புதுச்சேரியில் நான்காவதாக இடம் பிடிப்பது… பொதுப் பணித் துறை…
இதன் பணிகள் தான், என்ன…
- சாலைகள் பராமரித்தல்..
- குடிநீர் தொட்டி பராமரித்தல்…
- நீர் ஆதாரத்தை பாதுகாத்தல்….
- கழிவு நீர் அகற்றுதல்…
இவை யாவும் ஒழுங்காக நடக்கிறதா… என்றால்..
எல்லாமே அரை குறைதான்…
இங்கு தினக்கூலி ஊழியர்கள் நியமனம்..
இவர்களுக்கு என்ன வேலை..
ஒரு அரசு வந்தால் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பது..
இன்னொரு அரசு வந்தால் சம்பளத்தை நிறுத்துவது…
இவர்களுக்கு நிலையான வாழ்க்கை இல்லை…
பல மாதங்கள் சம்பளம் இல்லை என்ற நிலை மாறி வருடக் கணக்கில் சென்று விட்டது…
இந்த தினக்கூலிகளை வைத்து கொண்டு உயர் அதிகாரிகள்… தங்கள் சொந்த வேலைகளை பயன்படுத்தி கொள்கின்றனர்….
இவர்களும்… ஏதோ சம்பளம் கிடைத்தால். சரி என இருக்கின்றனர்…
இந்த துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள்…
ஒப்பந்ததாரர்கள்.. ஆட்சியாளர்கள்… கூட்டணியில்…
கமிஷன் பெறுவது மட்டும் அல்ல…
மதிப்பீடு செய்வது வேறு..
பணி முடிக்கும் போது கேட்கப்படும் தொகை வேறு…
இதனால் பல பணிகள் பாதியிலேயே நிற்கின்றன….
பல இடங்களில் இதற்காக பேரம் பேசப்படும்….
பல கட்டிடங்கள் வீணாக கிடக்கின்றன..
இருக்கின்ற கட்டிடங்களை பழுது பார்த்து அதை செயல் படுத்தினாலே போதும்…
ஆனால்…. குடிநீர் தட்டுப்பாடு நீக்குகிறோம் என்ற போர்வையில் எங்கு பார்த்தாலும் குடிநீர் தேக்க தொட்டிகள் தான்…
குண்டும் குழியுமான சாலைகள்….
கழிவு நீர் தேக்கம்…
பாதாள சாக்கடை திட்டம்..
பாதியிலே நிற்பது….
இதில் முக்கிய மாக…
உள்ளாட்சி துறைக்கும்.. பொதுப் பணித் துறைக்கும் நடக்கும் பணிப்போரே.. சாலைகள் சீரமைக்காமல் இருப்பதற்கு காரணம்..
இந்த துறையில் கொழுத்து போனவர்கள்… பொறியாளர்களும்.. ஒப்பந்ததாரர்களும்…
இதை யாருமே கண்டு கொள்வதில்லை….
மேம்பாலங்கள்… கழிவு நீர் அகற்று திட்டம்..
பாதாள சாக்கடை திட்டம்… ஆகியவற்றில் பணிகள் சிந்து பாத் கதை போல தொடர்கிறது….
ஒரு திட்டத்தை செயல்படுத்த ரூ 9 கோடி ஒதுக்கினால்… முடிவடையும் தருவாயில் ரூ 19 கோடி கணக்கு காட்டப்படுகிறது…
கெடு தேதிக்குள் முடிக்க வில்லை… டெண்டரில் குறிப்பிட்ட தொகையை விட அதிக தொகை செலவிடப்படுகிறது… இதனால் நிதி மறுக்க படுகிறது… என்ற பதில் வரும்…
பின்னர் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை கொடுத்து… ஒரு வழியாக அந்த திட்டம் நிறைவேறும்….
இப்படி தான் பல திட்டங்களும்…
திறமையற்ற சில பொறியாளர்களும்… ஒப்பந்த தாரர்களும்.. ஆட்சியாளர்களும்… உயர் அதிகாரிகளும்… சேர்ந்து… செய்யும் கூட்டுக் கொள்ளை இது…
அரசு வேலையை ஒப்பந்தம் ஒருவர் எடுப்பார்… அதை அவர் அவருக்கு கீழ் சப் கான்ட்ராக்ட் விடுவதும் உண்டு….
இப்படி தான் நிதி வீணாகி போகிறது…
தினக்கூலி ஊழியர்கள் விஷயத்தில் உண்மையிலேயே இவர்கள் என்ன பணிகள் செய்கின்றனர்…
இவர்களை பணியில் அமர்த்தியவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது…
30 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும்.. தலா 25 டோக்கன் கொடுத்து பணி நியமனம் செய்த கொடுமையும் இந்த துறையில் தான் நடந்தது…
இதை வைத்து அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு சிந்து பாடிய கதையும் உண்டு…
தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள்… இந்த துறையை முழுமையாக கவனிக்க வேண்டும்…
நாளை… தலைமை செயலகம்… ஊழலில் இங்கு ஒருவகையான ஊழல் நடக்கிறது…
இதை நாளை பார்ப்போம்..
ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி…
ஆம் ஆத்மி கட்சியின் விழிப்புணர்வு பதிவு-6
நாளை வரும்