குரல் பதிவு இணைப்பு:

அன்பார்ந்த நண்பர்களே… சமூக ஆர்வலர்களே.. சமூக அமைப்புகளின் தலைவர்களே…

அனைவருக்கும்… முதலில் வணக்கம்…

கடந்த சில நாட்களாக.. ஆம் ஆத்மி கட்சி. சார்பில். விழிப்புணர்வு பதிவாக…

புதுச்சேரி. பற்றிய முழு தகவல்கள்…

புதுச்சேரி. வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள்.. நடவடிக்கைகள்.. கோரிக்கைகள்…

புதுச்சேரி அரசின் வரவு செலவு தணிக்கை அறிக்கை , அவற்றில் அவை அளித்துள்ள குறைபாடுகள் ஆகியவற்றை விரிவாக விளக்கமாக பதிவு செய்துள்ளேன்…

இதை நிச்சயம் சமூக அக்கறையுள்ள அனைவரும் படித்து இருப்பீர்கள்…

இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

முதலில் ஒன்று பட வேண்டும்…  களத்தில் நேரடியாக இறங்க வேண்டும்…

நெல்லிக்காய் முட்டைகளாக சிதறி இருக்கிறோம்…

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன, அவற்றை ஒன்று படுத்தி…

புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வதே முதன்மையான  பணி…

இந்த வேலையை ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்க இருக்கிறது…

இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளும் சரி ஆட்சியாளர்களும் சரி இனி திருந்தப்போவதில்லை…

ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது என தீர்மானித்துள்ளனர்…
இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பேதமில்லை…

தனி நபர் துதி பாடிகள் அதிகமாகி.. அல்லக்கைகள் ஆதிக்கம் அதிகமாகி…
ஏதோ ஒரு அதிகார போதையில் மக்களை மதிக்காத அரசாக இது செயல்பட்டு வருகிறது…

முதலில் இந்த அவல நிலையை போக்க வேண்டுமானால்.

மக்களிடம் செல்ல வேண்டும்… அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தால். மட்டுமே நாம் நினைக்கும் மாற்றம் நிகழும்…

ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால்… ஆட்சியாளர்களை குறை சொல்லி எந்த பலனும் இல்லை…

அதிகாரிகள் அரசு ஊழியர்கள் தான் முழு பொறுப்பு…

இனி நமது நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை நோக்கியே இருக்க வேண்டும்…

  • சேவை பெறும். உரிமை சட்டம்…
  • தகவல் பெறும் உரிமை சட்டம்..
  • லோக்பால் சட்டம்…
  • உள்ளாட்சி. தேர்தல்..
  • மாநில தகுதி பெறுதல் மற்றும் நிதிப்பற்றாக்குறை போக்குதல்.

இவை ஐந்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

  • முதலில் மாநில நிலவரம் குறித்தும்… தேவைகள்  குறித்தும்… நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநதிகளை ஒன்று திரட்டி கருத்தரங்கம் நடத்துவது
  • இரண்டாவது. புதுச்சேரியில் உள்ள தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் குழுக்களை இணைத்து.. அதிகாரிகளின் தவறுகளின், முறைகேடுகளின்,  தணிக்கை அறிக்கை குறைபாடுகளின், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டி, நடவடிக்கைகள் எடுப்பது.
  • மூன்றாவது, வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்து, டெல்லியில், குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், கட்சி தலைவர்கள், ஆகியோரை சந்தித்து புதுச்சேரி நிலை தொடர்பாக மனு அளிப்பது…

ஆம் ஆத்மி கட்சி, இந்த பணிகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ளும்….

வரும் புத்தாண்டு முதல், புதுச்சேரி க்கும் புதுச்சேரி மக்களுக்கு, நல்ல எதிர்காலத்தை அளிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும்…

நாம் பிரிந்து கிடக்கும் வரை… ஆதிக்க சக்திகள் நம்மை ஆட்டிப் படைக்கும்…

நாம் ஒன்று சேர்ந்து விட்டால்… நமக்கு அடங்கி கிடக்கும்…

புதுச்சேரிக்கு நேர்மையான துணிச்சலான பேராண்மை கொண்ட உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய அமைப்பே இப்போதைய தேவை…

இந்த தேவைக்கான மாற்றத்திற்காக, ஆம் ஆத்மி கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு..
சமூக அக்கறையுள்ள, மாற்றத்தை விரும்ப கூடிய, அமைப்புகளின் ஆதரவு தேவை.

இனி களத்தில் இறங்குவோம்..புத்தாண்டில்.புதிய சக்தியை பெறுவோம்….

இது ஆம் ஆத்மி கட்சியின் விழிப்புணர்வு பதிவு.

நன்றி வணக்கம்..

கோ ராமலிங்கம்..
செயற்குழு உறுப்பினர்
ஆம் ஆத்மி கட்சி..
புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »