மத்திய அரசானது, நமது மாநிலத்துக்கு வளர்ச்சி அடிப்படையில் நிதி உதவி செய்கிறது.
இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இதில் பெருமளவு ஊழலும், முறைகேடுகளும் நடப்பதோடு அண்டை மாநிலத்தவர் இதை முழுமையாக அனுபவிக்கும் நிலை தான் ஏற்படுகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் நமக்கு புரியாமல் இருப்பதால், நாம் கண்டு கொள்வதில்லை. அது போன்ற ஒரு திட்டம் தான் நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போவது.
சுதேசி தர்ஷன் திட்டம்.
இதில் 13 திட்டங்கள் உள்ளன. இதில் மூன்று திட்டங்களுக்கு இந்திய சுற்றுலா துறை புதுச்சேரிக்கு அனுமதி வழங்கியது.
- கடலோர சுற்று – Coastal circuit. ஒதுக்கீடு – ரூ 85.28 கோடி.
- ஆன்மீக சுற்று – Spiritual circuit. ஒதுக்கீடு – ரூ40.68 கோடி.
- பாரம்பரிய சுற்று – Heritage circuit. ஒதுக்கீடு ரூ 66.34 கோடி.
இந்த கடலோர சுற்றுக்கு இந்திய சுற்றுலா துறை புதுச்சேரிக்காக ரூ 85.28 கோடி ஒதுக்கியது. இந்த பணம்,
- அரிக்கமேடு.
- சின்ன வீராம்பட்டினம்.
- துப்புராயப்பேட்டை.
- சுண்ணாம்பாறு.
- பழைய பாரம்பரிய கட்டிடங்களை புனரமைப்பு.
- காந்தி திடல் புனரமைப்பு.
- காலாப்பட்டு.
- மணப் பட்டு.
- நல்லவாடு நரம்பை.
- பிரெஞ்சு குவார்ட்டர்.
- ஒளி விளக்கு ஏனாம்.
- வைசியாள் வீதி தமிழ் பகுதி.
- ஏனாமில், 8 தீவுகள்.
என, இவற்றை புனரமைத்து 2015-2016-ல் திட்டம் இடப்பட்டு, 28.12.2015 நிதி அளிக்கப்பட்டு 36 மாதங்கள் கெடு அளிக்கப்பட்டது. அதாவது 2018 க்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதனை படிப்பவர்கள், தயவுசெய்து இந்த இடங்களில் பார்வையிட்டு இதன் உண்மை நிலையை பதிவிடவும்.
துப்புராயப்பேட்டை யில் உள்ள பாண்டி மெரினா பீச், இப்போது தனியார் ஒப்படைக்க பட்டது. சுமார் 5 கோடி செலவில் கட்டப்பட்ட, 36 வணிக வளாகங்கள் உள்ள இந்த இடம் தனியார் பராமரிப்பில் உள்ளது. கடை வாடகைக்கு ரூ 3 லட்சமும், முன் பணமும், வாடகை ரூ 15000 முதல் 20000 வரை வாங்குவதாக தகவல்கள் வருகின்றன. இந்த நபர் நமது மாநிலத்தை சேர்ந்தவரும் இல்லை. இங்கு பணிபுரிபவர் களும் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களே. நான் சுட்டிக் காட்டியது இந்த ஒரு இடம் தான். மேற்கண்ட இடங்களில் பணி எந்த அளவு நடந்து இருக்கிறது என்பதை தகவல் பெறும் உரிமை ஆர்வலர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த கடலோர சுற்று திட்டத்துக்கு சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்த தொகை ரூ 85.28 கோடி. இதன் பணி 27.12.2018 க்குள் முடித்து இருக்க வேண்டும்.
இதற்கான தகவலை, இந்திய சுற்றுலா துறையிலோ புதுச்சேரி சுற்றுலா துறையிலோ கேட்டு, எங்களுக்கும், மக்களுக்கும் அம்பலப்படுத்தவும். நாங்களும் உண்மை அறியும் குழு அமைத்து இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்கிறோம்….
அடுத்து ஆன்மீக சுற்று.
ஆன்மீக சுற்று திட்டத்துக்கு ரூ 40.68 கோடி, 28.6.2017 ல் அளிக்கப்பட்டது. இதன் கெடு 29 மாதங்கள் மட்டும். இது எந்த எந்த பணிக்காக அளிக்கக்பட்டது என்ற விவரம்.
- திட்டங்கள் செயல்படுத்தும் இடங்கள்.
- திருக்காமேஸ்வரர் கோயில்.
- திருக்காஞ்சி கோயில்.
- திருநள்ளாறு கோயில்.
- திருநள்ளாறு குளம்.
- பத்ரகாளியம்மன் கோயில்.
- டி ஆர் பட்டிணம் கோயில்.
- வெங்கடேஸ்வரா கோயில்.
- வழிப்பாதை கோதாவரி ஆறு.
- ஏனாம் சர்ச்.
- நெல்லித்தோப்பு சர்ச்.
இதற்கு மத்திய சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்த தொகை ரூ 40.68.கோடி. இந்த பணி 27.11.19 அன்று முடிக்கப்பட வேண்டும்.
தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களே, இதனை பார்வையிடவும், தகவலை பெறவும். தகவல் பெரும் உரிமை சட்டம் மூலமாக கேள்வி எழுப்புங்கள்.
அடுத்து பாரம்பரிய சுற்று.
இந்த பணிக்கு ரூ 66.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 28.6.17 ல் ஆரம்பிக்கப்பட்டு 27.10.19 ல் முடிக்க பட வேண்டும். திட்டப்பணிகள் விவரமானது,
- கலாச்சார வளாகம் பழைய சாராய ஆலை இடத்தில்.
- நேரு வீதி பெரிய வாய்க்கால்.
- பிரெஞ்சு குவார்ட்டர்.
- பிரெஞ்சு கிராமம்.
- புராமனோட் பீச் விரிவாக்கம். ஆகியவற்றுக்காக.
மத்திய அரசானது திட்டப் பணிகளுக்காக வருடம் தோறும் ரூ 300 கோடி அளவுக்கு அளிக்கிறது. இதில் பெருமளவு ஊழல் முறைகேடுகள் நடக்கிறது. புதிய திட்டங்கள் வருகின்றன, வரும் போதே வட இந்திய ஆக்கிரமிப்பும் அதிகமாகிறது. புதுச்சேரிக்கு வரும் இந்த பலனை புதுச்சேரி மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஒரு திட்டம் வரும் போது, இதை யார் நடத்து கின்றனர் என்ற முழு விவரமும் அறிந்து வைத்து இருத்தல் நல்லது. பின்னாளில் வருத்தப் படுவது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இப்போது கூட துறைமுக வளாகத்தில் கிடங்குகள் கட்டப்படுகின்றன.இதனை கண்காணிப்பதும் அவசியமானது ஆகும்.
நமது மாநிலம், நமது சொத்துக்கள், அண்டை மாநிலத்தவர் நம்மை தடுத்து, அவர்களை அனுபவிக்க விடக்கூடாது.
இந்த பணிகள் முடிந்து விட்டதா? இதன் தற்போதைய நிலை என்ன? என்பதை முதல் கட்ட பணியாக 21.2.2022 காலை 10 மணிக்கு, இந்த ஆய்வு பணி தொடங்குகிறது. என்னுடன் எனக்கு உதவிபுரிய பத்திரிகை நிருபர் ஒருவரும் வருகிறார்..
காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹெ பகுதிகளில் உள்ளவர்கள், இதில் உள்ள திட்டங்களை ஆய்வு செய்து எங்களுக்கு அனுப்பும்ப்படி கேட்டுகொளிறோம்.
தொகுப்பு:
கோ ராமலிங்கம்.
மக்கள் கண்காணிப்பு குழு.
செல் 97895 45401
பதிவு: