புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட நிர்வாகிகள், நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் போட்டுயிடுவது என முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் முப்பெரும் விழா நெல்லிதொப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில செயலாளர் திரு ஆலடி கணேஷன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ரவி சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுத்தம் சுந்தர் ராஜன், சண்முகம், ஜெயராஜன், பூபேஷ் தாமு. கண்ணபிரான், கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக கட்சியை வலுபடுத்துவதற்காக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. பல்வேறு கட்சிகளிலிருந்து பலர் விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். அரசியல் தொடர்பான கருத்தரங்கமும் நிகழ்ச்சியில் நடந்தது.
