மாவட்ட ஆட்சி அமைப்பு

  1. மாவட்ட ஆட்சித்தலைவர்
  2. மாவட்ட ஆட்சித்தலைவர் கடமைகள்
  3. மாவட்ட வருவாய் அலுவலர் ( District Revenue Officer )
  4. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ( District Superintendent of Police (DSP) )
  5. மாவட்ட முதன்மை நீதிபதி ( District Chief Judge )
  6. மாவட்ட வன அலுவலர் ( District Forest Officer )
  7. திட்ட அலுவலர்
  8. மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்கள்
  9. மாவட்ட அலுவலர்கள்
  10. துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர்
  11. பிற மாவட்ட அலுவலர்கள்

மாவட்ட ஆட்சி அமைப்பு

  • இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும்  மாவட்டம் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது.
  • இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்குகின்றன.
  • மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரும், தனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட மாவட்டத்தில் அதிகாரம் செலுத்தி மக்களுக்கான தேவைகளை தன் கடமைகளாக கருதி  செய்யவேண்டும்.

மாவட்ட ஆட்சித்தலைவர்.

  • ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும், மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது.
  • மாவட்ட ஆட்சித்தலைவர், குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
  • இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.
  • மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை  அந்தந்த மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கடமைகள்

  • வாிப்பணம்,
  • நிலம் கையகப்படுத்தல்,
  • நிலவரி  சேகரிப்பு,
  • வருமான வரி பாக்கி,
  • கலால் வரி,
  • பாசன பாக்கிகள் முதலியன சேகரிப்பு,
  • வேளாண் கடன்கள் விநியோகம்,
  • வெள்ளம் போன்ற, பஞ்சங்கள் அல்லது தொற்று நோய்களுக்கும் இயற்கை அழிவுகள் போது  முகாமைத்து கொடுப்பது,
  • கலவரம் அல்லது வெளி ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலின்  போது அமைதிக்காக இடைக்கால சட்டம் போடுவது,
  • சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சிறைகளில் மேற்பார்வையிடுவது,
  • அதைப்போல அனைத்து அரசுத்துரைகளையும் கள் ஆய்வு செய்வது. போன்ற இன்னும் பல வேலைகள் உண்டு.

மாவட்ட வருவாய் அலுவலர் ( District Revenue Officer )

  • மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும்.
  • இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார்.
  • மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போது இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ( District Superintendent of Police (DSP) )

  • மாவட்ட அளவில் மாவட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செயல்படுகிறார்.
  • மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிற்கு இந்தியக் காவல் பணி அதிகாரிகள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட முதன்மை நீதிபதி ( District Chief Judge )

  • மாவட்ட அளவில் நீதித்துறை சார்ந்த பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட முதன்மை நீதிபதி செயல்படுகிறார்.
  • மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பிற்கு சட்டம் பயின்றவர்கள் மாநில  அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட வன அலுவலர் ( District Forest Officer )

  • மாவட்ட அளவில் வனங்கள் மற்றும் காடுகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள் போன்றவைகளின் பாதுகாப்பிற்கான அதிகாரியாக மாவட்ட வன அலுவலர் செயல்படுகிறார்.
  • மாவட்ட வன அலுவலர் பொறுப்பிற்கு இந்தியக் வனப் பணி அதிகாரிகள் மாநில  அரசால் நியமிக்கப்படுகிறார்.

திட்ட அலுவலர்

  • மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள்.
  • இவர் மாவட்ட அளவிலான கிராம வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். இவர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர்கள்

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் பல்வேறு துறையின் கீழ் உதவுவதற்காக குறிப்பிட்ட துறைகளின் நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

  • நேர்முக உதவியாளர் (பொது)
  • நேர்முக உதவியாளர் (நில அளவை)
  • நேர்முக உதவியாளர் (பொது வினியோகம்)
  • நோ்முக உதவியாளர் (விவசாயம்)
  • நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)
  • நேர்முக உதவியாளர் (சத்துணவு)
  • நேர்முக உதவியாளர் (கணக்குகள்)
  • நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்)
  • நேர்முக உதவியாளர் (நகராட்சிகள்)

என்று சில அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவர்கள் துறைகள் சார்பாக உதவுகிறார்கள்

மாவட்ட அலுவலர்கள்

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உதவ மேலும் பல துறைகளின் சார்பில் சில மாவட்ட அலுவலர்களை தமிழக அரசு நியமிக்கிறது.

  • மாவட்ட வழங்கல் அலுவலர்
  • மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
  • மாவட்ட சமூகநல அலுவலர்
  • மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு நல அலுவலர்
  • மாவட்டத் திட்ட அலுவலர் (மகளிர் மேம்பாட்டுத் திட்டம்)
  • மாவட்டத் திட்ட அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்)
  • மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
  • இணை இயக்குநர் (வேளாண்மை)
  • இணை இயக்குநர் (கால்நடைத்துறை)
  • துணை இயக்குநர் (தோட்டக்கலை)
  • உதவி இயக்குனர் ( நில அளவைப் பதிவேடுகள் துறை)
  • உதவி இயக்குனர் ( கிராமப் பஞ்சாயத்துக்கள்)
  • உதவி இயக்குனர் ( நகரப் பஞ்சாயத்துக்கள்)
  • உதவி இயக்குனர் ( தணிக்கைத்துறை)
  • உதவி இயக்குனர் ( புள்ளியியல்)
  • உதவி இயக்குனர் ( மீன்வளம்)
  • உதவி இயக்குனர் ( கனிம வளம்)

துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர்

  • மாவட்டங்களில் வருவாய்த்துறையில் ஓன்றுக்கு மேற்பட்ட வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • இந்த நிர்வாக அமைப்பின் தலைமையாக துணை ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் மற்றவர்களும் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்டாட்சியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தொகுப்பு மற்றும் பதிவு:

Hamid Incharges

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »