• புதுச்சேரி அரசின் அனைத்துதுறை அலுவலகங்களிலும், குடிமக்கள் சாசனத்தை புதுப்பித்து, பிராந்திய மொழிகள் மீண்டும் வைக்க வேண்டும்.
  • இதன் மூலம் அரசின் திட்டங்கள் வேகமாக மக்களை சென்றடையும்.
  • பொதுமக்களுக்கு சேவை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் சாசன மாகிய ‘குடிமக்கள் சாசனம்’ கொண்டு வரப்பட்டுள்ளது.
  • இதன்படி குறிப்பிட்ட காலக்கெடுக்குள் மக்கள் சேவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  • இது சம்பந்தமான தகவல் பலகை அரசு துறைகளில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
  • இப்பலகையில் மக்கள் எந்தெந்த குறைகளுக்கு யாரை அணுக வேண்டும். யாரிடம் மனு கொடுக்க வேண்டும்.
  • இந்த மனுவுக்கு எவ்வளவு நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் இந்த தகவல் பலகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
  • இவைகள் தவிர எந்தெந்த சான்றிதழ்கள் நகராட்சியால் வழங்கப்படும்.
  • அதற்கான கட்டணம் எவ்வளவு எத்தனை நாளுக்குள் இந்த சான்றி தழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களும் இந்த தகவல் பலகையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
  • இந்த விவரங்களை முழுமையாக அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தி, மக்கள் பார்வையில் படும்படி துறை அலுவலக வாயில்களில் வைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
  • ஆனால், புதுச்சேரி அரசின் பல அலுவலகங்களில் இவற்றை காண முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
  • பல துறைகளில் புதுப்பிக்கப்படாமல் 2005ம் ஆண்டு வைக்கப்பட்ட மக்கள் சாசனமே பரிதாபமாக காட்சியளிக்கிறது.
  • சில அரசு துறைகளில் மக்கள் சாசனம் வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், அறிவிப்புப் பலகைகள் பலவும் சிதிலமாகி விட்டன.
  • இணையமும் மோசம், ஆன்-லைன் சேவையாகிவிட்ட இக்காலத்தில், குடிமக்கள் சாசனத்தை துறைகளில் இணையதளத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.
  • குடிமக்கள் சாசனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும், அந்த பிராந்திய மொழிகளிலும் வெளியிடுவதில்லை.
  • மக்கள் அதை முன்வைத்து கேள்வி எழுப்புகின்றனர் என்பதால், பல இடங்களில் அதிகாரிகளே அவற்றை அகற்றிவிட்டனர்.
  • மறைப்பு வேலைகள்சில அரசு துறைகளில் குடிமக்கள் சாசனத்தை மறைத்து வைத்துள்ளனர்.
  • அலுவலர்கள் தவறு செய்தால், தகவல் பலகையில் உள்ள விவரத்தை வைத்து கேள்வி கேட்க வசதியாக இருக்கும்.
  • ஆனால் யாருக்கும் பயன்தராத வகை யில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது.
  • கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் பல ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், பல அதிகாரிகள் அலுவலகத்திலேயே இருப்பதில்லை.
  • எத்தனை நாட்களுக்குள் பணி முடிக்க வேண்டும் என தெரிவிக்கும் மக்கள் சாசனத்தை வைப்பதில்லை.
  • அரசின் திட்டங்கள் பற்றி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் பார்வைக்கு திட்டங்களை கொண்டு செல்லவே, மக்கள் சாசனம் தயார் செய்து மக்கள் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஆனால், அரசு துறைகளின் மெத்தன போக்கால் திட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறவில்லை.
  • சில துறைகள் மட்டுமே விதிவிலக்காக புதுப்பித்து வருகின்றன.எனவே புதுச்சேரி அரசின்அனைத்து துறை அலுவலங்களிலும், இணையதளங்களிலும் குடிமக்கள் சாசனத்தை புதுப்பித்து பிராந்திய மொழிகள் மீண்டும் வைக்க வேண்டும்.
  • புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டங்கள் உயிர்ப்புடன் வேகமாக மீண்டும் மக்களை சென்றடையும்.
  • அனைத்து துறைகளின் சேவைகள், அதற்கான நாட்கள் அடங்கிய மக்கள் சாசனத்தை புத்தகமாகதயாரிக்க வேண்டும்.
  • அதனை அரசு துறைகள், நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்துகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • இதன் மூலம், நகரம், கிராமத்துக்கு வேண்டிய திட்டங்களை கேட்டு பெறும் வாய்ப்பு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இணையத்திலும், மக்கள் சாசனம் வெளியிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  • இந்த புத்தக வடிவிலான மக்கள் சாசன தகவல் களஞ்சியத்தை புதுச்சேரியின் அனைத்து நுாலங்களிலும் தலா 25 காப்பிகள் வைக்க வேண்டும்.
  • மக்கள் சாசனத்தை மறைத்து, மக்களுக்கான உரிமை என்னவென்றே மறைத்து, கேள்வி கேட்பதை குறைக்கப்பட்டுள்ளது.
  • மக்களிடமிருந்து கேள்விகளே  இல்லாத பொது, “எவன் வீட்டு எழவோ” என்ற நிலைக்கு அரசு ஊழியர்கல்லின் வேளையில் மெத்தனம் ஏற்பட்டுள்ளது.
  • எனவே, உடனே அனைத்து துறைகளும் குடிமக்கள் சாசன விபரத்தை பலகை வடிவில் அலுவலக முன்பு வைக்கவேண்டும்.
  • அல்லது, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அனைத்து அலுவலகத்திலும் குடிமக்கள் சாசன விபரம் வைக்கப்படும்.
  • அத்துடன், மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசு ஊழியர்களையும், லஞ்சம் வாங்கும் விபரத்தையும் அம்பலபடுத்த ஆம் ஆத்மி கட்சி தயங்காது.

தொகுப்பு மற்றும் பதிவு:

Hamid Incharges

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »