இதுவரையில் காரைகாலில்  உள்ள ஒரு சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரி செய்ய சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் என்னும் ஊழியர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. புலி வேகத்தில் வரி வசூல் செய்யும் காரைக்கால் நிர்வாகம், மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஆமை வேகத்தில் கூட சரி செய்துதர தயாராக இல்லை.

காரைக்கால் வாழ் மக்களை,  அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு பணம் வசூல் செய்யும் ATM களாக  மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடமிருந்து வரும்  கோரிக்ககைகளை அலட்சியபடுத்துவதும், நிராகரிப்பதும் வழக்கமாகக்  கொண்டுள்ளனர்.

இதற்கு பழங்கால அரசியல் மேதாவிகள், தனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்று நினைத்துகொண்டு, சரியான நேரத்திற்கு ஊழியம் செய்யாத அரசு ஊழியர்களை கவனிக்காமலும், கண்டிக்காமலும் அவர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்துக்  கெடுத்து, தன்னுடைய அல்லக்கைகளுக்கு மட்டும் துரிதமாக ஊழியம் செய்ய பழக்கிகொண்டனர்.

விளைவு, தனக்கு லோக்கல் அரசியல் வாதியின் செல்வாக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு, சாதாரண மக்கள் கொண்டுவரும் எந்த வேலையையும் தேவை இல்லாமல்  தாமதப்படுத்துவதும் அல்லது நிராகரிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.

ஆனால், இனி அரசு ஊழியர்கள் தங்களின் வேலைகளை நேரத்திற்கும், சரிவரவும் செய்யாமல் இருக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியின், ஸ்பை (கண்காணிப்பு) தயாராகிவிட்டது. அரசு அலுவலகங்களை நோக்கி கேள்விக்கணைகளும், அரசு ஊழியர்களை மீது சட்ட நடவடிக்கைகளும் மென்மேலும் தொடரும்.

காரைகாலில், கையில் எடுக்க இருக்கும் பிரச்சனைகள்:

  1. காரைக்காலில் ரோடுகளில் திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளை காரைக்கால் நிர்வாகம் உடனே கட்டுபடுத்த வேண்டும். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்கனேவே நடந்துள்ளன.
  2. காரைக்கால் கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான நாய்கள் பெருகிவிட்டன, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன.  இதனால் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன, உயிரிழப்புகள் ஏற்படும் முன் காரைக்கால் நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. காரைக்கால் கடற்கரையில் சுமார் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவில், விளக்குகள் சரிவர எரியவில்லை, அங்கே  நிறுவப்பட்ட (Artificial Water Fountain) செயற்கை நீரூற்று மூன்றும் பழுதடைந்துள்ளது. அவற்றை உடனே சரி செய்து, வரும் சுற்றுலா பயணிகளுக்கு சந்தோசம் அளிப்பதாக இருக்கவேண்டும்.
  4. ரோடுகளில் BARI GUARD எனப்படும் இரும்பு தடுப்பு, அங்காங்கே வைத்து, இதனால் பல வாகன விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. தனக்கு விளம்பரம் வேண்டுமென்று பல வணிக நிறுவனங்கள் இலவசமாக காவல்துறைக்கு இதை வழங்குவதால், வழகியதை எங்கயாவது  வைக்க வேண்டுமே என்று கண்ட மேனிக்கு கண்ட இடங்களில் வைத்து மக்கள் உயிரை எடுத்து வருகிறது காவல் துறை. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.
  5. பல தெருக்களில் ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன.  அவற்றை சரி செய்ய வேண்டும்.
  6. காரைக்கால் முழுவதும் கழிவு நீர் ஓட்டம் சரியில்லாமல் கொசுத்தொல்லை அளவுக்கு அதிகமாகி விட்டது. அதை சரி செய்ய காரைக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. சரியாக குப்பை எடுக்காத HANDINHAND நிறுவனம் பெயரில் ஏற்கனேவே புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
  8. புதுச்சேரியில் அனைத்து துறைகளும் மக்களின் குறைகளை நேராக கேட்கவேண்டும், அதற்கான அரசானை உள்ளது. எந்தெந்த துறைகள் எந்த தேதிகளில் குறைகளை தீர்த்து வருகின்றன?

  9. அனைத்து துறைகளுக்கும்  RTI தயாராகி வருகின்றன.

  10. தொடரும்…..

தொகுப்பு மற்றும் பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »