஆளுநர். இப்படியாக இருந்தது.
1954 ல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
இதில், மொழிவாரிக்காகவும், நிர்வாகம் தனித்தன்மை செயல்படவும்.
- பொருளாதாரம், நிர்வாகம், அரசியல். இவற்றில் நிலைத்த தன்மை கொண்டவை, மாநிலங்களாகவும்,
- பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் நிலையற்ற தன்மை உள்ளவை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன.
1954 ல் புதுச்சேரி இந்திய அரசுடன், ஒப்பந்த அடிப்படையில் இணைந்தது.
1956 ம் இந்திய அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 31 சரத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில்,
- பத்தாவது சரத்தில், புதுச்சேரி நிர்வாக செலவீனங்கள், அரசு ஊழியர் ஓய்வூதியம், ஆகியன முழு மான்யம் வழங்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
- மேலும் 30 வது சரத்தில், இந்த ஒப்பந்தத்தை மீறினாலோ, அதன்படி நடந்து கொள்ளாவிட்டாலோ, நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும், நீதி மன்றம் காலதாமதப் படுத்துமேயானால், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடலாம், என கூறப்பட்டுள்ளது.
- மேலும், பஞ்சாலைகளை சீரமைக்க இந்திய அரசு நிதி உதவிட வேண்டும் எனவும், மாநிலத்தில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால், மக்களிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தப்படி இந்திய அரசு 100 சதவீத மான்யம் அளித்து வந்தது.
- புதுச்சேரியில் இருந்து வெளியேற பிரஞ்சு அரசு, பத்து ஆண்டுகள்கால அவகாசம் கேட்டது.
- இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1962 ம் ஆண்டு வெளியேறியது.
அதன் அடிப்படையில்.
1962 ஆம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசமானது.
இதுதான் புதுச்சேரி யூனியன் பிரதேசமான வரலாறு.
பிறகு, இந்திய அரசு சில யூனியன் பிரதேசங்களுக்கு மாநில தகுதி அளித்தது.
- இமாச்சலப் பிரதேசம், 1971 ம் ஆண்டிலும்.
- மணிப்பூர் 1972 ம் ஆண்டிலும்.
மாநில தகுதி பெற்றது.
அப்போது புதுச்சேரி சட்டமன்றத்தில் இதை மேற்கோள் காட்டி, மாநில தகுதி கேட்டு தீர்மானம் போட்டது.
ஆனால். நடந்தது என்ன?
புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு. பகுதி 3 க்கு இங்கே சொடுக்கவும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம்.ஆத்மி.கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம்.ஆத்மி.கட்சி.
காரைக்கால்.