புகார் எண்:APPKKL2021002 Followup-2
அதிகாரிகளின் அலட்சியபோக்கால் அலைகழிப்பு. அதற்காக, சட்ட அறிவிப்பு Legal Notice அனுப்பப்பட்டுள்ளது.
Legal Notice / சட்ட அறிவிப்பு
Our Ref:AAPKKL-2021002-2
Your Ref: SOUTH/2021/589
தேதி: 2-2-2021
அனுப்புனர்:
MMY ஹமீது மரைக்கார்.
46 வள்ளல் சீதகாதி வீதி
காரைக்கால்-609602
பெறுனர்:
இணை இயக்குனர்,
குடிமை பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் விவகாரங்கள் துறை
காமராஜர் வளாகம்
காரைக்கால்-609602
பொருள்:
குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு, மறுப்பு தெருவித்தது தொடர்பாக.
ஐயா.
- எனது குடும்ப அட்டையில் ஒரு பெயர் சேர்த்தல், ஒரு பெயர் நீக்கல் மற்றும் மிகவும் பழுதடைந்த பழைய குடும்ப அட்டையை, புதிதாக வழங்க நான் மனு அளித்தது 15-09-2021.
- சரியாக 3 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டு, நான் வந்து கேட்ட பிறகு, பின் தேடி கண்டுபிடிக்கப்பட்டது.
- அதன் பின், தங்களிடமிருந்து தேவையான ஆவணங்கள் கேட்டு 14-12-21 அனுப்பிய கடிதம், எனக்கு கிடைத்தது 18-12-2021.
- என் குழந்தையை கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிக்கு அனுப்ப விருப்பம் இல்லாததால், பள்ளி சான்றிதழ் தர இயலாது என்ற காரணத்தால், அது தவிர, மற்ற ஆவணங்களை நான் அனுப்பி வைத்தது 21-12-2021.
- அந்த பதிவுத்தபால் தங்களுக்கு கிடைத்தது 24-12-2021 மாலை மணி 4:51 க்கு.
- இது நாள் வரையில் என் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, எனது குடும்ப அட்டையும் எனக்கு திரும்ப தரவில்லை.
புதுவை அரசின் அரசானை எண்: 47809/98/DPAR/SS.I(1) படி, அனைத்து அரசு துறைகளும் மக்களுக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற 10 நாட்கள் மட்டுமே அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இருக்கையில். 5 மாதங்கள் நெருங்கிய நிலையில் எனது வேலையை முடித்துத்தராத, அரசு (அதிகாரிகள்) ஊழியர்கள் மீது நஷ்ட ஈடு கோரவும், சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க கோரவும், சட்டம் எனக்கு உரிமை அளிக்கிறது.
எனவே, இதிலிருந்து 15 நாள் கெடுவிற்குள், என் தேவைவை பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது என் மகனுக்கு காரைகாலில் பிறந்த பதிவு மற்றும் ஆதார் அட்டை இருந்தும், மறுப்பதக்கான காரணங்களை அரசாணைகள் இணைப்புடன் எனக்கு தெரியபடுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் என் கோரிக்கையை அலட்சியபடுத்தும் பட்சத்தில் சம்பசம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது, துறை ரீதியாகவும், நீதிமன்றம் மூலமாகவும் வழக்கு தொடருவேன் என்று இதன் மூலம் பறைசாற்றுகிறேன், இதுவே எனது (Legal Notice) சட்டப்படியான அறிவிப்பாகும்.
இப்படிக்கு
MMY ஹமீது மரைக்கார்
இதற்கு முந்தய பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.